Home
News

தீபாவளி SALE-ஐ இப்போவே தொடங்கிய Flipkart.. வச்சி செய்யும் மொபைல் ஆஃபர்.. iPhone முதல் Redmi வரை.. இதோ லிஸ்ட்!

அடுத்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை எப்போது என்று நீங்கள் ஆவலோடு காத்திருந்தால்.. புதிய ஸ்மார்ட்போன் அல்லது புதிய ஸ்மார்ட் வாட்ச், இயர்பட்ஸ், லேப்டாப், ஸ்மார்ட் டிவி என ஏதாவது ஒரு பொருளை வாங்கிப்போட்டு வேண்டும் என்கிற திட்டம் உங்களிடம் இருந்தால்.. தயார் ஆகிக்கொள்ளவும்!

பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) அதன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை கூடிய விரைவில் நடத்தவுள்ளது. இதுகுறித்த சரியான தேதிகள் இன்னும் வெளியிடவில்லை என்றாலும் கூட, என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது.. என்னென்ன தயாரிப்புகள் மீது.. எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? என்கிற விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி SALE-ஐ இப்போவே தொடங்கிய Flipkart!

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும்? ஐபோன் 13 (iPhone 13), சாம்சங் கேலக்ஸி எஃப்54 (Samsung Galaxy F54), பிக்சல் 7ஏ (Pixel 7a), போக்கோ எக்ஸ்5 ப்ரோ (Poco X5 Pro), சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ( Samsung Galaxy S23 Ultra)

பிக்சல் 7 ப்ரோ (Pixel 7 Pro), சாம்சங் கேலக்ஸி ஏ34 (Samsung Galaxy A34), ரெட்மி நோட் 12 ப்ரோ (Redmi Note 12 Pro), போக்கோ எப்5 (Poco F5), சாம்சங் கேலக்ஸி ஏ23 (Samsung Galaxy A23), ஒப்போ ரெனோ 10 (Oppo Reno 10).

மோட்டோரோலா எட்ஜ் (Motorola Edge), மோட்டோரோலா ஜி54 (Motorola G54), சாம்சங் கேலக்ஸி எப்13 (Samsung Galaxy F13) மற்றும் பல பிரபலமான நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆனது தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படும் என்று பிளிப்கார்ட் வலைத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.

வழக்கம் போல இந்த விற்பனையும் ஸ்மார்ட்போன்கள் மீது பெரும் தள்ளுபடியை வழங்கும். பண்டிகை காலங்களில் சிறந்த எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் டீல்களை வழங்குவதை பிளிப்கார்ட் வலைத்தளம் வழக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பிளிப்கார்ட்டில் பெரிய அளவிலான சிறப்பு விற்பனை தொடங்கிவிடும்.

பிளிப்கார்ட்டில் உள்ள ஒரு டீஸர் பக்கம் ஐபோன்களின் மீது நல்ல டீல்கள் கிடைக்கும் என்பதை காட்டுகிறது, அந்த பட்டியலில் ஐபோன் 14 மாடல் இல்லை என்றாலும் கூட ஐபோன் 13 மாடல் உள்ளது. இருப்பினும் கண்டிப்பாக ஐபோன் 14 மீதும் சில தள்ளுபடிகள் கிடைக்கும் என்று நிச்சயம் கூட முடியும், ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்கள் அறிமுகமானதும் பழைய ஐபோன்களில் நல்ல தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

இது சரியாக எந்த அளவிலான தள்ளுபடியை பெறும் என்கிற விவரங்கள் தற்போது தெரியவில்லை. இது குறித்த விவரங்கள் அடுத்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆனது எப்போது நடக்கும் என்கிற தேதிகள் அறிவிக்கப்படும் போது வெளிப்படுத்தப்படலாம். இன்னும் சொல்ல போனால் சரியான தள்ளுபடி விலை விவரங்கள் அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிளிப்கார்ட் விற்பனையின் போது ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமே தள்ளுபடி கிடைக்குமா? இல்லவே இல்லை! விரைவில் தொடங்கவுள்ள பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 50 முதல் 80 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என்றும் பிளிப்கார்ட் வளைத்தளம் உறுதியளித்துள்ளது.

மேலும் பட்டியலிடப்பட்டுள்ளபடி, இயர்போன்களின் விலை ரூ.499 முதலும் மற்றும் கீபோர்டுகலின் விலை ரூ.99 முதலும் தொடங்கும். வைட்ஸ்க்ரீன் மானிட்டர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையும், பிரிண்டர்களுக்கு 60 சதவீதம் வரையிலான தள்ளுபடி கிடைக்கும். ஸ்மார்ட் டிவி மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும், 4கே மாடல்கள் மீது 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Next Flipkart Sale Confirmed 2023 Diwali Big Billion Days Sale Starts Soon Best Mobile Deals Waiting
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X