Home
News

WhatsApp-க்கு வந்த புது QR Code.. ஸ்கேன் செய்த உடனே நடக்கும் 3 விஷயங்கள்!

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனத்தை வாங்கிய நாளில் இருந்தே மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தலைமையிலான மெட்டா (Meta) நிறுவனம், இந்த மெசேஜிங் பிளாட்ஃபார்மை மிகவும் அப்டேடட் ஆக வைத்துக்கொள்ள.. பல வகையான மாற்றங்களையும், மாதந்தோறும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது.

அந்த வரிசையில் வாட்ஸ்அப்பில் ஒரு புதிய க்யூஆர் கோட் (New QR Code) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அது என்ன க்யூஆர் கோட்? அதை ஸ்கேன் செய்தால் என்ன ஆகும்? இது யாருக்கெல்லாம் அணுக கிடைக்கும்? இதனால் என்ன பயன்? இதோ விவரங்கள்:

WhatsApp-க்கு வந்த புது QR Code!

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் சேனல்களில் தான் புதிய க்யூஆர் கோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் சேனல்களில் அணுக கிடைக்கும் இந்த புதிய க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் குறிப்பிட்ட சேனலை விரைவாக ஷேர் செய்ய முடியும்; பார்க்க முடியும் மற்றும் ஃபாலோ செய்ய முடியும்.

தற்போது இந்த புதிய க்யூஆர் கோட் ஆனது ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவின் லேட்டஸ்ட் வெர்ஷன்களின் வழியாக சோதனை செய்ய கிடைக்கிறது. இது கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. WABetaInfo-வின் கூற்றுப்படி, தற்போது வரையிலாக இது ஆண்ட்ராய்டு 2.24.25.7 வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் அல்லது ஐஓஎஸ் 24.24.10.76 வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் வழியாக பீட்டா டெஸ்டர்களுக்கு அணுக கிடைக்கிறது.

அம்ச டிராக்கரின் படி, WhatsApp இல் அம்சத்தை இயக்கிய பயனர்கள் - நீங்கள் பயன்பாட்டின் சமீபத்திய பீட்டா பதிப்பில் இருக்க வேண்டும் மற்றும் ஏற்கனவே உள்ள WhatsApp சேனலை நிர்வகிக்க வேண்டும் - அவர்களின் சேனல் தகவல் குழுவைத் திறந்து பகிர்வு விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க முடியும். , QR குறியீட்டை உருவாக்கும் விருப்பம் வழங்கப்படும்.

இந்த புதிய க்யூஆர் கோட் ஆனது ஒரு படமாக பகிரப்படுகிறது, எனவே இதை மூன்றாம் தரப்பு ஆப்களின் வழியாகவும் அனுப்பலாம் அல்லது மின்னஞ்சல் வழியாக கூட அனுப்பலாம். வாடிக்கையாளர்களை, தங்கள் சேனலை பின்தொடர சொல்ல.. எளிதான வழியை தேடும் பிஸ்னஸ் அடிப்படையிலான வாட்ஸ்அப் சேனல்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கடந்த மாதம் வாட்ஸ்அப்பில் 2 புதிய வீடியோ கால் அம்சங்கள் அறிமுகமானதும், ஸ்டேட்டஸ் அப்டேட்டிற்கான (Status Update) புதிய அம்சங்களின் கீழ் லைக் (Like), மென்ஷன்டு (Mentioned) மற்றும் ரீஷேர் (Reshare) போன்ற விருப்பங்கள் சேர்க்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் வீடியோ கால்களுக்கான புதிய அம்சங்களை பொறுத்தவரை, புதிய ஃபில்டர்கள் மற்றும் பேக்கிரவுண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவைகள் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. ஒருவேளை இன்னுமும் இந்த அம்சங்கள் உங்களுக்கு அணுக கிடைக்கவில்லை என்றால்.. நீங்கள் பல வாரங்களாக உங்களுடைய வாட்ஸ்அப் ஆப்பை அப்டேட் செய்யவில்லை என்று அர்த்தம். கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யவும்.

லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு மாறியதும் வார்ம் (Warm), கூல் (Cool), பிளாக் & ஒயிட் (Black & White), லைட் லீக் (Light Leak), ட்ரீமி (Dreamy), ப்ரிஸம் லைட் (Prism Light), ஃபிஷ்ஐ (Fisheye), விண்டேஜ் டிவி ( Vintage TV), ஃப்ரோஸ்டட் கிளாஸ் (Frosted Glass) மற்றும் டியோ டோன் (Duo Tone) போன்ற 10 புதிய வீடியோ கால் ஃபில்டர்கள் உங்களுக்கு கிடைக்கும்.

இதேபோல ப்ளர் (Blur), லிவிங் ரூம் (Living Room), ஆபீஸ் (Office), கஃபே (Cafe), பெபல்ஸ் (Pebbles), ஃபுடி (Foodie), ஸ்மூஷ் (Smoosh), பீச் ( Beach), சன்செட் ( Sunset), செலிப்ரேஷன் (Celebration) மற்றும் ஃபாரஸ்ட் (Forest) உள்ளிட்ட 10 புதிய பேக்கிரவுண்ட் விருப்பங்களும் உங்களுக்கு கிடைக்கும். மேலும் நீங்கள் மேற்கொள்ளும் வாட்ஸ்அப் வீடியோ கால்களின் தரத்தை மேம்படுத்த டச்-அப் மற்றும் லோ-லைட் ஃபில்டர்களையும் பெறுவீர்கள்!

More from GizBot

Best Mobiles in India

English summary
New WhatsApp Feature Allows Users Quickly to Share View Follow Channels Using QR Code
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X