Home
News

WhatsApp அக்கவுண்ட் இருக்கா? இனிமே பிரைவேட் சாட் பண்ணும்போது இதை மறக்கமாட்டீங்க.. அப்போ குரூப் சாட்.. இப்போது?

ஒட்டுமொத்த வாட்ஸ்அப் யூசர்களுக்கும் இனிமேல் சாட் செய்யும்போது பல்வேறு புது பீச்சர்களை கிடைக்க இருக்கின்றன. பிரைவேட் சாட்டில் ஸ்கெடுள் ஈவெண்ட்கள் (Schedule Events) முதல் லிங்க்ட் டிவைஸ்களில் வியூ ஒன்ஸ் மீடியா விசிபிள் (View Once Media Visible) வரையில் பல்வேறு பீச்சர்கள் லிஸ்டில் இருக்கின்றன. அப்படி என்னென்ன பீச்சர்கள் கிடைக்க இருக்கின்றன.

ஸ்கெடுள் ஈவெண்ட்கள் பீச்சர் (Schedule Events Feature): இந்த பீச்சர் ஏற்கனவே குரூப் சாட்டில் (Group Chat) கிடைக்கிறது. அதாவது, ஏதாவது ஒரு தேதி அல்லது நேரத்தில் மீட்டிங், அவுட்டிங், டேட்டிங் போன்ற ஏதாவதொரு ஈவெண்ட்டின் விவரங்களை குறிப்பிட்டு வைத்தால், அது சாட்டை ஓப்பன் செய்யும்போதெல்லாம் உங்களுக்கு காண்பிக்கப்படும். இது கிட்டத்தட்ட டேக் செய்வதை போலத்தான்.

WhatsApp அக்கவுண்ட் இருக்கா? இனிமே பிரைவேட் சாட் பண்ணும்போது இத மறக்க?

ஆகவே,இந்த பீச்சர் மூலம் குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் ஈவெண்ட்களை எப்போதும் ஃபாலோ செய்து கொள்ள முடியும். இது பிரைவேட் சாட்டில் (Private Chat) கிடைக்காமல் இருந்தது. அதாவது, ஒன்-டூ-ஒன் சாட்டில் (One-to-One Chat) இந்த பீச்சர் கிடைக்காமல் இருந்தது. இப்போது, பீட்டா வெர்ஷனில் கிடைத்துள்ளது. விரைவில் ஒட்டுமொத்த வாட்ஸ்அப்ட் யூசர்களுக்கும் கிடைக்க இருக்கிறது.

வியூ ஒன்ஸ் மீடியா விசிபிள் (View Once Media Visible): வாட்ஸ்அப் சாட்டில் ஒரு முறை மட்டுமே பார்த்து கொள்ளும்படி போட்டோக்கள் அல்லது வீடியோக்கள் அனுப்பி கொள்ள முடிகிறது. இதை மொபைலில் இருக்கும் வாட்ஸ்அப் ஆப் மூலம் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. வாட்ஸ்அப் லிங்க்டு டிவைஸ்களில் வியூ ஒன்ஸ் மீடியா அனுப்பப்பட்டாலும் அது விசிபிள் ஆகாமல் இருந்தது.

ஆனால், இப்போது அவற்றிலும் விசிபிள் செய்ய அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இந்த அப்டேட் விரைவில் வாட்ஸ்அப் யூசர்களுக்கு கிடைக்க இருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்த அப்டேட்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூசர்களுக்கு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இந்த பீச்சர்களுக்கு முன்பாகவே சில பீச்சர்கள் வர இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. அதை பார்ப்போம்.

கேமரா எஃபெக்ட்ஸ் பீச்சர் (Camera Effects Feature): வாட்ஸ்அப் கேமராவில் போட்டோ எடுக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இவர்களுக்காக கேமரா எஃபெக்ட்ஸ் பீச்சர் மூலம் 30 பேக்கிரவுண்ட்கள், ஃபில்டர்கள் மற்றும் எஃபெக்ட்கள் கூடுலாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இவற்றை பயன்படுத்தி யூசர்கள் போட்டோக்களை எடுத்து பிடித்தமானவர்களுக்கு அனுப்பி கொள்ளலாம்.

செல்பீ ஸ்டிக்கர்கள் பீச்சர் (Selfie Stickers Feature): இந்த பீச்சர் மூலம் உங்களது செல்பீக்களை ஸ்டிக்கராக மாற்றி கொள்ள முடியும். அதாவது, நீங்கள் எடுத்த செல்பீக்கள் அல்லது சாட் செய்யும்போது செல்பீ எடுத்தாலும் அதை நொடியில் ஸ்டிக்கர்களாக மாற்றி கொள்ளலாம். அதேபோல சேமித்து வைத்து கொள்ளலாம். அதன்பிறகு உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு அனுப்பலாம்.

ஸ்டிக்கர் பேக் பீச்சர் (Sticker Pack Feature): இந்த பீச்சர் மூலம் ஸ்டிக்கர்களை சேமித்து வைக்கலாம். அதாவது, உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை மட்டும் தனியாக ஒரு பேக்கில் வைப்பதற்கு இந்த பீச்சர் உதவியாக இருக்கும். ஆகவே, உங்களுக்கு அதிகம் விருப்பமான ஸ்டிக்கர்களை தேடாமல், நொடியில் இந்த பேக்கில் இருந்து எடுத்து கொள்ளலாம். இறுதியாக குயிக்கர் ரியாக்சன் பீச்சரை பார்ப்போம்.

குயிக்கர் ரியாக்சன் பீச்சர் (Quicker Reactions Feature): உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு ரீப்ளை செய்வது மட்டுமல்லாமல், அதற்கு ரியாக்சன் செய்யும் வாட்ஸ்அப் பீச்சரை கொடுக்கிறது. இதில் தம்ப்ஸ்அப், ஹார்டின் போன்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதற்கு லாங்-பிரஸ் செய்ய வேண்டி இருந்தது, இனிமேல் டபுள் டேப் செய்து பயன்படுத்தலாம். இந்த பீச்சர்கள் அனைத்தும் விரைவில் கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New WhatsApp Feature Users To Schedule Events in Private Chats Soon How its Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X