Home
News

WhatsApp-க்கு ரெடியாச்சு.. இதுக்குதான வெயிட் பண்ணோம்.. இனிமே Status வச்சா பேஸ்புக், இன்ஸ்டாவுக்கு போகும்!

இந்த அப்டேட் எப்போ வரும்னுதான வெயிட் பண்ணோம் என்று ஒட்டுமொத்த வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களும் அறக்க பறக்கும்படி, இப்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆட்டோமேட்டிக்கலி ஷேர் (WhatsApp Status Automatically Share) பீச்சர் களமிறங்கி இருக்கிறது. இந்த பீச்சர் மூலம் என்ன செய்ய முடியும்? எப்போது யூசர்களுக்கு பயன்படுத்த கிடைக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மெசேஜ், வாய்ஸ் கால், போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் மட்டுமல்லாமல், ஸ்டேட்டஸ் வைப்பதற்காகவும் அதிகளவில் பயன்படுத்துவது வாட்ஸ்அப் மட்டும்தான். இதில் வைக்கும் ஸ்டேட்டஸ் உங்களது கான்டாக்ட் லிஸ்ட்டில் இருப்பவர்களால் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், இதில் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது. அதே நேரத்தில் யார் உங்களது ஸ்டேட்டஸை பார்க்க வேண்டும்.

WhatsApp-க்கு ரெடியாச்சு! இதுக்குதான வெயிட் பண்ணோம்.. இனி Status-க்கு!

யார் பார்க்க கூடாது என்பதையும் உங்களால் நிர்ணயிக்க முடியும். இதற்கான பீச்சர்களை வாட்ஸ்அப் கொடுக்கிறது. இருப்பினும், வாட்ஸ்அப் போலவே பேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) ஆப்களையும் மெட்டா நிறுவனமே நிர்வகிப்பதால், வாட்ஸ்அப் மூலம் வைக்கப்படும் ஸ்டேட்டஸ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா ஆப்களிலும் பகிர புது பீச்சர் வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

இப்போது, மெட்டா (Meta) நிறுவனம் அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆட்டோமேட்டிக்கலி ஷேர் பீச்சர் மூலம் கொடுக்க இருப்பதை உறுதி செய்துள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய ஆப்களை மெட்டா அக்கவுண்ட் சென்டர் (Meta Accounts Centre) மூலம் ஒருகிணைப்பு செய்து, அதன் மூலம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மற்ற ஆப்களிலும் பகிர வழிவகை செய்ய இருக்கிறது.

இது ஆட்டோமேட்டிக் பீச்சராக இருப்பதால், நீங்கள் வாட்ஸ்அப்பில் அப்டேட் செய்யும் ஸ்டேட்டஸ் உங்களது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆப்களிலும் காண்பிக்கப்படும். அதேபோல ஆட்டோமேட்டிக் அல்லாமல் நீங்களே அதை கன்ட்ரோல் செய்யும் ஆப்ஷனும் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த புதிய பீச்சர்கள் விரைவில் அப்டேட் செய்யப்பட இருப்பதாக மெட்டா தெரிவித்து இருக்கிறது.

மூன்று ஆப்களும் ஒருங்கிணைப்பு செய்யப்பட இருப்பதால், மொபைல் நம்பர் அல்லது ஈமெயின் ஐடி விவரங்கள் பொதுவானதாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். இல்லையென்றால், ஆப்களை இணைப்பதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த புதிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆட்டோமேட்டிக்கலி ஷேர் பயனர்களுக்கு வந்த பிறகே முழு விவரங்களை தெரியவரும். முன்னதாக சில பீச்சர்கள் வந்தன.

அதாவது, கேமரா எஃபெக்ட்ஸ் (Camera Effects), குயிக்கர் ரியாக்சன் (Quicker Reactions), செல்பீ ஸ்டிக்கர்கள் (Selfie Stickers) மற்றும் ஸ்டிக்கர் பேக் (Sticker Pack) ஆகிய நான்கு பீச்சர்களை களமிறங்கி இருக்கிறது. இந்த பீச்சர்கள் மூலம் வீடியோ அல்லது போட்டோக்களுக்கு 30 பேக்கிரவுண்ட்கள் கிடைக்கும். இதை நேரடியாக கேமராவில் பயன்படுத்தலாம். உங்களது செல்பீக்களை ஸ்டிக்கர்களாக மாற்ற முடியும்.

அதாவது, செல்பீ ஸ்டிக்கர்கள் பீச்சர் மூலமாக நீங்கள் எடுக்கும் போட்டோக்களை ஸ்டிக்கராக மாற்றி யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி கொள்ளலாம். இதை சாட் செய்யும்போதும் செய்ய முடியும். அதேபோல ஸ்டிக்கர்களை தனியாக சேமித்து வைத்து தேவைப்படும்போது அனுப்பி கொள்ளும்படி ஸ்டிக்கர் பேக் பீச்சர் கிடைக்கிறது. இதன் மூலம் உங்களது அல்லது உங்களுக்கு பிடித்தவர்களின் ஸ்டிக்கர்களை சேமிக்க முடியும்.

அது தேவைப்படும்போது தேடாமல் பயன்படுத்தலாம். இறுதியாக குயிக்கர் ரியாக்சன் பீச்சர் கிடைக்கிறது. இது வழக்கமான பீச்சர்தான். ஆனால், அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட மேசேஜ்க்கு ரிப்ளை செய்யும்போது, தம்ஸ்அப், ஹார்டின் செய்ய லாங்-பிரஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை. டபுள் டேப் செய்தாலே போதும் உங்களுக்கு ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New WhatsApp Feature Will Soon Let Users Automatically Share WhatsApp Status on Facebook Instagram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X