ரூ.100 இருக்கா.. ரூ.500 இருக்கா.. இனிமே புது UPI ரூல்ஸ்.. ஆக்.1-க்கு அமலானது.. வரம்புக்கு மேல.. என்ன மாறியது?
ஆகஸ்ட் 1ஆம் தேதி புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இனிமேல் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்கள் மூலம் பரிவர்த்தனை செய்யும் கஸ்டமர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கப் போகின்றன. இதனால், முன்கூட்டியே இதை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் ரூ.100 இருக்கா அல்லது ரூ.500 இருக்கா என்று நினைத்த போதெல்லாம் பார்ப்பது இப்போது சிரமமாக இருக்கப் போகிறது. ஆனால், இதை குறிப்பிட்ட வரம்புக்குள் செய்தால், எந்த சிரமமும் உங்களுக்கு இருக்காது.
இந்த விதிகளை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) கொண்டுவந்துவிட்டதால், ஒட்டுமொத்த யுபிஐ (UPI) ஆப்கள், பேங்குகள் மற்றும் கஸ்டமர்களுக்கு இது பொதுவானதாக இருக்கிறது. இது பணத்தை அனுப்புவதற்கான வரம்பு ஒன்றும் கிடையாது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

இவ்வளவு பணம்தான் அனுப்ப வேண்டும், அதற்கு மேல் அனுப்பினால் ஜிஎஸ்டி இருக்கிறது என்றெல்லாம் நினைக்க வேண்டாம். உங்களது யுபிஐ ஆப்கள் மூலம் நீங்கள் வழக்கமாக செய்துவரும் சிலவற்றுக்கு மட்டுமே வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. முதலில் பேங்க் பேலன்ஸ் செக் செய்வதில் இருக்கும் கட்டுப்பாடுகளை தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் பரிவர்த்தனை செய்தாலே, பெரும்பாலும் சில்லறை பரிவர்த்தனைகளாகவே இருக்கும். அதாவது, பெட்டிக்கடைக்கு சென்று பால் பாக்கெட் வாங்குவது, மெடிக்கலுக்கு சென்று மாத்திரைகள் வாங்குவது, டீ கடைக்கு சென்று டீ குடிப்பது என்று ரூ.100 அல்லது ரூ.500 ஆகிய பட்ஜெட்டுக்குள் பல்வேறு பரிவர்த்தனைகள் செய்வோம்.

இதனால், அடிக்கடி பேங்க் பேலன்ஸை செக் செய்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இனிமேல் ஒரு நாளில் 50 முறைக்கு மேல் பேலன்ஸ் செக் செய்ய முடியாது. உங்களிடம் 2 யுபிஐ ஆப்கள் இருந்தால், ஒரு ஆப் மூலம் 50 முறையும், மற்றொரு ஆப் மூலம் 50 முறையும் செக் செய்து கொள்ள முடியும். ஒரே ஆப் இருந்தால், ஒரு நாளுக்கு 50 முறைக்கு மேல் பார்க்க முடியாது.
அதேபோல யுபிஐ மூலம் பணம் அனுப்புவதற்கு உங்களது மொபைல் நம்பருக்குடன் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டை செக் செய்திருப்பீர்கள். இதை இனிமேல் ஒரு நாளில் 25 முறை மட்டுமே செய்ய முடியும். இது ஒரேவொரு பேங்க் அக்கவுண்ட் மூலம் பரிவர்த்தனை செய்யும் கஸ்டமர்களுக்கு சிரமத்தை கொடுக்காது. பல அக்கவுண்ட்களை வைத்திருந்தால் வரம்பு சிரமமாக இருக்கலாம்.
யுபிஐ மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனையை செக் செய்வதிலும் வரம்புகள் வந்துவிட்டன. 2 மணி நேரத்தில் 3 முறை மட்டும் இனிமேல் பரிவர்த்தனையை செக் செய்ய முடியும். இதிலும் ஒவ்வொரு முறை செக் செய்வதற்கும் இடையில் 90 நொடிகள் இடைவெளி இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆகவே, 45 முதல் 60 நொடிகள் கொடுக்கு செக் செய்து கொள்ளலாம்.
அதேநேரத்தில் ஆட்டோபே மேன்டேட்டில் செய்யும் கஸ்டமர்களுக்கும் விதிகள் மாற இருக்கின்றன. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்கள் மூலம் ஆட்டோபே செய்தால், உங்களுக்கு அதிகபட்சம் ஒரு முறை மட்டுமே முயற்சி கொடுக்கப்படும். அதேபோல ஒவ்வொரு மேன்டேட்டுக்கும் 3 மறுமுயற்சி கொடுக்கப்படும். இதேபோல பல்வேறு விதிகள் வருகின்றன.
ஆனால், மேற்கண்ட விதிகள் மட்டுமே யுபிஐ கஸ்டமர்களுக்கு நேரடியாக மாற்றங்களை கொண்டுவர இருக்கின்றன. மேலும், ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் மேலும் சில யுபிஐ விதிகள் அமல் செய்யப்பட இருக்கின்றன. முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன் சேவைகளை கூகுள்பே, போன்பே போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் பயன்படுத்தி கொள்ள அமல் செய்யப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








