Home
News

மொத்த மார்க்கெட்டையும் மிரட்டும் விலை.. 40 மணிநேர பேட்டரி.. ANC சப்போர்ட்.. IPX5 வாட்டர் ப்ரூஃப்.. என்ன மாடல்?

"ஆஹா.. இதுக்கு மேல வேற என்ன வேணும்? இந்த விலைக்கு இது போதுமே!" என்று கூற வைக்கும்படியான 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் (TWS Earbuds) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன இயர்பட்ஸ்கள்? அவற்றின் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

ரியல்மியின் புதிய இயர்பட்ஸ்களாக ரியல்மி பட்ஸ் ஏர் 5 (Realme Buds Air 5) மற்றும் ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ (Realme Buds Air 5 Pro) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இன்-இயர் டிசைனுடன் வரும் இந்த 2 ரியல்மி இயர்பட்ஸ்களுமே ஓவல் வடிவ சார்ஜிங் கேஸுடன் (Oval Shaped Charging Case) வருகின்றன.

40 மணிநேர பேட்டரி.. ANC சப்போர்ட்.. IPX5 வாட்டர் ப்ரூஃப்.. என்ன மாடல்?

மேலும் இவ்விரு இயர்பட்ஸ்களுமே 4000ஹெர்ட்ஸ் அல்ட்ரா-வைட்பேண்ட் நாய்ஸ் ரிடக்ஷனுடன் (4000Hz ultra-Wideband Noise Reduction) வெளிப்புற இரைச்சலை 50 டெசிபல் வரை குறைக்கும் திறன்கொண்ட ஏஎன்சி அம்சத்துடன் வருகிறது. அறியாதோர்க்ளுககு ஏஎன்சி என்பது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) என்பதின் சுருக்கமாகும்.

ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலானது 6மிமீ ட்வீட்டர் உட்பட 11மிமீ கோஆக்சியல் டூயல் ட்ரைவர்களை (Coaxial dual drivers) கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ரியல்மி பட்ஸ் ஏர் 5 மாடலனது 12.4மிமீ ட்ரைவர்களை கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது 45 மில்லி செகென்ட்ஸ் வரையிலான லேடன்சி ரேட்டை (Latency Rate) வழங்கும். அதே நேரத்தில் ப்ரோ மாடல் 40 மில்லி செகென்ட்ஸ் வரையிலான லேடன்சி ரேட்டை வழங்கும்.

வெண்ணிலா மாடலானது டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio) தொழில்நுட்பத்துடன் வருகிறது, மறுகையில் உள்ள ப்ரோ மாடலானது ஹை-ரெஸ் ஆடியோவை (Hi-Res Audio) வழங்குகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது எல்டிஏசி ப்ளூடூத் கோடெக் (LDAC Bluetooth codec) மற்றும் 360-டிகிரி ஸ்பேஷியல் ஆடியோ எஃபெக்ட்களை ( 360-degree spatial audio effects) சப்போர்ட் செய்யும்.

மேலும் ரியல்மின் இந்த புதிய இயர்பட்ஸ் ஆனது ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேருக்கான (Google Fast Pair) ஆதரவையும் கொண்டுள்ளது. பிளேபேக் மற்றும் நாய்ஸ் கேன்சலேஷனை விரைவாக கட்டுப்படுத்த அனுமதிக்கும் டச் கண்ட்ரோல்களையும் (Touch Controls) கொண்டுள்ளன, மேலும் இந்த பட்ஸ்களை ரியல்மி லிங்க் ஆப்பை (Realme Link App) பயன்படுத்தியும் கஸ்டமைஸும் செய்யலாம். மேலும் ப்ரோ மாடலில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபிஎக்ஸ்5 ரேட்டிங்கும் (IPX5 Rating) உள்ளது

பேட்டரியை பொறுத்தவரை, ரியல்மி பட்ஸ் ஏர் 5 ஆனது சார்ஜிங் கேஸ் உட்பட மொத்தம் 38 மணிநேர பேட்டரி லைஃப்பை (Battery Life) வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ ஆனது சார்ஜிங் கேஸுடன் சேர்த்து, சிங்கிள் சார்ஜில் 40 மணிநேரம் வரை பிளேபேக் டைமை வழங்குமென்று கூறப்படுகிறது. மேலும் இரண்டு மாடல்களுமே பத்து நிமிட சார்ஜிங்கில் 7 மணிநேர மியூசிக் பிளேபேக்கை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி பட்ஸ் ஏர் 5 இயர்பட்ஸ் ஆனது ரூ.3,699 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆர்க்டிக் ஒயிட் (Arctic White) மற்றும் டீப் ஸீ (Deep Sea) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

மறுகையில் உள்ள ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ ஆனது ரூ.4,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஆஸ்ட்ரல் பிளாக் மற்றும் சன்ஷைன் ப்ளூ என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இவ்விரு இயர்பட்ஸ்களுமே பிளிப்கார்ட் (Flipkart), ரியல்மி.காம் (Realme.com) மற்றும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Newly launched Realme Buds Air 5 India Sale on August 26 Buds Air 5 Pro Sale on Aug 29 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X