Home
News

Google Pay, Paytm யூசர்களே கவனம்! இனி புதிய லிமிட்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. யாருக்கு எல்லாம் லாபம்?

யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) பரிவர்த்தனை தொடர்பான புதிய வரம்பை (New Limit) ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதென்ன வரம்பு? ஆர்பிஐ-யின் இந்த புதிய வரம்பானது எந்தெந்த பரிவர்த்தனைக்கு பொருந்தும்? இதோ விவரங்கள்:

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை (Digital payments) அதிகரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான யுபிஐ பரிவர்த்தனைக்கான வரம்பை (UPI Transaction Limit) கணிசமான அளவில் உயர்த்தியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அறிவித்துள்ளது. இந்த புதிய வரம்பானது உடனடியாக அமலுக்கும் வருகிறது.

புதிய லிமிட்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. யாருக்கு எல்லாம் லாபம்

நினைவூட்டும் வண்ணம் முந்தைய வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது, தற்போது இது ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இதுவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இது புதிய மாற்றம், பரவலாக பயன்படுத்தப்படும் யுபிஐ இயங்குதளத்தின் வழியாக, சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான செலவினங்களை செய்யும் பயனர்களால் அதிக அளவிலான பணத்தை மிகவும் எளிதாக செலுத்த முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் சந்தாக்கள் (Mutual Fund Subscriptions), இன்சூரன்ஸ் பிரீமியம் பேமண்ட்ஸ் (Insurance Premium Payments) மற்றும் கிரெடிட் கார்டு ரீபேமண்ட்ஸ் (Credit Card Repayments) போன்ற பரிவர்த்தனைகளுக்கு இந்த வரம்பு, தற்போதுள்ள ரூ.15,000 இல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய லிமிட்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. யாருக்கு எல்லாம் லாபம்

ஆர்பிஐ-யின் புதிய யுபிஐ லிமிட் முடிவை, வங்கியாளர்கள் (Bankers), பேமண்ட் நிறுவனங்கள் (Payment companies) மற்றும் மருத்துவமனைகள் (Hospitals) மற்றும் கல்வி (Educational) மையங்கள் வரவேற்றுள்ளன. குறிப்பாக ஸ்டேட் பேங்கின் (State Bank ) தலைவர் ஆன தினேஷ் காரா (Dinesh Khara), இந்த நடவடிக்கை யுபிஐ சேவையை உண்மையிலேயே ஒரு பொது நன்மையாக வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து பேசிய ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் (Standard Chartered Bank) சிஇஓ-வான ஜரின் தருவாலா (Zarin Daruwala), மேம்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை வரம்பானது டிஜிட்டல் பேமெண்ட் சேனல்களின்.. அதாவது கூகுள்பே (Google Pay), பேடிஎம் (Paytm) போன்றவைகளின் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.

புதிய லிமிட்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. யாருக்கு எல்லாம் லாபம்

ஆர்பிஐ-யின் புதிய யுபிஐ லிமிட் பற்றி, எக்ஸ்பீரியன் கிரெடிட்டின் சாய்கிருஷ்ணன் சீனிவாசன் (Saikrishnan Srinivasan of Experian Credit ) கூறுகையில், அதிக யுபிஐ கட்டண வரம்புகள் மற்றும் தொடர்ச்சியான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான இ-மேன்டேட் வரம்பின் (e-mandate limit) அதிகரிப்பானது நுகர்வோர்கள் எந்த தடையும் இல்லாமல் பணம் செலுத்த உதவும் என்று கூறியுள்ளார்.

மேற்கண்ட மாற்றங்களோடு சேர்த்து ரிசர்வ் வங்கியானது "ஃபின்டெக் ரெப்போஸிட்டரியை" (Fintech Repository) வருகிற 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவுவதாகவும் அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இன்னோவேஷன் ஹப்பால் நிர்வகிக்கப்படும் இந்த முயற்சி, ஃபின்டெக் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களின் மையக்களஞ்சியமாக செயல்படும்.

இது ஃபின்டெக் நிறுவனங்களின் தன்னார்வ பங்கேற்பை ஊக்குவிக்கும் மறுகையில் ஃபின்டெக் துறைக்கான புரிதல் மற்றும் ஆதரவை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், நிதித் துறையில் (Financial sector) கிளவுட் தொழில்நுட்பங்கள் (Cloud Technologies) மீது வளர்ந்து வரும் நம்பகத்தன்மையை உணர்ந்து, இந்த தொழில்துறைக்கான பிரத்யேக கிளவுட் வசதியை (Cloud Facility) உருவாக்கும் திட்டங்களையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த முன்முயற்சியானது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் கையாளப்படும் தரவு அளவுகளை (Data volumes) நிவர்த்தி செய்யும், கூடவே மேம்படுத்தப்பட்ட தரவு பாதுகாப்பு (Enhanced data security) ஒருமைப்பாடு மற்றும் தனியுரிமை (Integrity and Privacy) ஆகியவற்றையும் உறுதிப்படுத்துகிறது.

ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் புதிய யுபிஐ லிமிட் ஆனது உண்மையிலேயே பொது மக்களுக்கு பலன் அளிக்குமா? நன்மை பயகுமா? ரிசர்வ் வங்கியின் இதர முன்முயற்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்களுடைய கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI Transaction Limit RBI to improve Digital payments in Hospital Education Sector
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X