UPI.. ரூ.2,000 கதை முடிந்தது.. அக்.1 முதல் புது ரூல்ஸ்.. Google Pay, Paytm, PhonePe-க்கு இது.. என்னென்ன வருது?
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) விதித்த யுபிஐ விதிகள் அமலுக்கு வருகின்றன. ரூ.2,000 வரையில் பணத்தை கேட்டு கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe), பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு இந்த விதிகள் நேரடியாக அமலுக்கு வருகின்றன. இந்த விதிகளால் என்ன மாறப்போகிறது, முழு விவரம் இதோ.
யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் (UPI Collect Request) மூலம் ரூ.2,000 வரையில் பணத்தை பெற்று கொள்ளும் சேவையானது, அக்டோபர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. ஆனால், இது பி2எம் (P2M) பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. அந்த சேவை வழக்கம்போலவே கிடைக்கும். தனிநபர்களால் பயன்படுத்தப்படும் பி2பி (P2P) என்று அழைக்கப்படும் பீர்-டு-பீர் (Peer-to-Peer) பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த விதிகள் அமலாகிறது.

இப்போது, யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் கொடுத்து ரூ.2,000 வரையில் பணத்தை பெற்று கொள்ளலாம். அதாவது, கூகுள் பே, போன்பே, பேடிஎம் பீம் போன்ற ஏதாவது ஒரு யுபிஐ ஆப்கள் மூலம் ரூ.2,000 வரம்புக்குள் ஒரு தொகையை கேட்டு, தனநபர்களின் யுபிஐ ஐடிக்கு கலெக்ட் ரெக்கொஸ்ட் கொடுக்க முடியும். இந்த ரெக்கொஸ்ட்டை ஏற்று, பின் நம்பர் கொடுத்தால் போதும், பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுக்கப்படும்.
இதற்காக மொபைல் நம்பர் அல்லது யுபிஐ ஐடியை செலுத்த வேண்டியது கிடையாது. அதேபோல எவ்வளவு பணத்தை அனுப்ப வேண்டும் என்பதையும் கொடுக்க வேண்டியது கிடையாது. யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் மூலமே அது அனைத்தும் முன்கூட்டியே போடப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்து பின்நம்பர் கொடுத்தாலே போதும், உங்களது பணம் எடுக்கப்படும். இதனாலேயே இந்த சேவை நிறுத்தப்படுகிறது.
ஆகவே, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் சேவை மூலமாக தனநபர்கள் பணத்தை பெற்று கொள்ள முடியாது. பி2எம் (P2M) பரிவர்த்தனைகள் மூலமாக செய்யப்படும் யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் தொடர்ந்து செயல்படும். ஏனென்றால், வணிக ரீதியாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாயால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் யுபிஐ கலெக்ட் ரெக்கொஸ்ட் கொடுக்கின்றன.
மேலும், கூகுள் பே மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் யுபிஐ ஐடிக்களில் (UPI IDs) புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகின்றன. இந்த விதிகள் மூலம் கூகுள் பே மற்றும் பேடிஎம் கஸ்டமர்கள் தங்களது யுபிஐ ஐடிக்களை மாற்றி கொள்ள முடியும். இதனால், வழக்கமாக பயன்படுத்தும் ஐடியை எளிதாக மாற்ற முடிவதால், பாதுகாப்பு அதிகமாக கிடைக்க இருக்கிறது. இதை அடிக்கடி மாற்றி கொள்ளவும் முடிகிறது.
இதில் உங்களுக்கு விரும்பமான எழுத்துக்கள் மற்றும் எண்களை கொடுக்க முடியும். இதுபோக ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல் புதிய விதிகளை அமல் செய்ய இருக்கிறது. இது பேங்க் அக்கவுண்ட் மூலமாக டிஜிட்டலாக பணம் அனுப்பும் ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளுக்கும் அமல் செய்யப்பட இருக்கிறது.
ஆகவே, ஆர்டிஜிஎஸ், நெப்ட் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கும் இது பொருந்துகிறது. அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனையில் போதும், வெரிபிகேஷன் செய்ய எஸ்எம்எஸ் அடிப்படையிலான ஓடிபி கொடுக்கப்படுகிறது. இந்த வெரிபிகேஷன் மட்டுமல்லாமல், கூடுதலாக ஒரு வெரிபிகேஷனை சேர்க்க ரிசர்வ் வங்கி விதிகளை கொண்டு வருகிறது. ஆகவே, இரண்டு-அடுக்கு-ஆதன்டிகேஷன் அமலுக்கு வர இருக்கிறது.
இதில் ஆதார் கார்டு மூலம் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் ஆதன்டிகேஷன் சேர்க்கப்படலாம். ஆகவே, ஃபிங்கர்பிரிண்ட், பேசியல் ரிககனைசேஷன் கூடுதல் வெரிபிகேஷனுக்கு பயன்படுத்தபடலாம். அல்லது, பாஸ்வோர்ட்கள், பாஸ்பேர்ஸ் போன்றவையும் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு தெரிய வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications