WhatsApp-க்கு கும்பிடு.. வாய்ஸ் மெசேஜ்ல வச்சாச்சு.. இனிமே அனுப்புனா இதை பண்ணுங்க.. இல்லனா என்ன நடக்கும்?
வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் வாய்ஸ் மெசேஜ் (Voice Message) அனுப்பும் ஒட்டுமொத்த யூசர்களுக்கும் நேரடியாக மாற்றங்களை கொண்டுவரும்படியான அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இனிமேல் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதற்கு முன்பு செட்டிங்ஸ் (Settings) சென்று இதை செய்து முடித்து விடுங்கள். இதுகுறித்த விவரம் இதோ.
வாட்ஸ்அப் இல்லனா, மேலும் கீழும் பார்க்க கூட செய்வார்கள். அந்த அளவுக்கு வாட்ஸ்அப் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இதனால், அந்த வாட்ஸ்அப்-பில் ஏதாவது மாற்றங்கள் வந்தால் நேரடியாக நாமும் மாற வேண்டி இருக்கிறது. இப்போது, வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் யூசர்கள் கை எடுத்து கும்பிடும்படியான ஒரு வேலையை வாட்ஸ்அப் நிறுவனம் பார்த்துள்ளது.

வாட்ஸ்அப்-பில் மெசேஜ் செய்ய முடிந்தாலும், வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் மட்டுமே பலருக்கு வேலை முடியும். ஏனென்றால், எளிதாக சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கலாம். டைப் செய்யும் நேரமும் மிஞ்சமாகும். ஆனால், சில நேரங்களில் வெளியே அதிக சத்தம் இருக்கும்போது வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால், அதில் குழப்பம் ஏற்படுகிறது.
வாய்ஸ் மெசேஜ் புரியாமல் போகவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வாய்ஸ் மெசேஜ் கேட்க முடியாத இடத்தில் அதை ஓப்பன் செய்து பார்க்கவும் முடியாது. இந்த எல்லாத்தையும் ஒரே பீச்சரில் வாட்ஸ்அப் நிறுவனம் முடித்து கொடுத்துள்ளது. வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்டுகள் (WhatsApp Voice Message Transcripts) பீச்சரை கொடுத்துள்ளது.
இந்த பீச்சர் மூலம் வாய்ஸ் மெசேஜ் ஆனது அப்படியே டெக்ஸ்ட் (எழுத்தாக) மாற்றி கொடுக்கப்படும். அதே நேரத்தில் வாய்ஸ் மெசேஜ்ஜில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை அப்படியே எழுத்து மூலமாக தெரிந்து கொள்ள முடியும். இதனால், குழப்பமான வார்த்தைகள் அல்லது இரைச்சல் அதிகமான இடத்தில் இருந்து பேசி அனுப்பப்பட்ட மெசேஜ்களை புரிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்டுகள் பயன்படுத்துவது எப்படி? உங்கள் வாட்ஸ்அப் ஆப்-ஐ ஓப்பன் செய்து கொள்ளுங்கள். செட்டிங்ஸ் (Settings) பக்கத்தில் இருக்கும் சாட் (Chats) டேப்-ஐ ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இதில், வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்டுகள் ஆப்ஷன் இருக்கும். இந்த டிரான்ஸ்கிரிப்டுகள் ஆப்ஷனை ஆன் செய்து வைத்து கொள்ளுங்கள்.
இதன் பிறகு உங்களது மொழியை தேர்வு (Language Select) செய்து கொள்ள வேண்டும். இதை முதல்முறை செய்யும்போது, உங்களது மொழியை டவுன்லோட் செய்ய கேட்கும். அதற்கு சம்மதித்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களுக்கு வரும் வாய்ஸ் மெசேஜ்களை எழுத்துகளாக டிரான்ஸ்கிரிப்ட் செய்து கொள்ளலாம். இதை எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
இந்த ஆப்ஷனை ஆன் செய்த பிறகு, உங்களுக்கு அனுப்பப்பட்ட வாய்ஸ் மெசேஜ்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இப்போது, அதை டேப் (Tap) செய்து ஹோல்டு (Hold) செய்யுங்கள். இதை செய்தால், உங்களுக்கு வியூ டிரான்ஸ்கிரிப்ட் (View Transcript) ஆப்ஷன் தெரிவிக்கப்படும். இதை கிளிக் செய்தால், அந்த வாய்ஸ் மெசேஜ்-க்கு கீழேயே அதற்கான எழுத்துக்கள் தோன்றும்.
இதை படித்து கொள்ளலாம் அல்லது காப்பி செய்தும் வைத்து கொள்ளலாம். ஒருவேளை டிரான்ஸ்கிரிப்ட் அன்அவைலபிள் (Transcript unavailable) என்று காண்பிக்கப்பட்டால், உங்களது மொழி செட்டிங்ஸ் (Language Settings) வாய்ஸ் மெசேஜ் மொழியுடன் ஒத்துபோகவில்லை என்று அர்த்தமாகும். ஆகவே, மொழி சப்போர்ட் இந்த பீச்சருக்கு முக்கியமானதாகும்.
இந்த வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் வரும் வாரங்களில் யூசர்களுக்கு அப்டேட் மூலம் கொடுக்கப்படுகிறது. முதில் ஆங்கிலம் (English), ரஷ்யன் (Russian), ஸ்பானிஷ் (Spanish) மற்றும் போர்ச்சுகீஸ் (Portuguese) ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதற்கு அடுத்து அதிக மக்களால் பயன்படுத்தப்படும் இந்தி, பெங்காலி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, அப்டேட் செய்து பெறலாம்.


Click it and Unblock the Notifications