அமலுக்கு வந்தது புது UPI செட்டில்மென்ட் ரூல்ஸ்.. Google Pay, PhonPe வழியாக பணம் அனுப்புபவர்கள் கவனத்திற்கு!
கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ (UPI) ஆப்களை பயன்படுத்தி பணம் அனுப்புவது தொடர்பான முக்கிய மாற்றம் இன்று (நவம்பர் 3 ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் கீழ் புதிய யுபிஐ செட்டில்மென்ட்ஸ் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ செட்டில்மென்ட்களை - அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (Authorised transactions) மற்றும் விவாதத்திற்கு உரிய பரிவர்த்தனைகள் (Dispute transactions) என இரண்டாக பிரிப்பதாக அறிவித்து உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (ஆத்தரைஸ்டு செட்டில்மென்ட்) என்றால் என்ன? அங்கீகரிக்கப்பட்ட யுபிஐ செட்டில்மென்ட் என்பது யுபிஐ பரிவர்த்தனையின் இறுதி கட்டமாகும். இதில் பணம் செலுத்துபவரின் வங்கி கணக்கிலிருந்து பெறுநரின் வங்கி கணக்கிற்கு சரியான முறையில் எந்த சிக்கலும் இல்லாமல் நிதி மாற்றப்படும்.
விவாதத்திற்கு உரிய பரிவர்த்தனைகள் (டிஸ்ப்பியூட் செட்டில்மென்ட்) என்றால் என்ன? விவாதத்திற்கு உரிய யுபிஐ பரிவர்த்தனைகள் என்பது யுபிஐ பரிவர்த்தனையில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான முறையான செயல்முறையாகும். அதாவது பணம் செலுத்துவதில் தோல்வி தவறான பேமண்ட்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் போன்றவைகள் டிஸ்ப்பியூட் செட்டில்மென்ட் ஆகும்
முன்னதாக யுபிஐ ஆர்டிஜிஎஸ் (UPI RTGS) மூலம் ஒரு நாளைக்கு 10 செட்டில்மென்ட் சுழற்சிகள் செயல்படுத்தப்பட்டன. இதன்கீழ் ஒவ்வொரு சுழற்சியிலும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் விவாதத்திற்கு உரிய பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டும் அடங்கும். யுபிஐ வழியிலான பரிவர்த்தனைகளின் அளவானது நாளுக்கு நாள் கணிசமாக அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, தினசரி டெய்லி செட்டில்மென்ட் செயல்முறையை சரியான நேரத்தில் முடிக்க வசதியாக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் விவாதத்திற்கு உரிய பரிவர்த்தனைகள தனித்தனியாக பிரிக்கபட்டுள்ளது.
புதிய யுபிஐ செட்டில்மென்ட் சுழற்சிகளின் நேரம் குறித்த விவரங்கள்:
முதல் சுழற்சி: இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை அங்கீகரிக்கப்பட்ட செட்டில்மென்ட்
இரண்டாவது சுழற்சி: நள்ளிரவு முதல் காலை 5 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட செட்டில்மென்ட்
மூன்றாவது சுழற்சி: காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட செட்டில்மென்ட்
நான்காவது சுழற்சி: காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட செட்டில்மென்ட்
ஆறாவது சுழற்சி: காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட செட்டில்மென்ட்
ஏழாவது சுழற்சி: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட செட்டில்மென்ட்
எட்டாவது சுழற்சி: மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட செட்டில்மென்ட்
ஒன்பதாவது சுழற்சி: மதியம் 5 மணி முதல் இரவு 7 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட செட்டில்மென்ட்
பத்தாவது சுழற்சி: இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட செட்டில்மென்ட்
டிஸ்ப்பியூட் செட்டில்மென்ட் முதல் சுழற்சி: நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரை
டிஸ்ப்பியூட் செட்டில்மென்ட் இரண்டாவது சுழற்சி: மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை
மேலே உள்ள அட்டவணை காட்டுவது போல், 1 முதல் 10 வரையிலான செட்டில்மென்ட் சுழற்சிகள் ஆனது இப்போது அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளை மட்டுமே உள்ளடக்கும். இதன் விளைவாக, இந்த சுழற்சிகளில் எந்த டிஸ்ப்பியூட் செட்டில்மென்ட்களும் செயல்படுத்தப்படாது. மாறாக மேலே உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளபடி, கடைசி 2 சுழற்சிகளில் விவாதத்திற்கு உரிய பரிவர்த்தனைகள் தினமும் இரண்டு முறை செயல்படுத்தப்படும். இந்த சுழற்சிகள் டிஸ்ப்பியூட் பரிவர்த்தனைகளை மட்டுமே உள்ளடக்கும்.


Click it and Unblock the Notifications








