மனைவியுடன் செல்போன் பேச்சு: பரோட்டா சிக்கி புதுமாப்பிள்ளை பரிதாப பலி.!
மனைவியுடன் திருமணமான மாப்பிள்ளை நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக விக்கல் எடுத்துக் கொண்ட இருந்தது. இந்நிலையில், மனைவியும் நீங்கள் தண்ணீர் குடியுங்கள் அப்புறம
மனைவியுடன் திருமணமான மாப்பிள்ளை நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக விக்கல் எடுத்துக் கொண்ட இருந்தது.

இந்நிலையில், மனைவியும் நீங்கள் தண்ணீர் குடியுங்கள் அப்புறம் பேசலாம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே எதிர்பாரத விதமாக அவர் இறந்து விட்டார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுமாப்பிள்ளை:
புதுச்சேரி லாஸ்பேட் கருவடிக்குப்பம் பாரதி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். 35 வயதான இவர் கிருமாம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் கார் கம்பெனியில் சூப்பர் வைச்சராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருநெல்வேலியை சேர்ந்த சண்முகசுந்தரி என்பவருக்கும் கடந்த 6 மாத்திற்கு முன் திருமணம் நடந்தது. இவருவரும் புதுச்சேரியில் வாழ்ந்து வந்தனர். மனைவியின் விருப்பத்திற்கு ஏற்ப அவரின் பெற்றோரை பார்க்க திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்துள்ளார் புருஷோத்தமன்.

நீண்ட நேரம் செல்போன் பேச்சு:
புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதால், நீண்ட நேரமாக செல்போனில் அடிக்கடி பேசிக் கொள்வது வழக்கம்.
நேற்றிரவு வேலைக்கு சென்று திரும்பிய புருஷோத்தமன் வழக்கம் போல் தனது மனைவியுடன் செல்போனில் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பசிக்கவும் செய்தது. பசி அதிகமானதாலும் அவர் அப்படியே செல்போனில் பேசிக் கொண்டிந்தார். பிறகு அருகே உள்ள கடைக்கு சென்று புரோட்டாரவையும் ஆடர் செய்து வாங்கினார். அப்போதும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

விக்கல் ஏற்பட்டது:
பரோட்டாவை பிய்ந்து வாயில் வைத்து புருஷோத்தமனுக்கு விக்கல் எடுத்தது. இதைத் தொடரந்தும் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போதும் விக்கல் ஏற்பட்டி கொண்டிருந்தது. அப்போது அவரின் மனைவி தண்ணீர் குடியுங்கள் என்று கூறியுள்ளார்.

செல்போனை எடுக்காத கணவன்:
அப்போதும் அவர் பேசி கொண்டிருந்த போது திடீரென எந்த பதில் இல்லாமல் விழுந்துள்ளார். செல்போன் எண்ணை துண்டித்த மனைவி மீண்டும் அழைத்துள்ளார். அப்போதும், அவர் போனை எடுக்கவில்லை. இதனால் பயந்து போன மனைவி உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவித்தார்.

வீட்டிற்குள் பார்த்தனர்:
புதுச்சேரியில் உள்ள உறவினர்களுக்கு தகவல் வந்ததால் அவர்கள் உடனடியாக அருகே உள்ள வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீடு பூட்டியுள்ளதால், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உறவினர்கள் வீட்டின் பூட்டை உடைத்து சென்று பார்க்கும் போது, அவர் தொண்டையில் பரோட்டா சிக்கி இறந்து இருப்பது தெரியவந்தது. இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் பேச்சலால் விபரீதம்:
செல்போன் மூலம் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததால், தனது கணவன் இறந்து விட்டார். தண்ணீர் குடிக்க கூடியும் அவர் குடிக்காததால் அவர் இறந்து விட்டார் என்று கதறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் நமக்கு ஒரு பாடமாக இருக்கும். செல்போன் பேச்சை நிறுத்தி விட்டு, பிறகு எதையும் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications