இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் விவோ ஸ்மார்ட்போன்கள்.!
விவோ எக்ஸ்20 மற்றும் விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
விவோ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விவோ எக்ஸ்20 மற்றும் விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் எனத் தெரிவத்துள்ளது. விரைவில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும்.
இதற்குமுன்பு விவோ எக்ஸ்பிளே6 ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்பட்டது. மேலும் விவோ எக்ஸ்20 மற்றும் விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என விவோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

18:9 திரைவிகிதம்:
விவோ எக்ஸ்20 மற்றும் விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் பொதுவாக 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு வெளிவரும், அதன்பின்பு
இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660:
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற வாய்ப்பு உள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும்.

4ஜிபி ரேம்:
விவோ எக்ஸ்20 மற்றும் விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும், அதன்பின்பு
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டூயல் கேமரா:
இரண்டு ஸ்மார்ட்போன்களில் 12எம்பி 105எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 12எம்பி டூயல் செல்பீ கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும்.

விலை:
விவோ எக்ஸ்20 மற்றும் விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் முறையே ரூ.30,000 மற்றும் ரூ.35,000 விலை நிர்ணயம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications