Home
News

ஆடிப்போன அம்பானி, மிட்டல்... ரூ.6 செலவில் Vodafone விட்ட பிரம்மாஸ்திரம்.. 1 ஆண்டுக்கு டேட்டா, SMS, வாய்ஸ்!

இந்திய டெலிகாம் சந்தையில் - மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited - VIL) ஆனது அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய 1 ஆண்டு திட்டத்தை சத்தம் இல்லாமல், மிகவும் அமைதியான முறையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டம் நீண்ட கால செல்லுபடியாகும் திட்டத்தை விரும்புவோருக்கானது, ஆனால் அதிக டேட்டாவை வழங்கவில்லை. ஆனாலும் இது டேட்டா நன்மையுடன் வரும் மற்ற வருடாந்திர திட்டங்களை விட மலிவானதாக இருக்கிறது. இந்த திட்டத்தின் விலை என்ன? 1 ஆண்டுக்கு என்னென்ன நன்மைகளை வழங்கும்?

ரூ.6 செலவில் Vodafone விட்ட பிரம்மாஸ்திரம்.. 1 ஆண்டுக்கு!

வோடபோன் ஐடியா சைலன்ட் ஆக அறிமுகம் செய்துள்ளது ரூ.2249 ப்ரீபெய்ட் திட்டத்தை தான். வோடபோன் ஐடியாவின் ரூ.2249 திட்டம் பெரும்பாலான வட்டங்களில் உள்ள பயனர்களுக்கு வரம்பற்ற வாய்ஸ் காலிங், மொத்தம் 3600 எஸ்எம்எஸ்கள் மற்றும் 30 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

இமாச்சல பிரதேசத்தில் மட்டும் இதே திட்டம் சற்று மாறுபட்ட நன்மைகளை கொண்டுள்ளது. அங்குள்ள பயனர்கள் மற்ற வட்டங்களில் வழங்கப்படும் 30 ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 40 ஜிபி டேட்டாவை பெறுவார்கள். மற்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் கூட பயனர்கள் 40 ஜிபி டேட்டாவை பெறலாம். ஆக ரீசார்ஜ் செய்வதற்கு முன்பாக, அதை சரிபார்க்கவும்.

வோடபோன் ஐடியா அனைத்து வட்டங்களிலும் இந்த திட்டத்தை வழங்குகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, இது நியாயமான விலையில் நீண்ட கால செல்லுபடியை விரும்பும் மக்களுக்கான திட்டமாகும். அடிப்படை பயன்பாடு மட்டும் இருந்தால் 30ஜிபி என்பது போதுமான டேட்டாவாக இருக்கும். இந்த திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவு ரூ.6.16 ஆகும். இது - டேட்டாவுடன் கூடிய வருடாந்திர திட்டங்களுக்கு பயனர்கள் செலுத்த வேண்டியதை விட மிகவும் மலிவாகும்

ஒருவேளை இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி முடிவதற்குள் 30ஜிபி அல்லது 40ஜிபி டேட்டா தீர்ந்துவிட்டாலும், பயனர்கள் டேட்டா நன்மைகளை மட்டுமே வழங்கும் டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்யலாம். ஏனென்றால் டேட்டா ஒதுக்கீடு முடிந்த பிறகு டேட்டா, இந்த திட்டத்தின் கீழ் 50 பைசா/எம்பி என்கிற கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்எம்எஸ் லிமிட் தீர்ந்துவிட்டால் கூட உள்ளூர்/எஸ்டிடி எஸ்எம்எஸ்-க்கு ரூ.1/1.5 வசூலிக்கப்படும்.

சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனமானது, ​​ராஜஸ்தான் மற்றும் சில வட்டங்களில் ஒரு புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்து இருந்தது. டெலிகாம்டால்க் (TelecomTalk) அறிக்கையின்படி, வோடாபோன் நிறுவனம் இந்த திட்டத்தை எல்லா இடங்களிலும் அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்கிறது. அது ரூ.419 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும்.

வோடபோன் ஐடியா ரூ.419 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: வோடபோன் ஐடியாவின் ரூ.419 திட்டம் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி (28 Days Service Validity) உடன் வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் குறைவாக உள்ளது, ஆனால் பயனர்கள் இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) பெறுகிறார்கள்.

இங்கே அன்லிமிடெட் டேட்டா என்றால் - 28 நாட்களுக்கு 300 ஜிபி அதிவேக டேட்டா ஆகும். 300ஜிபி என்பது தான் ஹை ஸ்பீட் டேட்டா (300GB High Speed Data) லிமிட் ஆகும். அதன் பிறகு, பயனர்கள் தொடர்ந்து டேட்டா நன்மைகளை அனுபவிக்க முடியும், ஆனால் அது 100 கேபிபிஎஸ் என்கிற வேகத்தில் கூட வழங்கப்படாது.

டேட்டா நன்மை உடன் சேர்த்து வி ரூ.419 திட்டத்தின் கீழ் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை - இது 28 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) மற்றும் வி மூவிஸ் & டிவிக்கான (Vi Movies and TV) சந்தாக்களையும் இலவசமாக வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Vodafone Idea Rs 2249 Plan With 1 year Validity Daily cost this plan is Rs 6 Only
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X