புது UPI ரூல்ஸ்.. புது லிமிட்.. செப்.15 முதல் அமல்.. 9 வகையான பண பரிவர்த்தனைகளில் மாற்றம்!
வழக்கமாக யுபிஐ (UPI) சேவையில் "புதிய லிமிட்" தான் அமலுக்கு வரும். ஆனால் இம்முறை, அதாவது வருகிற 2025 செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் யுபிஐ சேவையின் கீழ் குறிப்பிட்ட வகைகளுக்கான பரிவர்த்தனை வரம்பு (Transaction Limits) அதிகரிக்கப்பட உள்ளது.
என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது, யுபிஐ சேவையில் குறிப்பிட்ட வகைகளுக்கான பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்க உள்ளதாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் செப்டம்பர் 15, 2025 முதல் அமலுக்கு வருகின்றன.

மேலும் மெம்பர்கள், ஆப்கள் மற்றும் பிஎஸ்பி-க்கள் வருகிற செப்டம்பர் 15, 2025 க்குள் இதை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது. என்பிசிஐ-யின் இந்த அதிகரிக்கப்பட்ட பரிவர்த்தனை வரம்புகள் ஆனது மக்கள் மற்றும் வணிகங்கள் பெரிய அளவிலான டிஜிட்டல் கட்டணங்களை செய்வதை எளிதாக்கும்
இந்த புதிய மாற்றங்கள் காப்பீடு செலுத்துதல், கடன் இஎம்ஐ-கள் அல்லது சந்தைகளில் முதலீடு செய்தல் போன்ற பெர்சன்-டூ-மெர்சன்ட் (P2M) பரிவர்த்தனைகளுக்குப் பொருந்தும். அதாவது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு பணம் அனுப்புவது போன்ற பெர்சன்-டூ-பெர்சன் (P2P) பணப்பரிமாற்றங்களில் எந்த மாற்றமும் இருக்காது. இதற்கான தினசரி வரம்பு ஒரு நாளைக்கு ரூ.1 லட்சமாகவே இருக்கும். சரி என்னென்ன மாறுகிறது?
1. மூலதன சந்தை முதலீடுகள் மற்றும் காப்பீடு (Capital market investments and insurance): பரிவர்த்தனை வரம்பு ஒரு கட்டணத்திற்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும், அதிகபட்சம் 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
2. அரசு மின் சந்தை மற்றும் வரி செலுத்துதல்கள் (Government e-marketplace and tax payments): திருத்தப்பட்ட வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சமாக இருக்கும், இது ரூ.1 லட்சத்திலிருந்து உயர்த்தப்படும்.
3. பயண முன்பதிவுகள் (Travel bookings): வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும், தினசரி வரம்பு ரூ.10 லட்சமாக இருக்கும்.
4. கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்கள் (Credit card bill payments): பரிவர்த்தனைகளை ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை செய்யலாம், இருப்பினும் தினசரி வரம்பு ரூ.6 லட்சமாக இருக்கும்.
5. கடன் மற்றும் இஎம்ஐ வசூல் (Loan and EMI collections): ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும், தினசரி அதிகபட்சம் ரூ.10 லட்சமாக இருக்கும்.
6. நகை கொள்முதல் (Jewellery purchases): ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக வரம்பு இரட்டிப்பாக்கப்படும், தினசரி உச்சவரம்பு ரூ.6 லட்சமாக இருக்கும்.
7. டேர்ம் டெபாசிட் (Term deposits - டிஜிட்டல் ஆன்போர்டிங்): ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும்.
8. டிஜிட்டல் கணக்கு ஓப்பனிங் (Digital account opening): எந்த மாற்றமும் இல்லை, ரூ.2 லட்சமாகவே தொடர்கிறது.
9. பிபிபிஎஸ் வழியாக அந்நிய செலாவணி செலுத்துதல் (Foreign exchange payments via BBPS): இப்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரை அனுமதிக்கப்படும், இது ஒரு நாளைக்கு ரூ.5 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications