PhonePe, Google Pay-க்கு வரும் மாற்றம்.. புது UPI ரூல்ஸ்.. டிச.31 தான் கடைசி.. அதுக்கு அப்புறம்?
நீங்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ பேமண்ட் ஆப்களை பயன்படுத்தினால், வருகிற 2025 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பின் அல்லது அதற்கு முன்னதாகவே கூட அமலுக்கு வரும் 2 முக்கிய மாற்றங்களை பற்றி கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மாற்றம்: யுபிஐ ஆப் பயனர்கள் தங்கள் விருப்பப்படி எந்த ஆப்பின் வழியாகவும் ஆக்டிவ் ஆக உள்ள அனைத்து யுபிஐ மேன்டெட்களை (UPI Mandates), அதாவது உங்கள் வங்கி கணக்கிலிருந்து ஆட்டோமெட்டிக் ஆக அல்லது திட்டமிடப்பட்ட பேமண்ட்களை பார்க்க முடியும்.

இதற்கு அனுமதிக்கும் வகையில், என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. யுபிஐ மேன்டெட் வகையின் கீழ் வரும் பேமண்ட்கள் ஆனது பொதுவாக சந்தாக்கள், இஎம்ஐ-க்கள் மற்றும் பயன்பாட்டு பில்கள் போன்ற தொடர்ச்சியான பேமண்ட்களுக்கு அல்லது ஐபிஓ விண்ணப்பங்கள் மற்றும் அட்வான்ஸ் புக்கிங் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது மாற்றம்: பயனர்கள் ஒரு யுபிஐ ஆப்பில் இருந்து மற்றொரு யுபிஐ ஆப்பிற்கு மேன்டேட்களை போர்ட் செய்யும் விருப்பமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது வணிகர்கள் தங்களுக்கு பொருத்தமானதாக கருதும் போது, தங்களுக்கு பிடித்தமான பேயி பிஎஸ்பிகளுக்கு (Payee PSP), அதாவது ஒரு பயனரிடமிருந்து பணம் பெறுவதற்காக அமைக்கப்பட்ட கட்டண சேவை வழங்குநரின் மூலம் யுபிஐ ஆட்டோபே மேன்டேட்களை போர்ட் செய்து செயல்படுத்தவும் உதவும்.
இதுகுறித்த என்பிசிஐ சுற்றறிக்கையில், ஆட்டோபே அம்சத்தை கொண்டுள்ள யுபிஐ ஆப்கள் ஆனது மேற்கண்ட 2 புதிய திருத்தப்பட்ட கட்டமைப்பையும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும். ஆக இந்த மாற்றங்கள் டிசம்பர் 31 க்கு தான் வரும் என்று அர்த்தமில்லை; அதற்கு முன்பாகவே கூட வரலாம்.
2026 ஜனவரி 1 முதல்? எல்லாம் சரியாக நடந்து மேற்கண்ட மாற்றங்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அமலுக்கு வந்துவிட்டால், 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் எந்தவொரு யுபிஐ ஆப் வழியாகவும், எந்தெந்த யுபிஐ பேமண்ட்கள் "ரெகுலர்" ஆக செலுத்தப்படுகிறது என்பதை பயனர்களால் பார்க்க முடியும்.
உதாரணமாக கூகுள் பே ஆப்பில் ஒரு ஆக்டிவ் பேமண்ட் இருக்கிறது என்றால், மேலும் போன்பே ஆப்பில் இன்னொரு பேமண்ட் இருக்கிறது என்றால், பயனர்கள் தங்கள் விருப்பப்படி இந்த 2 ஆப்களில் எந்த ஆப்பின் மூலமம் அந்த இரண்டு மேன்டேட்களையும் பார்க்க முடியும். இது நிதி திட்டமிடலை எளிமையாக கையாளவும், நெறிப்படுத்தவும் உதவும்.
இதற்காக பணம் செலுத்தும் பிஎஸ்பி வங்கிகள் மற்றும் யுபிஐ ஆப்களுக்கு என்பிசிஐ என்னென்ன கூறியுள்ளது? வங்கி கணக்குகளை நிர்வகி (manage bank accounts) அல்லது பிரத்யேக யுபிஐ ஆட்டோபே கட்டண பிரிவின் (UPI autopay section) கீழ் மட்டுமே அந்தந்த ஆப்பில் பயனர்களின் யுபிஐ ஆட்டோபே மேன்டேட்களை பார்ப்பது மற்றும் போர்ட்டிங் செய்யும் செயல்முறை நடக்க வேண்டும் என்று என்பிசிஐ உத்தரவிட்டுள்ளது.
கூடுதலாக வியூ மேன்டேட் (View mandate) உடன் பெறப்பட்ட மேன்டேட் விவரங்கள் பக்கத்திலிருந்து மட்டுமே போர்ட் மேன்டேட் இயக்கப்பட வேண்டும் என்றும் என்பிசிஐ கூறியுள்ளது. மேன்டேட் பெயர்வுத்திறனை கோருவதற்கு கேஷ்பேக், ஆபர்கள், ஆப் நோட்டிபிகேஷன்ஸ், பேனர்கள், நட்ஜ்கள் அல்லது அலெர்ட்கள் உள்ளிட்ட எந்த தூண்டுதல்களும் பயன்படுத்தப்படாது. மேலும் ஆப்கள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் கட்டாய விவரங்களை பயன்படுத்த கூடாது.


Click it and Unblock the Notifications








