சபாஷ் சரியான போட்டி: அமேசான் குறித்த அதே தினத்தில் பிளிப்கார்ட் அதிரடி!

|

பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் சேவிங் தின அடுத்த விற்பனையானது பல்வேறு சலுகைகளோடு இந்த வாரம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் சேவிங் தின விற்பனை

பிக் சேவிங் தின விற்பனை

பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் சேவிங் தின அடுத்த விற்பனை இந்த வாரம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்த விற்பனை தினத்தில் பல்வேறு பொருட்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் நிறுவனம்

இ-காமர்ஸ் நிறுவனம்

இ-காமர்ஸ் நிறுவனமான சிட்டி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய வங்கிகளின் கார்டுகள் மூலம் வாங்கும்போது 10 சதவீத உடனடி தள்ளுபடிகள் கிடைக்கிறது.

ஐபோன் எக்ஸ் ஆர், ஓப்போ ரெனோ 2 எஃப்

ஐபோன் எக்ஸ் ஆர், ஓப்போ ரெனோ 2 எஃப்

இந்த விற்பனை தினத்தில் ஐபோன் எக்ஸ் ஆர், ஓப்போ ரெனோ 2 எஃப், ஐபோன் எஸ்இ மற்றும் ரெட்மி கே 20 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. மோட்டோரோலா ரேசர் உள்ளிட்ட உயர்ரக ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.

அதிரடி விலைக்குறைப்பு

அதிரடி விலைக்குறைப்பு

ஐபோன் எக்ஸ்ஆர் ரூ.49,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தள்ளுபடி மூலம் ரூ.44,999-க்கு பிளிப்கார்ட்ட் பிக் சேவிங் தின விற்பனையில் விற்கப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் எக்ஸ்ஆர் பேஸ் 64 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.68,300 ஆகும், இந்த விற்பனை தினத்தில் ரூ.64,900-க்கு விற்கப்படுகிறது.

பிளிப்கார்ட்டில் தள்ளுபடிகள்

பிளிப்கார்ட்டில் தள்ளுபடிகள்

அறிவிப்பு சலுகையோடு வங்கி தள்ளுபடி, பரிவர்த்தனை தள்ளுபடி மற்றும் பல ஒப்பந்தங்களின் அடிப்படையில் பிளிப்கார்ட்டில் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

சந்திரயான் 2: பிரக்யான் ரோவரைப் பற்றிய வந்த புதிய தகவல்.!சந்திரயான் 2: பிரக்யான் ரோவரைப் பற்றிய வந்த புதிய தகவல்.!

ஓப்போ ரெனோ 2 எஃப் இந்திய விலை

ஓப்போ ரெனோ 2 எஃப் இந்திய விலை

ஓப்போ ரெனோ 2 எஃப் இந்திய விலை ரூ.23,490 ஆக இருந்த நிலையில் ரூ.17,990-க்கு விற்கப்படுதாக தெரிவிக்கப்படுகிறது. ஐபோன் எஸ்இ 2020 விலை இந்தியாவில் ரூ.42,500-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.36,999-க்கு விற்கப்படுகிறது. அதோடு ரெட்மி கே 20 ப்ரோ 6 ஜிபி ரேம் ப்ளஸ் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.26,999-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.22,999-க்கு விற்கப்படுகிறது.

மோட்டோரோலா ரேஸர்

மோட்டோரோலா ரேஸர்

மோட்டோரோலா ரேஸர் (2019)-க்கு அட்டகாச தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளதோடு ஓப்போ ரெனோ 10 எக்ஸ் ஜூம், ஐபோன் 7 ப்ளஸ், ஐக்யூ 3 போன்ற பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரைம் தின விற்பனை

பிரைம் தின விற்பனை

அமேசான் அதன் பிரைம் வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வருடந்தோறும் பிரைம் தின விற்பனையை வழங்கும். இருப்பினும் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த வருடாந்திர பிரைம் தின விற்பனையை ரத்து செய்யக்கூடும் என சில வதந்திகள் வெளியாகின.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவில் 2020 ஆம் ஆண்டுக்கான பிரைம் தின விற்பனை தேதியை அறிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விவரங்களை பார்க்கலாம்.

ஆகஸ்ட் 6 முதல் 7 வரை

ஆகஸ்ட் 6 முதல் 7 வரை

வழக்கம்போல் அமேசான் நிறுவனம் இந்த வருடமும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களுக்கு அட்டகாச சலுகைகளை அறிவித்திருக்கிறது. இந்த விற்பனையானது ஆகஸ்ட் 6 முதல் 7 வரை நடக்கிறது.

Best Mobiles in India

English summary
Next Flipkart Big Saving Days Sale announced on August 6 Offer and Discount Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X