புது விதிகள்.. ஆக.31 முதல் அமல்.. இனி 2,000 ரூபாயோ.. 5,000 ரூபாயோ.. வருது UPI-க்கு மாற்றம்.. என்னென்ன மாறுது?
என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் புதிய யுபிஐ விதிகளை (New UPI Rules) அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகளானது, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களை (UPI Apps) பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு நேரடியாக அமல் செய்யப்பட இருக்கிறது. இந்த விதிகள் என்ன சொல்கிறது?
இந்த புதிய விதிகளை ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் அனைத்து பேங்குகள் (Banks), பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் (Payment service Providers) மற்றும் மூன்றாம் தர ஆப் புரொவைடர்கள் (Third Party App Providers) ஆகியவை அமல் செய்ய இருக்கின்றன. முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்களை (Pre-Sanctioned Credit Lines) யுபிஐ ஆப்கள் மூலம் நேரடியாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஆகவே, கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம் போன்ற எந்தவொரு யுபிஐ ஆப்களாக இருந்தாலும், அதில் பி2பி பர்சன்-டூ-பர்சன் (P2P - Person-to-Person), பி2பிஎம் பர்சன்-டூ-ஸ்மால்-மெர்ச்சன்ட் (P2PM - Person-to-Small Merchant) பேமெண்ட்களை செய்து கொள்ளலாம். இதுபோக பணம் எடுத்தல் (Cash Withdrawal) செய்து கொள்ளலாம். இதில் ஏடிஎம் பணம் எடுத்தல் (ATM Withdrawal) கிடைக்கும்.
மேற்கண்ட மூன்று சேவைகளையும் முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்களில் இனிமேல் யுபிஐ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த விதிகளையே நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் அமல் செய்ய இருக்கிறது. யுபிஐ ஆப்கள் மூலம் முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்கள் பேமெண்ட்கள் எப்படி செய்யலாம்.
யுபிஆ ஆப்கள் என்று வந்துவிட்டால், அதில் ஸ்கேன் & பே (Scan & Pay), செல்ஃப்-டிரான்ஸ்பர் (Self-transfer), பேங்க் அக்கவுண்ட் (Bank Account) + ஐஎப்எஸ்சி (IFSC) போன்று அனைத்து வகையான யுபிஐ பரிவர்த்தனைகளையும் (UPI Payments) செய்து கொள்ளலாம். ஆனால், இந்த முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்களுக்கு விதிமுறைகள் இருக்கின்றன.

அதாவது, ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் (Regulatory Guidelines), வங்கி கொள்கை (Bank Policy), சட்ட தேவைகள் (Legal Requirements) போன்ற பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டே யுபிஐ ஆப்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்களின் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். இந்த சேவையை வழங்குவோர்களுக்கு அப்ரூவ் & டெக்லைன் செய்யவும் அதிகாரம் இருக்கிறது.
இருப்பினும், முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்கள் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை கிடைத்தால், இது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்களானது, சேவிங் அக்கவுண்ட், ஓவர்டிராப்ட் அக்கவுண்ட், வாலெட்கள் போன்றவற்றில் கிடைத்தது.
ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு யுபிஐ ஆப்களிலும் கிடைக்க இருக்கிறது. ஆகவே, கிரெடிட் லைனில் ரூ.2,000 இருந்தாலும் சரி, ரூ.5,000 இருந்தாலும் சரி, அதை யுபிஐ ஆப்கள் மூலம் பயன்படுத்தலாம். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் யுபிஐ ஆப்களில் கிடைக்கும் பேலன்ஸ் சரிபார்ப்பு, அக்கவுண்ட் சரிபார்ப்பு போன்றவற்றிலும் புதிய விதிகள் அமல் செய்யப்பட இருக்கின்றன.
அதாவது, கூகுள் பே, போன்பே போன்ற ஏதாவது ஒரு யுபிஐ ஆப் மூலம் பேலன்ஸ் சரிபார்ப்பு செய்தால், 1 நாளுக்கு 50 முறை மட்டுமே செய்ய முடியும். ஆனால், ஒவ்வொரு யுபிஐ ஆப் மூலமும் 50 முறை லிமிட் கொடுக்கப்படுகிறது. பேங்க் அக்கவுண்ட் + மொபைல் நம்பர் செக் செய்ய 25 முறை மட்டுமே அனுமதி கொடுக்கப்பட இருக்கிறது. ஆட்டோபே பீக்-ஹவர்களில் செய்யப்படாது.


Click it and Unblock the Notifications








