இதுதான் WhatsApp-க்கு வந்ததுலேயே உருப்படியான புதிய அம்சம்.. சைலன்ட் ஆக வந்த சூப்பர் Setting!

|

சமீப காலமாக வாட்ஸ்அப்பில் (WhatsApp) அறிமுகமான புதிய அம்சங்களில் இதுதான் உருப்படியான அம்சம் என்று கூறும் அளவிற்கு ஒரு அட்டகாசமான அம்சம் வாட்ஸ்அப் செட்டிங்ஸில் (WhatsApp Settings) நுழைய உள்ளது.

அதென்ன அம்சம்? உருப்படியான அம்சம் என்று புகழ்பாடும் அளவிற்கு அந்த அம்சத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ விவரங்கள்:

மிகவும் பயனுள்ள ஒரு அம்சம்!

மிகவும் பயனுள்ள ஒரு அம்சம்!

யூசர் எக்ஸ்பீரியன்ஸை (User Experience) அதாவது பயனர் அனுபவத்தை மேன்மேலும் மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ், வாட்ஸ்அப் நிறுவனமானது, பல வகையான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, கூடவே பல்வேறு வகையான புதிய அம்சங்களில் பணிபுரிந்தும் வருகிறது.

அதனொரு பகுதியாக மெட்டாவிற்கு (Meta) சொந்தமான இந்த மெசேஜிங் ஆப்பில், கூடிய விரைவில் மிகவும் பயனுள்ள ஒரு புதிய அம்சம் இணைய உள்ளது.

நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?

அதென்ன அம்சம்?

அதென்ன அம்சம்?

தற்போது வரையிலாக, உங்கள் வாட்ஸ்அப் சாட் விண்டோவில் (WhatsApp Chat Window) அல்லது கான்வர்சேஷன் விண்டோவில் (Conversation window) மூன்று வாட்ஸ்அப் சாட்களை மட்டுமே 'பின்' (Pin) செய்து வைக்க முடியும். அப்படித்தானே?

ஆனால் கூடிய விரைவில், அந்த எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்க உள்ளது. அதாவது வாட்ஸ்அப்பிற்கு வரவிருக்கும் அடுத்தடுத்த அப்டேட்களின் வழியாக சாட் விண்டோவில் 5 வாட்ஸ்அப் சாட்களை 'பின்' செய்யும் ஆதரவு நம் அனைவருக்கும் கிடைக்க உள்ளது!

இதனால் என்ன பயன்?

இதனால் என்ன பயன்?

பொதுவாக வாட்ஸ்அப்பில் ஒரு புதிய மெசேஜ் வந்தால், எந்த சாட்டின் (Chat) கீழ் புதிய மெசேஜ்கள் வந்துள்ளதோ, அந்த சாட் தானாகவே சாட் விண்டோவில் மேல் பகுதிக்கு (Top of the Chat Window) வந்துவிடும். இப்படியாக, நீங்கள் எந்தவொரு புதிய மெசேஜையும் நீங்கள் தவறவிட மாட்டீர்கள் என்று வாட்ஸ்அப் நம்புகிறது.

ஆனால் ஒரு சில பயனர்களுக்கு, லேட்டஸ்ட் ஆக வந்த புதிய மெசேஜ்களை விட, குறிப்பிட்ட சில நம்பர்களில் இருந்து வரும் (பழைய மற்றும் புதிய) மெசேஜ்களே முக்கியம். அப்படியானவர்களுக்காக அறிமுகமானது தான் ஒரு வாட்ஸ்அப் சாட்-ஐ 'பின்' செய்து வைக்கும் (Pin WhatsApp Chat) அம்சம்.

இப்படி செய்வதால், புதிய மெசேஜ்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, பின் (PIN) செய்யப்பட்ட குறிப்பிட்ட சாட்களுக்கு, சாட் விண்டோவின் மேல் பக்கத்தில் நிரந்தரமான இடங்கள் வழங்கப்படும். இனிமேல் "அந்த இடம்" 3 சாட்களுக்கு மட்டுமல்ல மொத்தம் 5 சாட்களுக்கு வழங்கப்பட உள்ளது!

பூமியின் கடைசி நொடி இப்படித்தான் இருக்கும்! விஞ்ஞானிகளின் விபரீதமான ஆய்வில் கிடைத்த திகிலூட்டும் ஆதாரம்!பூமியின் கடைசி நொடி இப்படித்தான் இருக்கும்! விஞ்ஞானிகளின் விபரீதமான ஆய்வில் கிடைத்த திகிலூட்டும் ஆதாரம்!

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு, iOS மற்றும் டெஸ்க்டாப்பில் எப்போது அறிமுகமாகும்?

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு, iOS மற்றும் டெஸ்க்டாப்பில் எப்போது அறிமுகமாகும்?

வாட்ஸ்அப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கும் ட்விட்டர் அக்கவுண்ட் ஆன WABetaInfo-வின் கூற்றுப்படி, தற்போது வரையிலாக இந்த அம்சம் வளர்ச்சி நிலையில் தான் உள்ளது.

அதாவது சாட் விண்டோவில் 5 வாட்ஸ்அப் சாட்களை 'பின்' செய்து வைக்கும் இந்த அம்சமானது - ஆண்ட்ராய்டு (Android), ஐஓஎஸ் (iOS) மற்றும் டெஸ்க்டாப்பிற்கு (Desktop version) வந்து சேர இன்னும் சிறிது காலம் ஆகலாம்!

இந்த அம்சம், எப்போது வந்தாலும் அது மிகவும் பயனுள்ள ஒரு அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் தினமும் வாட்ஸ்அப் சாட்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால், அதிக சாட்களை 'பின்' செய்வதற்கான விருப்பம், வாட்ஸ்அப்பை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பயன்படுத்த அனுமதிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

பழைய போன்களுக்கு குட்பை சொல்லும் வாட்ஸ்அப்!

பழைய போன்களுக்கு குட்பை சொல்லும் வாட்ஸ்அப்!


புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் மறுகையில், வாட்ஸ்அப் - சில பழைய ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்களிடம் இருந்து விடையும் பெறுகிறது. அதாவது டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின்னர் சில பழைய ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் - ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung), எல்ஜி (LG) மற்றும் பிற பிராண்டின் கீழ் அறிமுகமான 49 ஸ்மார்ட்போன்கள் / ஐபோன்கள் ஆனது வாட்ஸ்அப்பிற்கான ஆதரவை இழக்க உள்ளன.

ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!

எந்தெந்த போன்கள் வாட்ஸ்அப் ஆதரவை இழக்க உள்ளன?

எந்தெந்த போன்கள் வாட்ஸ்அப் ஆதரவை இழக்க உள்ளன?

வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவு பக்கத்தின் (Support Page) படி, ஆண்ட்ராய்டு ஓஎஸ் வெர்ஷன் 4.1-ஐ கொண்டு இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும், ஐஓஎஸ் 12 மற்றும் அதற்கு மேலான ஓஎஸ்-ஐ கொண்டு இயங்கும் ஐபோன்களும் வாட்ஸ்அப்பிற்கான ஆதரவை தொடர்ந்து பெறும்.

மேற்குறிப்பிட்ட வெர்ஷன்களுக்கு கீழே இயங்கும் ஸ்மார்ட்போன்கள் / ஐபோன்கள் ஆனது வாட்ஸ்அப்பிற்கான ஆதரவை இழக்கும்.

ஜியோபோன்களை (JioPhone) பொறுத்தவரை, ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 உட்பட KaiOS 2.5 கொண்டு இயங்கும் மாடல்கள் வாட்ஸ்அப்பை ஆதரிக்கும்.

Best Mobiles in India

English summary
Next Level User Experience in WhatsApp A New Feature Allows You To Pin 5 Chats On Top

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X