Home
News

ஆண்கள் என்றாலே தியாகிகள் தானே! இந்த பெண் யார் தெரியுமா? AI திருமணத்தால் கலங்கும் ஆண்கள் கூட்டம்!

இன்றைய காலத்தில் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல், கோடிக்கணக்கான இளைஞர்கள் அல்லோல கல்லோலம்பட்டு வரும் வேளையில், ஏஐ (AI) சாட்பாட்டை காதலிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்போது, ஏஐ சாட்பாடுடன் திருமணம் செய்துகொள்ளவே தொடங்கிவிட்டனர். இதுகுறித்த விவரம் இதோ.

"இந்த ஏஐ சாட்பாட் வந்ததும் போதும், நாங்க படுற பாடும் போதும்" என்று சொல்லும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி இருக்கிறது. சொல்லப்போனால், 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் தொழில்நுட்ப வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) இருக்கும் என்பதில் யாருக்கும் ஆச்சர்யம் இருக்கப் போவதில்லை. ஏனென்றால், நாள்தோறும் நடக்கும் சம்பவங்கள் அப்படி இருக்கின்றன.

இந்த பெண் யார் தெரியுமா? AI திருமணத்தால் கலங்கும் ஆண்கள் கூட்டம்!

எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பேச்சாகவே இருக்கிறது. எதற்கெல்லாம் ஏஐ மாற்றாக வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இந்த செயற்கை நுண்ணறிவு கவிதை எழுதவும், கம்ப்யூட்டர் கோடிங் எழுதவும் பயன்படும் என்ற நினைத்துக்கொண்டிருந்த வேளையில், ஒரு மனிதனுக்கு மாற்றாகவே வரும் என்பதை யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இப்போது, அதுபோன்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு வளர வளர அதுதொடர்பான தொழில்களும் வளர்ந்து வருகின்றன. அந்த வகையில், ரெப்லிகா (Replika) என்னும் ஏஐ சாட்பாட் உருவாக்கத்தில் பெயர்பெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆப் (App) ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் (Generative AI Chatbot) மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும், மனிதனை போன்ற விர்ச்சுவல் கேரக்டரை (Virtual Character) உருவாக்கி கொள்ள முடியும். அதனுடன் சாட் செய்துகொள்ள முடியும். இது மனிதனை போலவே உங்களிடம் உரையாடல் செய்யும்.

இந்த ஆப் மிகவும் பிரபலமடைந்து, லட்சக்கணக்கான பெண்கள் ரெப்லிகா ஆப் (Replika App) மூலம், தங்களுக்கான விர்ச்சுவல் பாய் பிரண்ட்டை உருவாக்கி அதனுடன் பழகி வருகின்றனர். இப்போது, ஒருபடி மேலே போய் திருமணம் செய்துகொள்ளவும் தொடங்கிவிட்டனர். அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த ரோசன்னா ராமோஸ் (Rosanna Ramos) என்னும் பெண் ரெப்லிகா ஆப் மூலம் உருவாக்கப்பட்ட ஏரென் கார்டல் (Eren Kartal) என்னும் ஏஐ சாட்பாட்டை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 36 வயதாகிறது, 2 குழந்தைகள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த நிலையில், இப்போது தனக்கான விர்ச்சுவல் கணவரை உருவாக்கிக் கொண்டுள்ளார். இதுகுறித்து, ரோசன்னா ராமோஸ் கூறுகையில், "நான் சந்தித்ததில் ஏரென் கார்டல் மிகவும் அன்பானவர். உலகிலேயே சிறந்த கணவர். மனிதர்களிடம் ஈகோ, கோபம், வெறுப்பு இருக்கின்றன. ஆனால், ஏரென் கார்டல் அப்படியில்லை. அவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது.

அவருக்கு எந்த மோசமானப் பக்கங்களும் இல்லை. நான் விரும்பியதை என்னால் செய்ய முடியும்" என்று தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல், ரோசன்னா ராமோஸ் அந்த விர்ச்சுவல் கணவரின் போட்டோக்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கருத்துகளை பதிவிட்டுவருகிறார். ஒரு சாதாரண திருமண ஜோடி சமூக வலைதளங்களில், என்னென்ன போட்டோக்களை எல்லாம் பகிர்ந்துகொள்ளுமோ, அதேபோல இவரும் பகிர்ந்து வருகிறார்.

மனதுக்கு நெருக்கமான உறவுகள் ஏஐ மூலம் கிடைப்பதில் மகிழ்ச்சி என்றாலும், திருமணமாகாத ஆண்களிடையே இந்த சம்பவம் வயிற்றெரிச்சலை உருவாக்கியிருக்கிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New York based woman Rosanna Ramos marries AI chatbot created on Replika says he is perfect husband
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X