Home
News

புது ரூல்ஸ்.. கால் சேவை.. ஏப்.15 கெடு.. ஜியோ, ஏர்டெல், வோடபோன்.. இதை நிறுத்துங்க.. இந்திய அரசு போட்ட உத்தரவு!

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏப்ரல் 15 கெடு விதித்த மத்திய அரசானது, இதுவரை பயன்படுத்திய முக்கிய சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இதனால், கஸ்டமர்களுக்கு வழங்கப்படும் சேவையில் என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்குவதால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. ஆதார்-பேன் இணைப்பு, பேங்க் மினிமம் பேலன்ஸ், ரயில்வே கியூஆர் கோட் சேவை, பேங்க் கிரெடிட் கார்டு ரூல்ஸ் என்று ஏகப்பட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

புது ரூல்ஸ்.. கால் சேவை.. ஏப்.15 கெடு.. ஜியோ, ஏர்டெல் இத நிறுத்துங்க!

இந்த மாற்றங்களே சாமானிய மக்களைடையே நேரடி மாற்றங்களை கொண்டுவரும் என்று சொல்லி வாயை மூடும் நேரத்தில், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்புத் துறையானது (Department of Telecommunications) புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.

இந்த விதிகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அந்தந்த நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டன. இது, கஸ்டமர்களை அறக்க பறக்க செய்துள்ளது. அப்படியென்ன புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவர்களுக்கும் இந்த விதி பொருந்தும். அதாவது, யுஎஸ்எஸ்டி அடிப்படையிலான அழைப்பு பகிர்தலை (USSD Based Call Forwarding ) நிறுத்துமாறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதோடு மற்று வழிகளில் இந்த சேவையை வழங்க உத்தரவிட்டுள்ளது.

புது ரூல்ஸ்.. கால் சேவை.. ஏப்.15 கெடு.. ஜியோ, ஏர்டெல் இத நிறுத்துங்க!

இந்த யுஎஸ்எஸ்டி (USSD) கோட்கள், ப்ரீபெய்ட் பேலன்ஸ் செக் செய்வது முதல் ஸ்மார்ட்போனின் ஐஎம்ஈஐ (IMEI) நம்பரை தெரிந்துகொள்வது வரையில் பயன்படுபடுத்தப்படுகிறது. அதேபோல கால் பார்வர்டிங் (Call Forwarding) போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த கால் பார்வர்டிங் யுஎஸ்எஸ்டி மூலம் எளிதாக ஒருவருக்கு வரும் கால்களை மற்றொருவருக்கு மாற்ற முடியும்.

இது, ஒரிஜினல் நம்பர் வைத்திருக்கும் நபருக்கே தெரியாமல் செய்து கொள்ள முடியும். இதனால், மத்திய தொலைத்தொடர்பு துறையானது, கஸ்டமர்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த யுஎஸ்எஸ்டி அடிப்படையிலான கால் பார்வர்டிங் சேவையை நிறுத்த சொல்லி இருக்கிறது. மறு அறிவிப்பு வரும் வரையில் இந்த சேவையை தொடர கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஆகவே, வரும் ஏப்ரல் 15ஆம் தேதியில் இருந்து, யுஎஸ்எஸ்டி கால் பார்வர்டிங் சேவை நிறுத்தப்பட இருக்கிறது. ஆனால், மாற்று வழியில் அந்த சேவையை தொடங்கலாம் என்றும் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்புத் துறையானது, இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

டெலிகாம் கஸ்டமர்கள் யாரும் *401# எண்ணுக்கு டயல் செய்ய வேண்டாம். இந்த *401# எண்ணானது, அன்கண்டிஷனல் கால் பார்வர்டிங் (Unconditional Call Forwarding) சேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. இதை வைத்து கஸ்டமர் கேரில் இருந்து கால் செய்வதுபோல யாரேனும் உங்களை அனுகி *401# எண்ணுக்கு கால் செய்ய சொன்னால், அதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டது.

ஆனால், இப்போது நேரடியாக டெலிகாம் நிறுவனங்களுக்கே உத்தரவிட்டு அந்த சேவையை நிறுத்த சொல்லி விட்டது. ஆகவே, ஏப்ரல் 15ஆம் தேதி வரையில் மட்டுமல்லாமல், இப்போதில் இருந்தே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற எந்தவொரு டெலிகாம் கஸ்டமர்களும் தேவையற்று *401# எண்ணுக்கு டயல் செய்யாமல் இருப்பது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New USSD Based Call Forwarding Rules For Jio, Airtel Vodafone Idea From April 15 Government Mandates
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X