இனிமே Jio ரீசார்ஜ்னா இதுதான்.. 84 நாட்கள் இல்ல.. 98 நாட்கள், டெய்லி 2GB டேட்டா, 5G டேட்டா, SMS, வாய்ஸ் கால்!
3 மாத கால வேலிடிட்டி என்று கூறிவிட்டு.. 1 மாதத்திற்கு 28 நாட்கள் என்கிற கணக்கில், வெறும் 84 நாட்கள் மட்டுமே சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கிவிட்டு.. 90 நாட்களில் மீதமுள்ள 6 நாட்களை விழுங்கிவிடும் திட்டங்களை ரீசார்ஜ் செய்து-செய்து சலித்துவிட்டதா? ஆம் என்றால்.. அடுத்தமுறை உங்களுடைய ஜியோ சிம் கார்டுக்கு ரீசார்ஜ் செய்யும் போது, இந்த திட்டத்தை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளவும்.
பெரும்பாலான ஜியோ (Jio) வாடிக்கையாளர்கள் "எல்லாமே இருக்கணும் ஆனா விலை கம்மியா இருக்கனும்" என்கிற மனநிலையைத்தான் கொண்டுள்ளனர். அதாவது நீண்ட காலத்திற்கு சர்வீஸ் வேலிடிட்டி இருக்க வேண்டும்; டெய்லி டேட்டா கிடைக்க வேண்டும், வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்களில் எந்த கெடுபிடியும் இருக்க கூடாது; அதே சமயம் திட்டத்தின் விலையும் அதிகமாக இருக்க கூடாது.

அப்படியான ஒரு திட்டம் ரிலையன்ஸ் ஜியோவிடம் உள்ளது. அது ரூ.999 மதிப்புள்ள அன்லிமிடெட் ப்ரீபெயிட் பிளான் (Jio Rs,999 Prepaid Plan) ஆகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 98 நாட்கள் ஆகும். அதாவது 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் திட்டங்களை விட 14 நாட்கள் அதிக வேலிடிட்டி உடன் வருகிறது.
டேட்டாவை பொறுத்தவரை, இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, எனவே 98 நாட்களுக்கு கிடைக்கம் மொத்த டேட்டாவின் அளவு 196ஜிபி ஆக இருக்கும். சுவாரசியமாக இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபரையும் வழங்கும். இதன் கீழ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஜியோ சிம் கார்டுகளை பயன்படுத்தும் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 5ஜி டேட்டா கிடைக்கும்
மற்ற நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் வருகிறது. இதனுடன், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இதுதவிர்த்து ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்களும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் கிடைப்பது வெறும் ஜியோ சினிமா சந்தா தான்; ஜியோ சினிமாவின் பிரீமியம் சந்தா கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒருவேளை நீங்கள் நவம்பர் 5 ஆம் தேதிக்குள், உங்களுடைய ஜியோ சிம் கார்ட்டை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால்.. ஜியோ அறிவித்துள்ள தீபாவளி தமாக்கா ஆபரின் கீழ் ரூ.899 திட்டத்தை ரீசார்ஜ் செய்வது புத்திசாலித்தனம். ஏனென்றால், குறிப்பிட்ட இந்த சலுகை காலத்திற்குள் ரூ.899-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.3,350 மதிப்புள்ள நன்மைகள் (வவுச்சர்கள் / கூப்பன்கள்) முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
என்னென்ன வவுச்சர்கள் / கூப்பன்கள் கிடைக்கும்? நவ.5-க்குள் ரூ.899-ஐ ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு.. ஹோட்டல்கள் மற்றும் விமானப் பயணங்களுக்கான ரூ.3000 மதிப்புள்ள ஈஸ்மைட்ரிப்-க்கான (EaseMyTrip) வவுச்சர், ரூ.999 அல்லது அதற்கு மேலான பர்சேஸ்களுக்கு ஏஜியோவின் (Ajio) ரூ.200 மதிப்புள்ள கூப்பன், ரூ.150 மதிப்புள்ள ஸ்விக்கி (Swiggy) வவுச்சர் ஆகியவைகள் கிடைக்கும்.
ரூ.899 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது ட்ரூ அன்லிமிடெட் 5ஜி நன்மைகள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 2 ஜிபி டேட்டா + கூடுதலாக 20 ஜிபி டேட்டா என மொத்தம் 200ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட நன்மைகளை 90 நாட்களுக்கு வழங்குகிறது.
இலவசமாக கிடைத்த வவுச்சர்கள் மற்றும் கூப்பன்களை ரீடீம் செய்வது எப்படி? முதலில் உங்கள் போனில் இருக்கும் மைஜியோ (MyJio) ஆப்பை திறக்கவும். பின்னர் ஆபர்ஸ் (Offers) செக்ஷனுக்கு செல்லவும். இப்போது 'மை வின்னிங்ஸ் (My winnings) என்கிற விருப்பத்தை கிளிக் செய்து திறந்து, நீங்கள் ரிடீம் செய்ய விரும்பும் கூப்பனை கிளிக் செய்யவும். கடைசியாக கூப்பன் கோட்-ஐ காப்பி செய்து, பார்ட்னர் இணையதளத்தை பார்வையிட்டு, பணம் செலுத்தும் நேரத்தில் அதை பயன்படுத்தவும்.


Click it and Unblock the Notifications