அம்பானி ஜி பார்த்து கத்துக்கோங்க.. ரீசார்ஜ் செஞ்ச 7 நாள் குள்ள பண்ணனும்.. பண்ணா? Vodafone-ன் அடேங்கப்பா ஆபர்!
ரிலையன்ஸ் ஜியோ (Jio) மற்றும் பார்தி ஏர்டெலுக்கு (Airtel) கீழே இருக்கும்.. அதாவது நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டராக இருக்கும் வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea) நிறுவனமானது, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே வழங்கிடாத ஒரு ஆபரை வழங்குகிறது.
இந்த ஆபர் எப்ஆர்சி (FRC) என்று அழைக்கப்படும் பர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பன்கள் (First recharge coupons) மீது கிடைக்கிறது. அதாவது வோடபோன் ஐடியாவின் கீழ் இணையும் புதிய சந்தாதாரர்கள் செய்யும் முதல் ரீசார்ஜ் மீது கிடைக்கிறது. புதிய வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் தங்கள் போன்களில் விஐ ஆப்பை (Vi App) டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் இந்த பயனை பெறலாம்.

புதிய கஸ்டமர்களின் விஐ அக்கவுண்டில் 5ஜிபி போனஸ் டேட்டா (5GB Bonus Data) மொத்தமாக கிரெடிட் செய்யப்படும். இந்த இலவச டேட்டாவை பெற, தகுதியான சந்தாதாரர் தங்கள் விஐ அக்கவுண்ட்டிற்குள் லாக்-இன் செய்ய வேண்டும். குறிப்பாக 7 நாட்களுக்குள் விஐ ஆப்பில் உள்ள 5ஜிபி பேனரை கிளிக் செய்து தங்களுக்கான இலவச டேட்டாவை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனென்றால் 7 நாட்களுக்குப் பிறகு, விஐ பஆப்பில் குறிப்பிட்ட பேனர் இருக்காது. பேனரை கிளிக் செய்த பின், 5ஜிபி போனஸ் டேட்டாவானது 30 நிமிடங்களுக்குள் பயனரின் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும். அதை அவர்கள் பயன்படுத்த தொடங்கலாம். ஒவ்வொரு புதிய விஐ சந்தாதாரரும் இந்த போனஸ் டேட்டா ஆபரை ஒருமுறை மட்டுமே கோர முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த 5ஜி போனஸ் டேடேடே ஆபரை விஐ ஆப் மூலம் மட்டுமே கோர முடியும். மேலும், இந்த 5ஜிபி டேட்டாவானது ஏழு நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்; 7 நாட்களுக்கு பிறகு இந்த டேட்டா காணாமல் போய்விடும். இந்த சலுகையானது நாட்டில் உள்ள அனைத்து டெலிகாம் பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்கிறது.
முன்னதாக டிராய்-ன் உத்தரவிற்கு இணங்கி, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை போலவே, வோடாபோன் ஐடியாவும் 2 புதிய வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்களை அறிமுகம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அவைகள் ரூ.470 மற்றும் ரூ.1849 திட்டங்கள் ஆகும்
வோடாபோன் ஐடியா ரூ.470 வாய்ஸ் எஸ்எம்எஸ் ஒன்லி பிளானின் கீழ் கிடைக்கும் நன்மைகளை (Vodafone Idea Rs 470 Voice and SMS Only Plan Details) பொறுத்தவரை, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
வோடாபோன் ஐடியா ரூ.1849 வாய்ஸ் எஸ்எம்எஸ் ஒன்லி பிளானின் கீழ் கிடைக்கும் நன்மைகளை (Vodafone Idea Rs 1849 Voice and SMS Only Plan Details) பொறுத்தவரை, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
இதேபோன்ற விலையில் தான் பார்தி ஏர்டெல் நிறுவனமும் அதன் பயனர்களுக்காக வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வோடாபோன் ஐடியாவானது, ஏர்டெல்-ஐ பார்த்து அதன் கட்டண முறைகளை காப்பி அடிக்கும் பழக்கத்தை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது.
நினைவூட்டும் வண்ணம், ஏர்டெல்லின் ரூ.469 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது. இதேபோல ரூ.1849 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்களை 365 நாட்களுக்கு வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








