சோனி நிறுவனம் அறிமுகம் செய்த புதிய வி.ஆர் கண்ட்ரோலர்.!
சோனி நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டு அனைத்து சாதனங்களும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளன. இந்நிலையில் சோனி நிறுவனம்
பிளே ஸ்டேஷன் 5 கன்சோல்களில் பயன்படுத்த புதிய வி.ஆர் கண்ட்ரோலர்களை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக புதிய வி.ஆர் கண்ட்ரோலர்கள் ஆனது ஆர்ப் வடிவம் கொண்டுள்ளன. மேலும் இந்த சாதனம் ஆகுலஸ் குவெஸ்ட் 2 கண்ட்ரோலர்களை போன்றே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த வி.ஆர் கண்ட்ரோலர்களில் கட்டை விரல் படும் பகுதியில் ட்ரிகர் பட்டன் மற்றும் சிறு ஜாய் ஸ்டிக் உள்ளது. பின்பு கண்ட்ரோலர்கள் வழங்கும் வித்தியாசமான அம்சங்களை சோனி நிறுவனம் தனது வலைதளத்தில் விரிவாக பட்டியலிட்டு இருக்கிறது.

மேலும் கடந்த மாதம் பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கான அடுத்த தலைமுறை வி.ஆர் ஹெட்செட் உருவாக்கப்பட்டு வருவதாக சோனி டீசர்களில் தெரிவித்தது. தற்சமயம் இவற்றுடன் பயன்படுத்தக்கூடிய கண்ட்ரோலர்களை மட்டுமே சோனி அறிமுகம் செய்துள்ளது என்பது
குறிபிடத்தக்கது. சோனி நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

குறிப்பாக இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களை விட மற்ற சாதனங்களை அறிமுகம் செய்வதில் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி இந்நிறுவனம் இந்திய சந்தையில் SRS-RA3000 வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வகை ஸ்பீக்கர் ஆனது ஸ்பீக்கர் 360-டிகிரி ரியாலிட்டி ஆடியோ தொழில்நுட்பத்தை வழங்குகிறது. எனவே இது ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வகை ஸ்பீக்கர் ஆனது ஸ்பீக்கர் 360-டிகிரி ரியாலிட்டி ஆடியோ தொழில்நுட்பத்தை வழங்குகிறது. எனவே இது ஒரு சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வயர்ஸ்லெஸ் ஸ்பீக்கர் மாடலில் குரோம்காஸ்ட் பில்ட்-இன், ஸ்பாடிபை கனெக்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய சோனி சாதனம் நாளை முதல் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் இந்த ஸ்பீக்கரில் உள்ள 360 டிகிரி ரியாலிட்டி ஆடியோ தொழில்நுட்ப வசதி ஆனது 3 பரிணாம ஆடியோக்களை இயக்க வழிவகை செய்கிறது. பின்பு இது உங்களது அறை முழுக்க அசத்தலான ஆடியோ அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ள ஆட்டோ-வால்யூம் வசதியானது அடுத்து வரும் பாடல் அல்லது இசைக்கு தகுந்தபடி சத்தத்தை மாற்றிமைக்கிறது. பின்பு இந்த சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடலை கூகுள் ஹோம் அல்லது அமேசான் அலெக்சா செயலி கொண்டு ஸ்பீக்கர் குரூப்பில் சேர்த்து மல்டி-ரூம் ஆடியோ போன்று பயன்படுத்தலாம்.

சோனி SRS-RA3000 வயர்லெஸ் ஸ்பீக்கர் மாடல் ஆனது சோனி விற்பனை மையங்கள், அமேசான் வலைத்தளம் மற்றும் இதர முன்னணி வலைத்தளங்களில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.19,990- ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications