Home
News

FASTag இருக்கா? கவனியுங்க மக்களே ரூல்ஸ் மாறுது.. 1 முறை மட்டும் கட்டணம்.. வருடம் முழுக்க இலவசம்..எப்போது அமல்?

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India) மிக விரைவில் புதிய டோல் பிளாசா கட்டண (Toll Plaza charges) முறைகளை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. NHAI வரும் மே மாதத்தில் புதிய டோல் பிளாசா பாஸ்களை நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வருடாந்திர டோல் பிளாசா பாஸ் மற்றும் லைஃப்டைம் டோல் பிளாசா பாஸ் போன்ற தனி சிறப்பு பாஸ்கள் இனி பயன்பாட்டிற்கு கிடைக்குமென்று தகவல்கள் வெளியாகியுள்ளன. NHAI-ன் அதிகாரப்பூர்வ தகவலின் படி, நாம் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

நெடுஞ்சாலைப் பயணத்தை மென்மையாகவும், மலிவு விலையிலும் மாற்ற, தடையில்லா கட்டணக் கொள்கையை அரசாங்கம் வெளியிட உள்ளது. புதிய கொள்கையை உருவாக்கும் பணியில் NHAI மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது மாதாந்திர டோல் பிளாசா பாஸ்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இவை உள்ளூர் மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சுங்கச்சாவடியை கடக்க நிவாரணம் அளிக்கிறது.

FASTag இருக்கா? கவனியுங்க மக்களே ரூல்ஸ் மாறுது.. வருடம் முழுக்க இலவசம்

FASTag இருக்கா? கவனியுங்க மக்களே ரூல்ஸ் மாறுது.. 1 முறை மட்டும் கட்டணம்.. வருடம் முழுக்க இலவசம்:

இதேபோல், வருடாந்திர டோல் பிளாசா பாஸ் மற்றும் லைஃப்டைம் டோல் பிளாசா பாஸ் போன்றவற்றை அறிமுகம் செய்ய ஆலோசானை செய்யப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். இதன்படி, இப்போது வருடாந்திர டோல் பிளாசா பாஸ் செயல்முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்த செயல்முறை நடைமுறைக்கு வந்தால், வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்படும் வருடாந்திர டோல் பிளாசா பாஸ்களை வெறும் 3,000 ரூபாய்க்கு வாங்கலாம். இது ஒரு வருடத்திற்கான முழுமையான செல்லுபடியகை வழங்கும். இந்த பாஸ் உடன் தேசிய நெடுஞ்சாலைகள், மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் எந்த கட்டணமும் செலுத்தாமல் வாகனங்கள் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது.

புது FASTag வருடாந்திர டோல் பிளாசா பாஸ்:

ஆனால், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை மற்றும் சிறப்பு நெடுஞ்சாலைகளில் பயணிக்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வருடாந்திர பாஸை வாங்க நீங்கள் தனியாக எந்தவொரு புதிய கணக்கையும் திறக்க வேண்டியதில்லை. வருடாந்திர டோல் கட்டணம் நேரடியாக FASTag கணக்கு மூலம் கழிக்கப்படும். FASTag உடன் இணையாக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு மூலம் 1 வருட பாஸிற்கான கட்டணத்தை செலுத்தி நீங்கள் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இதேபோல், 30,000 ரூபாய் விலையில் NHAI ஒரு லைஃப்டைம் டோல் பிளாசா பாஸ் செயல்முறையை அறிமுகம் செய்யும் என்று பேசப்பட்டு வந்தது. இது 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தனியார் சலுகையாளர்கள் மற்றும் வங்கிகளின் ஆட்சேபனைகள் மற்றும் மாநிலங்கள் முழுவதும் மாறுபட்ட வாகன வயது விதிகள் காரணமாக லைஃப்டைம் டோல் பிளாசா பாஸ்கல் நடைமுறைக்கு வராது என்று கூறப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் புதிய தடையில்லா கட்டணக் கொள்கை அமலுக்கு வர வாய்ப்பு:

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் சுங்கச்சாவடிகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண, பயணிகளுக்கு 50 சதவீதம் வரை கட்டணத்தை குறைக்கக்கூடிய புதிய தடையில்லா கட்டணக் கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. புதிய முறையானது சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு பதிலாக ஒரு கிலோமீட்டருக்கு கட்டணம் வசூலிக்கும் முறையாக செயல்படும் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக, ஒரு கார் ஒவ்வொரு 100 கிலோமீட்டர் பயணத்திற்கும் சுமார் 50 ரூபாய் செலுத்த வேண்டும் என்று இந்த விதி பரிந்துரைக்கிறது. இந்த புதிய விதிமுறை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்பதனால், நாம் காத்திருப்பது மட்டுமே இப்போதைக்கு சிறப்பானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
NHAI Announced New FASTag Rules Buy Annual Pass For Rs 3000 and Travel Free On Highways For 1 Year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X