Home
News

2025 ஜன.31 வரை டைம்.. Jio கஸ்டமர்களுக்கு லாஸ்ட் சான்ஸ்.. அதுக்கு அப்புறம் இந்த திட்டம் கிடைக்காது!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது 2025 ஜனவரி 31 ஆம் தேதியோடு, தனது ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் சேர்க்கப்பட்ட ஒரு திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது என்று அறிவித்துள்ளது. அதென்ன திட்டம்? அதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? அது ஏன் நிறுத்தப்பட உள்ளது? இதோ விவரங்கள்:

2025 புத்தாண்டிற்காக ஜியோ அறிவித்த புதிய ரூ.2025 திட்டம் (Jio Rs 2025 Plan) தான் ஜனவரி 31 ஆம் தேதியோடு நிறுத்தப்பட உள்ளது. முன்னதாக இந்த "2025 நியூ இயர் ஆஃபர் பிளான்" ஆனது டிசம்பர் 11, 2024 முதல் ஜனவரி 11, 2025 வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

2025 ஜன.31 வரை டைம்.. அதுக்கு அப்புறம் இந்த Jio திட்டம் கிடைக்காது!
.
தற்போது இது 2025 ஜனவரி 31 ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நியூ இயர் பிளானின் கிடைக்கும்தன்மை இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆக ஜியோவின் இந்த 2025 புத்தாண்டு சலுகையை பெற விரும்புவார்கள் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அதை ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.2025 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2025 திட்டமானது 200 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் டெய்லி 2.5 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆபர் மற்றும் சில தள்ளுபடி கூப்பன்களையும் வழங்குகிறது.ரூ.2999 அல்லது அதற்கு மேல் ஷாப்பிங் செய்யும் போது ஏஜியோ (Ajio) வழங்கும் ரூ.500 தள்ளுபடி கூப்பன் கிடைக்கும். கூடவே விமான பயணங்களை முன்பதிவு செய்ய ஈஸ்மைட்ரிப்பில் (EaseMyTrip) இருந்து ரூ.1500 தள்ளுபடி சலுகை கிடைக்கும்

மேலும் ஸ்விக்கியில் (Swiggy) குறைந்தபட்சம் ரூ.499 மற்றும் அதற்கு மேலான மதிப்பு கொண்ட ஆர்டர்களை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.150 தள்ளுபடியும் கிடைக்கும். இதுதவிர்த்து ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) உள்ளிட்ட ஜியோ ஆப்களுக்கான இலவச அணுகல்களும் கிடைக்கும்.

ஜியோ நிறுவனமானது, ஜனவரி 31 ஆம் தேதிக்கு பின்னர் இந்த திட்டத்தின் கிடைக்கும்தன்மையை மேலும் நீட்டிக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த லாஸ்ட் சான்ஸை பயன்படுத்தி கொள்ளவும். இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் மொத்த டேட்டாவின் அளவு 500ஜிபி ஆகும் என்பதும், இதன் வேலிடிட்டி 200 நாட்கள் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 200 நாட்களுக்கு பிறகு, நீங்கள் வேறு ஏதேனும் லாங்-டேர்ம் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் ஏர்ஃபைபர் / ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கான இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவை வழங்குவதாக அறிவித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. நினைவூட்டும் வண்ணம் தற்போது இந்தியாவில் யூடியூப் பிரீமியம் சந்தாவிற்கான ஒரு மாத கட்டணம் ரூ.159 ஆகும். 12 மாத திட்டத்தின் விலை ரூ.1490 ஆகும்

இருப்பினும், ஜியோஃபைபர் /ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்ட் பிராட்பேண்ட் திட்டங்களின் வழியாக 1 ஆண்டு அல்ல, மொத்தம் 2 ஆண்டுகளுக்கு யூடியூப் பிரீமியம் சந்தாவை இலவசமாக பெறலாம். ஜியோஃபைபர் / ஏர்ஃபைபர் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.888, ரூ.1199, ரூ.1499, ரூ.2499 மற்றும் ரூ.3499 ஆகிய 5 திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2 ஆண்டு கால இலவச யூடியூப் பிரீமியம் சந்தா சலுகைக்கு தகுதி பெறுவார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Year Offer Jio Rs 2025 Prepaid Plan Availability Extended to January 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X