Home
News

இன்று முதல் ஆரம்பம்.. ஆதார் உடன் இணையும் UPI அக்கவுண்ட்.. PIN நம்பர் போட்டு பணம் அனுப்பும் முறையில் மாற்றம்!

இன்று முதல் (2025 அக்டோபர் 8 ஆம் தேதி) முதல் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) ஆப்களில் பணம் பரிமாற்றம் செய்வதற்கான புதிய செயல்முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது புதிய யுபிஐ சரிபார்ப்பு செயல்முறைக்கான (UPI verification process) வழிகாட்டுதலை வெளியிட்டு உள்ளதால், யுபிஐ சேவை வழியாக பணம் அனுப்புவது தொடர்பாக ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் ஆரம்பம்.. ஆதார் உடன் இணையும் UPI அக்கவுண்ட்!

தற்போது வரையிலாக, யுபிஐ ஆப்களில் நாம் செய்யும் பான் பரிவர்த்தனைகளுக்கான கடைசி செயல்முறை - யுபிஐ பின் நம்பரை உள்ளிடுவது தான். ஆனால் ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி இது விரைவில் மாறக்கூடும்.

என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ ஆப்களுக்கான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன்கீழ் முகம் மற்றும் கைரேகை அங்கீகாரம் (Facial and fingerprint authentication) சேர்க்கப்பட உள்ளன. இந்த பயோமெட்ரிக்ஸ் வசதியானது பின் நம்பர் அடிப்படையிலான யுபிஐ அங்கீகாரத்திற்கு மாற்றாக பயன்படுத்தப்பட உள்ளது.

ஆன்லைன் கட்டணங்களுக்கான இந்த புதிய பயோமெட்ரிக் அங்கீகாரம் ஆனது - போன்பே, பேடிஎம் மற்றும் ஜிபே (GPay) போன்ற யுபிஐ கட்டண சேவைகளில் இன்று, அக்டோபர் 8 முதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழ் "பழைய" 4 இலக்க பின் நம்பர் செயல்பாட்டில் இருக்கும் அதே வேளையில், "புதிய" முகம் மற்றும் கைரேகை அங்கீகாரத்தையும் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுபிஐ ஆப்களுக்கு வரும் இந்த பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் யுபிஐ பயனர்களுக்கு என்ன நன்மைகள்?
1. யுபிஐ ஆப்களுக்கான புதிய பயோமெட்ரிக் அங்கீகாரம் ஆனது விரைவான கட்டண செயல்முறையை கொண்டுவரும்
2. பயோமெட்ரிக்ஸை பயன்படுத்துவது மிகவும் தடையற்றதாகவும் தொந்தரவில்லாததாகவும் இருக்கும். இது பின் நம்பருக்கு மாற்றாக இருக்கும், மேலும் யுபிஐ பின் நம்பரை மாற்றுவதற்கான ஆதார்-ஓடிபி செயல்முறையையும் நீக்கும்.
3. இது பயனரின் ஆதார் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என்பதால், இது பல யுபிஐ தொடர்பான மோசடிகள் மற்றும் பின் நம்பர் தொடர்பான மோசடிகளை எதிர்த்து போராட உதவும்.

யுபிஐ ஆப்களுக்கு வரும் இந்த புதிய பயோமெட்ரிக் அங்கீகாரம் ஆனது இந்தியாவின் அடையாள அமைப்பான ஆதாரால் (Aadhaar) ஆதரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே யுபிஐ ஆப்களில் குறிப்பிட்ட அங்கீகாரங்கள் ஏற்கனவே ஆதார் கட்டமைப்பின் கீழ் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக்ஸை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

யுபிஐ ஆப்பிற்கான புதிய பயோமெட்ரிக் அம்சம் - மும்பையில் நடைபெறும் குளோபல் ஃபின்டெக் விழாவில் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து என்பிசிஐ கூறுகையில், "ஒவ்வொரு பரிவர்த்தனையும் வலுவான கிரிப்டோகிராஃபிக் செக்ளை பயன்படுத்தி வழங்கும் வங்கியால் சுயாதீனமாக சரிபார்க்கப்படுகிறது, இது பணபரிமாற்ற அனுபவத்தை எளிமையாகவும் தடையின்றியும் வைத்திருக்கும் அதே வேளையில் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது"

இதேபோல யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, வருகிற நவம்பர் 15, 2025 முதல், ஃபாஸ்டாக் பயன்படுத்தாத வாகன உரிமையாளர்கள் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தி பணம் செலுத்த தேர்வுசெய்யும்போது வழக்கமான சுங்கத்தொகையை விட 1.25 மடங்கு அதிகம் செலுத்த வேண்டும். இந்த தொகை ரொக்கமாக செலுத்துபவர்களை விட ஒப்பீட்டளவில் குறைவு ஆகும்

அறியாதோர்களுக்கு - ரொக்கமாக செலுத்தினால், செல்லுபடியாகும் ஃபாஸ்டாக் இல்லாத வாகன உரிமையாளர்கள் பொருந்தக்கூடிய பயனர் கட்டணத்தை விட இரு மடங்கு செலுத்த வேண்டும். ஆக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ள இந்த மாற்றம் - யுபிஐ வழியாக பணம் செலுத்துவோர்களுக்கு லாபகரமான வழியாக இருப்பதோடு சேர்த்து, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI Verification Process From RBI NPCI Google Pay PhonePe Paytm Get Face Fingerprint Scan Today
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X