UPI.. அக்.8 முதல் அமல்.. பணம் அனுப்ப புது ரூல்ஸ்.. ரூ.500, ரூ.1,000 போகக்கூட இதை பண்ணும்.. இல்லனா என்னவாகும்?
என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது அக்டோபர் 8ஆம் தேதி முதல் புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe) மற்றும் பீம் (BHIM) போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களுக்கும் இந்த விதிகள் பொருந்துகிறது. இனிமேல் பணம் அனுப்பும்போது இந்த விதிகளை பின்பற்ற வேண்டி இருக்கும். ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் பேசியல் ரிககனைசேஷன் சேர்க்கப்பட இருக்கிறது.
கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மட்டுமல்லாமல், மற்ற டிஜிட்டல் பேமெண்ட்களிலும் பணத்தை அனுப்ப பின் நம்பர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதன்டிகேஷனில் ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprints) மற்றும் பேசியல் ரிககனைசேஷன் (Facial Recognition) சேர்க்கப்பட இருக்கிறது. பணத்தை அனுப்ப இதையும் பயன்படுத்த வேண்டும்.

இந்த புதிய ஆதன்டிகேஷன் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) விதிகளுக்குட்பட்டு இந்த ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் பேசியல் ரிககனைசேஷன் ஆதன்டிகேஷன் கொண்டுவரப்பட இருக்கிறது. ஆகவே, பணத்தை அனுப்பும்போது, இந்த ஆதன்டிகேஷன் இருக்கும்.
ஆகவே, பயோமெட்ரிக் டேட்டா தேவைப்படுவதால், ஆதார் கார்டில் இருக்கும் டேட்டாவை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆனது பயன்படுத்த இருக்கிறது. ஆகவே, ஆதார் கார்டின் பயோமெட்ரிக் ஆதன்டிகேஷனை கொண்டு கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் பணம் அனுப்ப ஆதன்டிகேஷன் கொண்டுவரப்பட இருக்கிறது.
அக்டோபர் 8ஆம் தேதி மும்பையில் நடக்கும் குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்டிவலில் (Global Fintech Festival) இந்த பயோமெட்ரிக் ஆதன்டிகேஷன் (Biometric Authentication) அறிமுகமாக இருக்கிறது. யுபிஐ கஸ்டமர்களுக்கு படிப்படியாக அமலுக்கு வரலாம். ஏனென்றால், இதற்காக கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம் போன்ற யுபிஐ ஆப்களில் அப்டேட் செய்ய வேண்டி இருக்கும்.
அதேபோல ஏற்கனவே இருக்கும் பின் நம்பரும் ஆப்ஷனில் இருக்கலாம். ஆகவே, ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் பேசியல் ரிககனைசேஷன் கூடுதல் வெரிபிகேஷன் போல செயல்படலாம். எப்படி இருந்தாலும், இது யுபிஐ பேமெண்ட்களை (UPI Payments) மேலும் பாதுகாப்பானதாக மாற்ற இருக்கிறது. இந்த பயோமெட்ரிக் ஆதன்டிகேஷனின் முழு விவரங்கள் அக்டோபர் 8ஆம் தேதி தெரியவரும்.
மேலும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2-பேக்டர் ஆதன்டிகேஷனை (Two-Factor Authentication) கொண்டு வர இருக்கிறது. இந்த ஆதன்டிகேஷனும் ஒட்டுமொத்த டிஜிட்டல் பேமெண்ட்களுக்கு அமல் செய்யப்பட இருக்கிறது. ஆகவே, பேங்க் பணத்தை டிஜிட்டலாக பரிமாற்றம் செய்யும்போது, இந்த 2-பேக்டர் ஆதன்டிகேஷன் கொண்டுவரப்பட இருக்கிறது.
இப்போது, ஓடிபி மற்றும் பின் நம்பர் ஆதன்டிகேஷன் மூலம் பணத்தை பரிமாற்றம் செய்ய முடிகிறது. ஆனால், இந்த 2-பேக்டர் ஆதன்டிகேஷன் வந்துவிட்டால், ஃபிங்கர்பிரிண்ட், பேசியல் ரிககனைசேஷன், பாஸ்வோர்ட்கள், பாஸ்பேர்ஸ், ஹார்ட்வேர் டோக்கன்கள், சாப்ட்வேர் டோக்கன்கள் போன்றவற்றில் ஏதாவது 2 ஆதன்டிகேஷன்கள் சேர்க்கப்பட்டுவிடும்.
இந்த விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. ஆகவே, அக்டோபர் 8ஆம் தேதி வர இருக்கும் ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் பேசியல் ரிககனைசேஷன் அதற்கு முன்னோட்டமாக இருக்கும். யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் கஸ்டமர்கள் படிப்படியாக ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் பேசியல் ரிககனைசேஷனுக்கு மாறுவார்கள். இது ஆப்ஷனாகவே இருக்கும். ஆகவே, பணத்தை வழக்கம்போல அனுப்பலாம்.


Click it and Unblock the Notifications








