வட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்

|

ஹாங்காங் நாட்டை சேர்ந்த நெக்ஸ்ட்கோ நிறுவனம் இந்திய தலைநகர் டெல்லியில் தனது அவிட்டா பிராண்ட் ஷோரூம் ஒன்றை திறக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் ஷோருமான இதில் இந்திய மக்களுக்கு தேவையான அனைத்து டெக்னாலஜி பொருட்களும் கிடைக்கும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவம் ஏற்படும் என்றும் தெரிகிறது. இந்த ஷோரூம் மூலம் வாடிக்கையாளர்கள் இனிமேல் அவிட்டா லேப்டாப்புகள், ஸ்மார்ட் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் நெக்ஸ்ட்கோ லேப்டாப்புக்களை இனி நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்

வட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்

இந்த ஷோரூமில் அவிட்டாவின் புதிய தயாரிப்புகளான லிபர் சீரீஸ் லேப்டாப்புக்ள் கிடைக்கும். அவை 13.3 இன்ச் மற்றும் 14 இன்ச் அளவுகளில் மெல்லியதாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும். மேலும் மேகஸ் 12.2 இன்ச் டூ இன் ஒன் லேட்பாப்புக்கள் அலுவலக பயன்பாட்டிற்கும், இமாகோ ஸ்மார்ட் மிர்ரர் சீரீஸ் மற்றும் வீட்டிற்கு தேவையான மாடூஸ் ஸ்மார்ட் ஸ்கேல் மற்றும் யூபிக் மவுஸ் ஆகியவைகளும் கிடைக்கும்


அவிட்டா பொருட்களை பயன்படுத்துவதில் கிடைக்கும் அனுபவங்கள்: அவிட்டாவின் லிபர் சீரீஸ் லேப்டாப்புகளும் அதனுடன் வரும் ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அதற்குரிய பொருட்களையும் பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. வாடிக்கையாளர்கள் இந்த லேப்டாப்புகளை உபயோகித்து பார்த்து, இந்த தலைமுறையின் தேவையை உணர்ந்து பின்னர் தங்களுடைய பயன்பாட்டிற்கு வாங்கி கொள்ளலாம்.

மேலும் இந்த ஷோரூம், லேப்டாப்புகளை வாங்குவதற்கு முன்னரே பயன்படுத்தி பார்க்க அனுமதிப்பதால் சோதனை செய்து பார்த்து வாங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது. மெல்லிய, எடை குறைவான அம்சங்கள், பிங்கர் பிரிண்ட் வசதி, விண்டோஸ் ஹலோ வசதி, மின்னல் வேக இயக்கம், எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ், மற்றும் பவர்புல் பேட்டரியுடன் ஃபுல் ஹெச்டி பார்டர் இல்லாத டிஸ்ப்ளே ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள் ஆகும்

வட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்

இந்த புதிய வாய்ப்பினை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் நெக்ஸ்டோவில் தயாரிப்புகளில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து இந்த பொருட்களை வாங்கி நல்ல அனுபவத்தை உணரலாம். எனவே நீங்கள் வடக்கு டெல்ல்லியில் இருந்தால் நெக்ஸ்டோவின் இந்த ஷோரூம் சென்று ஆச்சரியத்தக்க அனுபவங்களை பெற ஒரு வாய்ப்பு உள்ளது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nexstgo forays into North India with first ever Avita Brand Store in Delhi : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X