அரசுடன் இணைந்து கொரோனா பணி- தனிநபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆன்லைன் விண்ணப்பம்!

|

கோவிட்-19 தொற்று நிவாரணப் பணிகளில் ஈடுபட விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது
https://ucc.uhcitp.in/ngoregistration- என்ற தளத்தில் தங்களை பதிவு செய்து மாநில அரசுடன் இணைந்து பணியாற்றலாம்.

நிவாரணப் பணி ஆன்லைன் விண்ணப்பம்

நிவாரணப் பணி ஆன்லைன் விண்ணப்பம்

கோவிட்-19 தொற்று நிவாரணப் பணிகளில் ஈடுபட விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது
https://ucc.uhcitp.in/ngoregistration- என்ற தளத்தில் தங்களை பதிவு செய்து மாநில அரசுடன் இணைந்து பணியாற்றலாம். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சுகாதார மிஷன் இயக்குநரகத்தில் உள்ள வார் ரூம் மாநில அளவிலான பணிகளை ஒருங்கிணைக்கிறது. மேலும் இந்த ஒருங்கிணைந்த கட்டளை மையம் பேஸ்புக் பக்கம் www.facebook.com/tnNGOcoordination/. தொகுக்கிறது. மேலும் ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை 8754491300 அல்லது tnngocoordination@gmail.com என்பதில் தொடர்பு கொள்ளலாம்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைகிறது. டெல்லியில் ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை தற்போது குறைவாகவே உள்ளது. அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலமாக கொரோனா தொற்று மூன்றாம் அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு உறுதி

கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில்., முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களில் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மைதான். அதனாலதான், கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமா 2000 ரூபாயைக் கொடுத்துள்ளோம். விரைவில் அடுத்த 2000 ரூபாயைக் கொடுக்கப் போகிறோம். இதனை பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூட பாராட்டியுள்ளார்.

ஊரடங்கை நீட்டிக்க முடியாது

ஊரடங்கை நீட்டிக்க முடியாது

இருந்தாலும் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த மூன்று வார காலத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. நிகழ்காலச் சோகங்களில் இருந்து மீண்டு, எதிர்காலப் புத்துணர்வை தமிழக மக்கள் அனைவரும் பெற்றாக வேண்டும்! கொரோனா தொற்றை வெல்வோம், நமக்கான வளம் மிகுந்த தமிழகத்தை அமைப்போம்! என குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு

தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு

தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள்., தங்களது பணிக்கால அனுபவம், அறிவு, திறமை என அனைத்தையும் பயன்படுத்தி கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலக் கட்டத்தில் மக்கள் தேவையான காய்கறிகள், பழ வகைகள், பால் போன்ற அத்தியாவசிய தேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரிய தொற்று பாதிப்பு

அரிய தொற்று பாதிப்பு

மேலும் மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) எனும் அரிய தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிர் பிழைக்கும் சிலருக்கு ஒரு கண் அகற்றப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் மிகவும் அரிதாக உண்டாகும் இந்த தொற்று பாதிப்பானது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஆயிரக் கணக்கானோருக்கு சமீப மாதங்களாக இந்தியாவில் உண்டாகி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த தொற்று வருவதாக கூறப்படுகிறது எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

Best Mobiles in India

English summary
NGO's, Individuals Now can Join with State Government in Covid-19 Relief Work: Online Registration

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X