இரவில் குளிக்க சென்ற மணமகள்.. திரும்பி வரவில்லை.. பாத்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்ற குடும்பம்.. அதிர்ந்தது..
உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், மீர் காஞ்சி பகுதியில் அமைந்துள்ள தனது மாமனார் வீட்டில் திருமணமாகி வெறும் 5 நாளே ஆன புதுமணப்பெண் (Newly married woman) இரவு குளிக்க சென்றிருக்கிறார். குளிக்க சென்ற புதுமணப்பெண் பல மணிநேரம் ஆன பிறகும் வெளியில் வராமல் இருந்தது குடும்பத்தினருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. புதுமணப்பெண்ணின் கணவன் பாத்ரூம் கதவருகில் நின்று மணப்பெண்ணை பெயர் சொல்லி அழைத்தபோதும், உள்ளே இருந்து எந்தவித பதிலும் வராமல் இருந்திருக்கிறது. உடனே குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பாத்ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருந்திருக்கின்றனர். அங்கு அப்பெண் உயிர் இல்லாமல் சடலமாக கிடைந்திருக்கிறார்.
உத்தரபிரதேசத்தின், பிபல்சானா சவுதரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆணுடன், அப்பகுதியில் வசிக்கும் பெண்ணிற்கும் சமீபத்தில் தான் திருமணமாகியுள்ளது. திருமணம் முடிந்து வெறும் ஐந்து நாட்களே ஆகியுள்ள நிலையில், யாரும் எதிர்பார்த்திடாத இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுமணப்பெண் தனது மாமனார் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். எப்போதும் போல, இரவு நேரத்தில் குளிக்க சென்றிருக்கிறார். குளிக்க சென்ற புதுமணப்பெண் பல நேரம் ஆகியும் பாத்ரூமில் இருந்து வெளிவரவில்லை.

இரவில் குளிக்க சென்ற மணமகள்.. திரும்பி வெளியே வரவே இல்லை:
சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ஒவ்வொருவராக பாத்ரூம் முன் நின்று என்னாச்சு? உள்ளே இன்னும் என்ன தான் செய்கிறாய்? என்று கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்திருக்கின்றனர். நீண்ட நேரம் ஆகியும் எந்தவித சத்தமும் இல்லாமல், பதிலும் இல்லாமல் இருந்ததை உணர்ந்த குடும்பத்தினர், பாத்ரூம் கதவை உடைக்க முடிவு செய்துள்ளனர். கதவை உடைத்து உள்ளே சென்ற பொழுது, புதுமணப்பெண் சுயநினைவில்லாமல் தரையில் படுத்தப்படுகையாக கிடந்திருக்கிறார்.
பாத்ரூம் அறையில் எதோ வெடித்து சிதறி இருப்பதை குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர். வெடித்து சிதறிய பொருள் என்னவென்று ஆராய்ந்த பொழுது, அது அந்த வீட்டின் பாத்ரூமில் பயன்படுத்தப்பட்ட வாட்டர் கீஸர் (water heater or geyser) என்பது தெரிவந்துள்ளது. குளிர் காலத்தில் வழக்கம் போல வாட்டர் ஹீட்டர் (geyser) மூலம் நீரை சூடாக்கி அந்த பெண் குளிக்க சென்றிருக்கிறார். ஆனால், அந்த வாட்டர் ஹீட்டரில் ஏற்பட்ட எதோ ஒரு கோளாறு காரணமாக கீஸர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கதவை உடைத்து உள்ளே சென்ற குடும்பம்.. சுயநினைவில்லாமல் கிடந்த புதுமணப்பெண்:
சுயநினைவில்லாமல் கிடந்த புதுமணப்பெண்ணை குடும்பத்தினர், அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு (hospital) எடுத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உள்ளூர் காவல்துறையினருக்கு இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவரது மரணத்திற்கான துல்லியமான காரணத்தை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாட்டர் கீஸர் வெடிப்பினால் (geyser explosion) தான் இந்த பெண் இருந்திருக்கிறார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கீஸரை சரியாக சர்வீஸ் செய்யாமல் (geyser service) பயன்படுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உங்கள் வீட்டிலும் வாட்டர் கீஸர் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனே எடுத்துக்கொள்ளுங்கள்.
வாட்டர் ஹீட்டர் மற்றும் கீஸரை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது?
1. தரமான பிராண்டில் இருந்து வாட்டர் ஹீட்டர் மற்றும் கீஸரை (branded water geyser) வாங்கவும்.
2. விலை மலிவான மாடல்கள் மற்றும் பிராண்டை தவிர்ப்பது உங்கள் உயிருக்கு பாதுகாப்பானது.
3. வாட்டர் ஹீட்டர் அல்லது கீஸரை (geyser) நீண்ட நேரம் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
4. நீண்ட நேரம் பயன்படுத்தினால், ஓவர் ஹீட் (overheating) மூலம் விபத்துகள் ஏற்படலாம்.
5. கீஸரில் உள்ள பிரஷர் வால்வ்களை (pressure valve) அவ்வப்போது சோதனை செய்வது அவசியம்.
6. பிரஸர் வால்வ்களில் கோளாறு இருந்தால், அது ஹீட்டர் வெடிப்பிற்கும், விபத்திற்கு வழிவகுக்கும்.
7. உங்கள் வீட்டில் இருக்கும் ஹீட்டர் மற்றும் கீஸர்களை சர்வீஸ் செய்து பயன்படுத்துவது முக்கியம்.
8. குளிர்காலத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் சாதனம் என்பதனால், தெர்மோஸ்டாட் செக்கிங் (thermostat checking) மிக முக்கியமானது.
9. குளிக்கும் பொழுது கீஸர் மற்றும் ஹீட்டரை ON-ல் வைத்து பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது.
10. குளிப்பதற்கு முன் நீரை பிடித்து வைத்து பயன்படுத்துவது பாதுகாப்பானது. அதுவும் OFF செய்த பிறகு நீரை பிடித்து வைக்க அறிவுரைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








