கடலுக்கு நடுவில் இப்படி ஒரு இராட்சஸ கருவியா? 5 மடங்கு சக்தியை பெருக்க புது மல்டி டர்பைன் தொழில்நுட்பம்..

|

நோர்வேவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தற்போது ஒற்றை காற்று விசையாழிகள் உற்பத்தி செய்வதை விட ஐந்து மடங்கு ஆற்றலை உருவாக்க மல்டி-டர்பைன் என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. மல்டி டர்பைன் தொழில்நுட்பமா அது என்ன செய்யும்? இது எவ்வளவு ஆற்றலை உருவாக்கக் கூடியது? என்பது போன்ற தகவலை விரிவாகப் பார்க்கலாம். இந்த காற்று விசையாழிகள் மூலம் பூமி எப்படிப் பாதுகாக்கப்படுகிறது என்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இராட்சஸ மல்டி டர்பைன் சிஸ்டத்தை உருவாக்கிய நிறுவனம்

இராட்சஸ மல்டி டர்பைன் சிஸ்டத்தை உருவாக்கிய நிறுவனம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கப் பூமியின் காற்று ஆற்றல் சக்தியானது மிகவும் மலிவான மற்றும் விரைவான மூலப்பொருளாகக் கருதப்படுகிறது. தற்போதைய காற்று விசையாழிகள் மூன்று பிரம்மாண்டமான இறக்கைகளுடன் ஒரு துருவ வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் விண்ட் கேச்சிங் சிஸ்டம்ஸ் உருவாக்கிய புதிய டர்பைன்கள் இது போன்ற பல காற்று விசையாழிகளை ஒன்றாக இணைத்து மல்டி டர்பைன் சிஸ்டம் கொண்ட புதிய தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படக்கூடிய வகையில் உருவாக்கி வருகிறது.

மல்டி டர்பைன் தொழில்நுட்பத்தில் இயங்கும் விண்ட் கேட்சர்ஸ்

மல்டி டர்பைன் தொழில்நுட்பத்தில் இயங்கும் விண்ட் கேட்சர்ஸ்

மல்டி டர்பைன் தொழில்நுட்பம் வருங்காலத்தில் ஏகபோக மாற்றத்தை உருவாக்கக் கூடும் என்று இதனை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மாசற்ற சக்தி உருவாக்குதல் பற்றியும், பூமியின் பாதுகாப்பு பற்றியும் நன்கு புரிந்துகொள்ள இது உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது. சாதாரண காற்று விசையாழிகளின் வடிவமைப்பை மல்டி டர்பைன் காற்று விசையாழிகளாக மாற்றுவதன் மூலம் தீவிரமான மற்றும் அற்புதமான மாற்றங்களை நாம் அடைய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?

1,000 அடி உயரத்தில் மல்டி டர்பைன் விண்ட் கேட்சர்

1,000 அடி உயரத்தில் மல்டி டர்பைன் விண்ட் கேட்சர்

புதிய "விண்ட் கேட்சர்" 100 க்கும் மேற்பட்ட சிறிய பிளேடுகளுடன் ஒரு பெரிய இராட்சஸ சதுர கட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மல்டி டர்பைன் தொழில்நுட்பம் விசையாழிகளை 1,000 அடி வரை உயரத்தை அடைய உதவுகிறது. பாரம்பரிய விசையாழிகளைப் போல மூன்று மடங்கு அதிக உயரத்தை இது அடையச் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது ஒரு மிதக்கும் தளம் வகை விசையாழி மாடலை ஆதரிக்கிறது.

உலகின் 80 சதவீத காற்று

உலகின் 80 சதவீத காற்று

பின்னர் இவை கடல் தரையில் இருந்து ஆழமாக நிறுவப்படுகிறது. மேலும், இந்த சவாலான வடிவமைப்பின் முன்மாதிரி அடுத்த ஆண்டுக்கு முன்னர் தோன்றக்கூடும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. காற்று ஆற்றல் என்பது மின்சாரம் தயாரிக்கும் முறையின் முக்கியமான ஆற்றலாக இருக்கிறது. அதிலும், இந்த புதிய மல்டி டர்பன் தொழில்நுட்பம் ஒரு கேம் சேஞ்சராக அமைந்துள்ளது. ஆனால் உலகின் 80 சதவீத காற்று ஆழமான நீர்நிலைகளில் வீசுகிறது, அங்கு விசையாழிகளை அமைப்பது தான் இத்தனை நாட்களாகக் கடினமானதாக இருந்து வந்தது.

மனிதர்களை பிரமிக்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்?மனிதர்களை பிரமிக்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்?

உலகளவில் இருக்கும் 162 கடலோர காற்றாலை பண்ணைகள்

உலகளவில் இருக்கும் 162 கடலோர காற்றாலை பண்ணைகள்

ஆனால், இந்த தீவிர வடிவமைப்பு மாற்றம் அந்த சிக்கலைச் சரிசெய்ய நமக்கு வாய்ப்பளித்துள்ளது. கடலோர காற்றாலைகள் இந்தப் பகுதிகளில் அதிவேகக் காற்றைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. பாஸ்ட் கம்பெனி படி, இதுபோன்ற 162 கடலோர காற்றாலைகள் தற்போது உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இதுபோன்ற காற்றாலைகளை அமைப்பது எளிதல்ல, ஏனென்றால் விசையாழிகளை தண்ணீரில் 200 அடிக்கு மேல் நிறுவ முடியாது. இதனால், இவற்றை அமைப்பது என்பது சிக்கலாக இருக்கிறது.

மிதக்கும் காற்றாலைகள் ஒரு சாத்தியமான தீர்வா?

மிதக்கும் காற்றாலைகள் ஒரு சாத்தியமான தீர்வா?

இதன் காரணமாக, காற்றாலை பண்ணைகளைக் கரைகளுக்கு அருகில் கட்ட வேண்டும். ஆனால், காற்றானது கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. மிதக்கும் காற்றாலைகள் ஒரு சாத்தியமான தீர்வை வழங்க முயன்றன. இந்த வகையான முதல் பண்ணை ஸ்காட்லாந்தில் 2017 இல் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது அபெர்டீன் கடற்கரையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா உருவாகியுள்ள உலகின் மிகப்பெரிய காற்றாலை.. இதன் ராட்சஸ சக்தி எவ்வளவு பெரியது தெரியுமா?சீனா உருவாகியுள்ள உலகின் மிகப்பெரிய காற்றாலை.. இதன் ராட்சஸ சக்தி எவ்வளவு பெரியது தெரியுமா?

சுற்றுச்சூழல் நட்பு முறையில் மின்சாரம் அறுவடை

சுற்றுச்சூழல் நட்பு முறையில் மின்சாரம் அறுவடை

சுற்றுச்சூழல் நட்பு முறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது நமது ஆற்றல் துயரங்களைத் தீர்க்க உதவும் காற்றின் ஆற்றல் மிகவும் ஆக்கப்பூர்வமாக அறுவடை செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களின் கருத்துகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். கடலில் காற்றாலை அமைக்கும் இந்த செய்தியைப் படித்திருப்பீர்கள். இதே போன்று பூமியில் நிகழும் சுவாரசியமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்களின் கிஸ்பாட் பக்கத்தைப் பார்வையிடுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
New Wind Turbine Design Can Produce Five Times More Energy Than Older Version Of Turbines : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X