வீடியோ அனுப்பும் போது தெரியும்.. WhatsApp-க்கு வந்த YouTube அம்சம்.. இது எப்படி வேலை செய்யும்?
பிரபல வீடியோ ஷேரிங் பிளாட்ஃபார்ம் (Video Sharing Platform) ஆன யூட்யூபில் (YouTube) ஏற்கனவே அணுக கிடைக்கும் ஒரு அம்சம், பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் (Instant Messaging Platform) ஆன வாட்ஸ்அப்பில் (WhatsApp) சேர்க்கப்பட்டுள்ளது. அதென்ன அம்சம்? இது எப்படி வேலை செய்யும்? இதனால் என்ன பயன்? இதோ விவரங்கள்:
அதென்ன அம்சம்? நாம் இங்கே பேசுவது வாட்ஸ்அப் வழியாக வீடியோக்களை பார்க்கும் பயனர்களுக்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கும் புதிய வீடியோ அம்சத்தை பற்றித்தான். வழக்கமாக வாட்ஸ்அப் வழியாக ஒரு வீடியோ பார்க்கும் போது, அதை பின்னோக்கி நகர்த்தவும் அல்லது முன்னோக்கி செல்லவும், வீடியோவின்கீழ் அணுக கிடைக்கும் ப்ராக்ரெஸ் பார்-ஐ (Progress Bar) தானே பயன்படுத்துவோம்.

இனிமேல் அந்த ப்ராக்ரெஸ் பாருக்கு வேலை இருக்காது. ஏனென்றால் வாட்ஸ்அப்பில் வீடியோக்களை ரிவைண்ட் மற்றும் ஃபார்வர்டு (Rewind and Forward) செய்ய உதவும் அம்சம் கூடிய விரைவில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது வரையிலாக சோதனை கட்டத்தில் (Testing Stage) உள்ள இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 2.23.24.6-க்கான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Android 2.23.24.6 WhatsApp Beta Version) அணுக கிடைக்கிறது.
வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள இந்த புதிய வீடியோ பிளேபேக் கண்ட்ரோல்கள் (Video Playback Controls), வீடியோக்களின் மிக முக்கியமான பகுதிகளை விரைவாக மற்றும் எளிமையாக சென்றடைய உதவும் என்பதிலும், இது வாட்ஸ்அப் பயனர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதிலும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
எத்தனை வினாடிகளுக்கு ரிவைண்ட் மற்றும் ஃபார்வர்டு செய்ய முடியும்? வாட்ஸ்அப் நிறுவனம் இப்படியொரு புதிய அம்சத்தை டெஸ்டிங் செய்து வருகிறது என்பதை முதன்முதலில் கண்டறிந்த டபுள்யூஏபீட்டாஇன்ஃபோவின் ( WABetaInfo) கூற்றுப்படி, இந்த புதிய வீடியோ பிளேபேக் கண்ட்ரோல்கள் ஆனது வாட்ஸ்அப்பில் உள்ள வீடியோக்களை 10 வினாடிகளுக்கு (10 Seconds) ரிவைண்ட் செய்யவும், ஃபார்வர்டு செய்யவும் அனுமதிக்கும்.

அதாவது (முன்னரே குறிப்பிட்டபடி) யூட்யூப் வீடியோக்களில் (YouTube Videos) உள்ள ரிவைண்ட் மற்றும் ஃபார்வர்டு கண்ட்ரோல்களை போலவேத்தான் இதுவும் செயல்படும். அறியாதோர்களுக்கு யூட்யூப் வீடியோக்களின் இடது புறம் மற்றும் வலது புறத்தில் டபுள் டாப் (Double Tap) செய்வதன் மூலம் அவைகளை ரிவைண்ட் மற்றும் ஃபார்வர்டு செய்யலாம்.
இது எப்போது அனைவருக்கும் கிடைக்கும்? தற்போது வரை இந்த அம்சம் பீட்டா டெஸ்டர்களுக்கு (Beta Testers) மட்டுமே அணுக கிடைக்கிறது. அதாவது இது இறுதிக்கட்ட சோதனையில் உள்ளது. இந்த புதிய வீடியோ பிளேபேக் பட்டன்கள் வரும் நாட்களில் மேலும் பல பயனர்களுக்கு அணுக கிடைக்கும். இருப்பினும், இது எப்போது அனைவருக்கும் கிடைக்கும் என்பது குறித்து போதுமான விவரங்கள் இல்லை!

புதிய பிளேபேக் கண்ட்ரோல்களை தவிர, வாட்ஸ்அப் நிறுவனமானது, ஆல்டர்நேட் ப்ரொபைல் (Alternative Profile) என்கிற புதிய ப்ரைவஸி அம்சத்திலும் (Privacy Feature) செயல்படுகிறது. இந்த அம்சம் உங்களுடைய ப்ரொபைல் போட்டோ (Profile Photo) போன்ற தகவல்களை மறைக்க உதவும் மற்றும் தங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் (Contact List) இல்லாதவர்களுக்கு வேறு புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தவும் அனுமதிக்கும்.
இதேபோல, வாட்ஸ்அப் நிறுவனம் பலவகையான புதிய அம்சங்களில் செய்லபடுகிறது. அவைகளில் - வாய்ஸ் நோட்ஸ் மற்றும் ஸ்டிக்கர்களை பகிர்வதற்கான புதிய வழி (New Way to Share Voice Notes and Stickers), ஒரே டிவைஸில் பல வாட்ஸ்அப் அக்கவுண்ட்களுக்கான ஆதரவு (Multiple accounts on a single device), வாட்ஸ்அப் கால்களின் போது ஐபி அட்ரெஸை பாதுகாக்க உதவும் புதிய அம்சம் (new protect IP address feature) போன்றவைகள் கவனிக்கப்பட வேண்டிய அப்டேட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications