போச்சு.. UPI சேவையால் ATM சென்டர்களுக்கு வரும் மாற்றம்.. பணம் எடுக்கலாம்.. ஆனால்? RBI விதியால் வந்த வினை!
யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்டும் யுனிஃபைடு இன்டர்பேஸ் பேமெண்ட்ஸ் (Unified Payments Interface) சேவையானது ஏடிஎம் சென்டர்களுக்கு (ATM Centers) செக் வைத்துள்ளது. அதிக பணப்புழக்கம் இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ள வங்கிகள் தத்தம் ஏடிஎம்-களின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதாக கூறப்படுகிறது.
அதாவது வழக்கம் போல ஏடிஎம் சென்டர்களில் இருந்து பணம் எடுக்கலாம், ஆனால் பணம் எடுப்பதற்கு ஆங்காகே ஏடிஎம் சென்டர்கள் இருக்காது. இப்போது இருப்பது போல "தெருவுக்கு தெரு".. "தடுக்கி விழுந்தால் ஒரு ஏடிஎம் சென்டர்!" என்கிற நிலை மெல்ல மெல்ல மாறும் என்பது போல் தெரிகிறது.

நிலைமை இப்படியே சென்றால் இந்தியாவானது க்ளோபல் மாடலை (Global mode) பின்பற்ற வேண்டி இருக்கும் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர். க்ளோபல் மாடல் என்றால் - ஒரு கிளைக்கு 2 ஏடிஎம்கள், ஒரு ஆன்-சைட் மற்றும் ஒரு ஆஃப்-சைட் ஏடிஎம்களை கொண்டிருப்பது ஆகும். இப்படி செய்வதன் மூலம் வங்கிகளால் பிஸிக்கல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை சமநிலையில் வைத்திருக்க முடியும்.
ஏடிஎம் சென்டர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போவதற்கான முக்கிய காரணம் - மிகவும் எளிமையான முறையில் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் யுபிஐ சேவை தான் என்று எகனாமிக் டைம்ஸின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதாவது யாருமே ஏடிஎம் சென்டர்களுக்கு சென்று பணமெடுத்து, அதை கையில் வைத்துக்கொண்டு, தேவைப்படும் இடங்களில் ரொக்கமாக பணம் செலுத்த விரும்பவில்லை. மொபைலை எடுத்தோமா.. யுபிஐ கோட்-ஐ ஸ்கேன் செய்தோமா.. பணம் அனுப்பினோமா!" என்கிற பழக்கத்திற்கு, வழக்கத்திற்கு மாறிவிட்டனர்.
இதன் விளைவாக (ஆர்பிஐ தரவுகளின்படி) இந்தியாவில் ஏடிஎம்-களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் 2023 இல் 219,000 இல் இருந்து, இந்த 2024 செப்டம்பரில் 215,000 ஆக குறைந்துள்ளது. இந்த சரிவுக்கு, ஆஃப் சைட் ஏடிஎம்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க குறைப்பு தான் காரணம். இதன் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் 2023 இல் 97,072 என்பதில் இருந்து செப்டம்பர் 2024 இல் 87,760 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தில் ரொக்கம் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகித்தாலும் கூட ஏடிஎம் சென்டர்கள் இழுத்துமூடப்பட இன்னொரு முக்கியமான காரணமும் உள்ளது. அது ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) விதிமுறைகள் தான்
இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் (Free ATM transactions), இயங்கக்கூடிய தன்மை (Interoperability) மற்றும் பரிமாற்றக் கட்டணம் (Interchange fees) ஆகியவைகளில் இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு உள்ள விதிமுறைகள் ஆனது ஏடிஎம்களில் முதலீடு (ATM investments) செய்வதற்கான ஆர்வத்தை அப்டியே அமுக்கி விடுகின்றன.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க யுபிஐ சேவையை இன்னும் பலப்படுத்தும் மற்றும் ஒழுங்குபடுத்தும் புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள், ஒவ்வொரு மாதமும் அமலுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அப்படியாக இந்த 2024 நவம்பர் 1 ஆம் தேதி முதல் யுபிஐ லைட் சேவை தொடர்பான 3 புதிய விதிகள் அமலுக்கு வந்தன.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு (UPI Lite Transaction Limit) அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.500 ஆக இருந்தது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஆனது யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை ரூ.1,000 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் யுபிஐ லைட் வாலட் வரம்பும் (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடைசியாக யுபிஐ லைட் சேவையில் ஆட்டோ டாப்-அப் அம்சம் (Auto top-up feature) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் உங்களுடைய யுபிஐ லைட் பேலன்ஸ் (UPI Lite Balance) ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே சென்றால் ஆட்டோ டாப்-அப் அம்சம் வழியாக.. தானாகவே யுபிஐ லைட்டில் மீண்டும் பணம் சேர்க்கப்படும். அதாவது மேனுவல் டாப்-அப் (Manual top-up) செய்ய வேண்டிய அவசியமே இனி இருக்காது!


Click it and Unblock the Notifications








