Home
News

WhatsApp இருக்கா.. இனிமே Chat செய்யுறதே மாறப் போகுது.. உடனே இதை ட்ரைப் பண்ணுங்க.. புது பீச்சர்கள் தெரியுமா?

வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்தும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் மெட்டா (Meta) நிறுவனமானது, 4 புதிய மாற்றங்களை செய்துள்ளது. இனிமேல் சாட் செய்யும்போது கேமரா எஃபெக்ட்ஸ் தொடங்கி டபுள் டேப் ரியாக்சன் வரையில் மாற்றங்கள் இருக்கும். உங்களிடம் வாட்ஸ்அப் இருந்தால், உடனே அதை அப்டேட் செய்து வைத்து கொள்ளுங்கள். இந்த 4 மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போதெல்லாமல், ஸ்மார்ட்போன் என்று இருந்தாலே அதில் வாட்ஸ்அப் இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு வாட்ஸ்அப் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேசேஜ் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், வீடியோ கால்கள், போட்டோ ஷேரிங், வீடியோ ஷேரிங் வரையில் அந்த ஒரே ஆப் மூலம் செய்து கொள்ளலாம். இதுபோக குரூப் ஷாட்டிங், பேமெண்ட் போன்றவையும் வந்துவிட்டது.

WhatsApp இருக்கா.. இனி Chat செய்யுறதே மாறப் போகுது.. ட்ரைப் பண்ணுங்க!

இதனால், அதில் புதுப்புது பீச்சர்களையும் மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. இப்போது, சாட்டிங் செய்யும் அனுபவத்தை மேலும், கிரியேட்டிவிட்டியாகவும், சுலபமாகவும் மாற்றும்படி 4 புதிய பீச்சர்களை களமிறங்கி இருக்கிறது. இது முந்தைய வெர்ஷனில் இருந்து முற்றிலும் சுலபமாக இருக்கிறது. அதோடு கூடுதலாக சில ஆப்ஷன்களும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

என்னென்ன பீச்சர்கள் இருக்கின்றன? கேமரா எஃபெக்ட்ஸ் (Camera Effects), செல்பீ ஸ்டிக்கர்கள் (Selfie Stickers), ஸ்டிக்கர் பேக் (Sticker Pack) மற்றும் குயிக்கர் ரியாக்சன் (Quicker Reactions) ஆகிய பீச்சர்கள் வந்துள்ளது. முதலில் கேமரா எஃபெக்ட்ஸ் பீச்சரை பார்க்கையில், சாட்டில் வீடியோ அல்லது போட்டோ அனுப்பும்போது இனிமேல் 30 பேக்கிரவுண்ட்கள் கொடுக்கப்படும்.

இதுபோக ஃபில்டர்கள் மற்றும் எஃபெக்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆகவே, போட்டோ எடுக்கும்போதும், வீடியோ ரெக்கார்டிங் செய்யும்போதும் இந்த பீச்சர்களை பயன்படுத்தலாம். அடுத்து செல்பீ ஸ்டிக்கர்கள் பீச்சர் இருக்கிறது. இந்த பீச்சர் மூலம் நொடியில் உங்களது சொந்த ஸ்டிக்கரை உருவாக்க முடியும். அதாவது, செல்பீக்களை ஸ்டிக்கர்களாக மாற்றி அனுப்பி கொள்ளலாம்.

WhatsApp இருக்கா.. இனி Chat செய்யுறதே மாறப் போகுது.. ட்ரைப் பண்ணுங்க!

வழக்கமான ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்தால், உங்களுக்கு கேமரா ஆப்ஷன் காண்பிக்கப்படும். அதை ஓப்பன் செய்து உங்களது செல்பீக்களை ஸ்டிக்கர்களாக மாற்றி விரும்பமானவர்களுக்கு அனுப்பி கொள்ளலாம். இந்த பீச்சர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூசர்களுக்கு விரைவில் கிடைக்க இருக்கிறது. அடுத்து ஸ்டிக்கர் பேக் பீச்சர் கிடைக்க இருக்கிறது. இது ஈஸி சாட்டிங் பீச்சராகும்.

அதாவது, உங்களுக்கு விருப்பமானவர்களுடன் நீங்கள் சாட் செய்யும்போது, அவர்களுக்கு பிடித்த சில ஸ்டிக்கர்கள் இருந்தால், அதை ஒரு பேக் போல சேமித்து வைத்து கொள்ளலாம். சாட் செய்யும்போது தேடாமலேயே அந்த பேக்கில் இருந்து அனுப்பி கொள்ளலாம். இதற்காக ஸ்டிக்கர் பேக் பீச்சர் கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்து குயிக்கர் ரியாக்சன் பீச்சர் கிடைக்க இருக்கிறது.

குரூப் சாட் அல்லது பர்சனல் சாட்டின் போது, ஏதாவது ஒரு மேசேஜ்க்கு ரியாக்சன் செய்ய வேண்டுமானால், லாங்-பிரஸ் செய்து தம்ப்ஸ்அப் அல்லது ஹார்டின் போன்றவற்றை செய்திருப்போம். இனிமேல் லாங்-பிரஸ் செய்ய வேண்டியது கிடையாது. டபுள் டேப் செய்தாலேயே உங்களுக்கு ரியாக்சன் ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும். இதில் ஏதாவது ஒன்றை அனுப்பி கொள்ளலாம்.

இப்படி நான்கு புதிய பீச்சர்களை மெட்டா நிறுவனம் களமிறக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் அப்டேட் மூலம் கொடுக்கப்படுகிறது. படிப்படியாக யூசர்களுக்கு கிடைத்து வருகிறது. இதுபோல மேலும் புதிய பீச்சர்களை இந்த புது வருடத்தில் கொடுக்க இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதில் செல்பீ ஸ்டிக்கர் பீச்சர் மட்டும் விரைவில் கிடைக்கும் என்பதை சொல்லி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New WhatsApp Features For Chat New Ways To Camera Effects Selfie Stickers Quicker Reactions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X