WhatsApp இருக்கா.. இனிமே Instagram ஐடி கண்டுபிடிப்பது ஈஸி.. அப்படி வருது அப்டேட்.. இப்போதைக்கு பீட்டா வெர்ஷன்!
வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்துவதற்கு நிகராக இப்போது இன்ஸ்டாகிராம் (Instagram) வளர்ந்து வருகிறது. சொல்லப்போனால், 2K கிட்களின் நம்பர் 1 இடத்தில் இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இப்படிப்பட்ட இன்ஸ்டாகிராம் ஆப்-இன் ப்ரொபைலை (Instagram Profile) வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படியான அப்டேட் வர இருக்கிறது. இந்த புது வாட்ஸ்அப் ப்ரொபைல் பீச்சரின் (WhatsApp Profile Feature) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சோஷியல் மீடியா ஆப்களின் லிங்கை ப்ரொபைல்களில் ஆட் செய்து கொள்ளவது ஒன்றும் புதிது கிடையாது. இதன் மூலம், ஒருவரது சோஷியல் மீடியா ஐடியை அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள கொள்ள முடியும். ஆனால், இந்த பீச்சர் வாட்ஸ்அப்பில் கிடையாது. உங்களது ப்ரொபைல் போட்டோ, பெயர், சுயவிவரம் மற்றும் போன் நம்பர் ஆகிய விவரங்கள் மட்டுமே வாட்ஸ்அப் காண்பிக்கிறது.

இதில் சோஷியல் மீடியா லிங்குகளை ஆட் செய்யும்படி இப்போது அப்டேட் வர இருக்கிறது. இதன் மூலம் உங்களது இதர சோஷியல் மீடியா ப்ரொபைல் லிங்குகளை இதில் ஆட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் எளிதாக உங்களது கான்டாக்ட்களில் இருக்கும் நபர்கள் உங்களது சோஷியல் மீடியா ஐடிகளை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இது பீட்டா வெர்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
ஆகவே, அனைத்து வாட்ஸ்அப் யூசர்களுக்கும் கிடைக்காது. அதேபோல ஐஓஎஸ் (iOS) யூசர்களுக்கு மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது. வரும் நாட்களில் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு எதிர்பார்க்கலாம். மேலும், இன்ஸ்டாகிராம் லிங்கை மட்டுமே வாட்ஸ்அப்பில் ஆட் செய்யும்படி இந்த பீட்டா வெர்ஷன் அனுமதிக்கிறது. இதோடு பேஸ்புக் (Facebook) லிங்க் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏனென்றால், வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய ஆப்களை மெட்டா நிறுவனமே நிர்வகிக்கிறது. ஆகவே, இதில் பேஸ்புக் லிங்க் அடுத்தடுத்த அப்டேட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் மூலம் உங்களுடன் தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஐடிக்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே, இதை விஷிபில் செய்யவும் அல்லது நீக்கவும் யூசர்களுக்கு கட்டாயம் ஆப்ஷன் கொடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. சொல்லப்போனால், வாட்ஸ்அப் பிசினஸ் அக்கவுண்ட்களில் (WhatsApp Business Accounts) சோஷியல் மீடியா ப்ரொபைல் லிங்குகளை ஆட் செய்யும் ஆப்ஷன் இருக்கிறது. இதேபோல பர்சனல் அக்கவுண்ட்களுக்கும் வேண்டும் என்று யூசர்கள் வேண்டினர்.
இதன்படியே மெட்டா நிறுவனம், இந்த அப்டேட்டை பீட்டா வெர்ஷனில் வெளியிட்டிருக்கிறது. வரும் நாட்களில் அனைத்து யூசர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. சமீப காலமாக வாட்ஸ்அப் ஆப்-இல் புதுப்புது பீச்சர்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக குரூப் சாட்டில் இருந்ததை போலவே பிரைவேட் சாட்டிலும் ஸ்கெடுள் ஈவெண்ட்கள் (Schedule Events) பீச்சர் ஆட் செய்யப்பட்டது.
அதேபோல வியூ ஒன்ஸ் மீடியா விசிபிள் (View Once Media Visible) பீச்சரானது வாட்ஸ்அப் வெப் யூசர்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதுபோக வாட்ஸ்அப் கேமரா எபெக்ட்கள், வாட்ஸ்அப் செல்பீ ஸ்டிக்கர்கள், ஸ்டிக்கர் பேக் மற்றும் குயிக் ரியாக்சன் போன்ற பல்வேறு பீச்சர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றன. இவை எல்லாமே பீட்டா வெர்ஷனில் கிடைக்கின்றன.
ஆகவே, ஒட்டுமொத்த யூசர்களுக்கும் இன்னும் கொண்டு வரப்படவில்லை. ஏற்கனவே, வாட்ஸ்அப் நிறுவனம் யுபிஐ சேவையில் கவனம் செலுத்தி வருகிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போல இதிலும் மொபைல் நம்பர் மூலம் எளிதாக பணம் அனுப்பும்படி பீச்சர்கள் இருக்கின்றன. இப்போது, கூடுதலாக பல்வேறு பீச்சர்கள் இடம்பெற்றுள்ளன. இது வரவேற்கத்தக்க பீச்சர்களாகும்.


Click it and Unblock the Notifications








