கூகுள் சிஇஓ, அமேசான் சிஇஓ சம்பளம்- லட்சம் கோடிகள்., ஆயிரம் கோடிகள்தான்!

|

அமெரிக்காவின் அதிக சம்பளம் பெறும் டெக் நிறுவன சிஇஓ-க்கள் குறித்த பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் சம்பள பகுப்பாய்வு குறித்து விவரங்களை பார்க்கலாம். பழந்திர் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் கார்ப் 1.1 பில்லியன் டாலர் அதிக சம்பளம் வாங்கும் பொது நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாவார்.

அலெக்ஸ் கார்ப், பழந்தீரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இவர் கடந்தாண்டு பொதுவில் வர்த்தகம் செய்யப்பட்ட அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என டைம்ஸ் தெரிவித்துள்ளது. அதேபோல் டோர்டேஷ்-ன் டோனி க்சூ அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அதிகாரியாக உள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் அமெரிக்காவின் அதிக சம்பளம் பெறும் டெக் நிறுவன சிஇஓ-க்கள் குறித்து பார்க்கலாம். இதில் பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் ஜக்கர்பெர்க் இந்திய மதிப்புப்படி ரூ.4.17 லட்சம் கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார். இந்த மதிப்பானது 2012-2020 வரையிலான காலக்கட்டத்தில் அவர் பெற்ற பங்குகள் மற்றும் ரொக்கம் உள்ளிட்டவைகளாகும்.

கூகுள் சிஇஓ, அமேசான் சிஇஓ சம்பளம்-  லட்சம் கோடிகள்.,ஆயிரம் கோடிகள்தான்

கூகுள் சிஇஓ-வாக பதவி வகுத்து பின் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் உள்ளிட்டவைகளுக்கும் சிஇஓ-வாக பொறுப்பு வகிக்கும் சுந்தர் பிச்சை 2015 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.80 ஆயிரம் கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இது குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகளில் பங்குகள், இழப்பீடுகள், ரொக்கம் உள்ளிட்டவை அடங்கும்.

அமேசான் வெப் சர்வீஸ் தலைவராக இருக்கும் ஆண்டி ஜாஸ்ஸி, அமேசானின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்க உள்ளார். இவர் அந்த நிறுவனத்தின் க்ளவுட் கம்ப்யூட்டிங் வணிக வளர்ச்சிக்கு முக்கிய அங்கமாக இருந்தவர். அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், தனது பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார். அதேபோல் பெசோஸ் இடத்துக்கு அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ ஆன்டி ஜெஸி வர இருக்கிறார். அமேசான் நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.

கூகுள் சிஇஓ, அமேசான் சிஇஓ சம்பளம்-  லட்சம் கோடிகள்.,ஆயிரம் கோடிகள்தான்

தமிழகத்தை சேர்ந்த சுந்தர்பிச்சை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தனது பொறியியல் படிப்பை படித்து ஸ்டான்போரர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார். படிபடியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ என்ற பதவியை பெற்றார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
New York Times released a list of the highest paid tech CEOs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X