Home
News

புது ரூல்ஸ்.. இனிமே 50 முறை தான்.. 2 புதிய லிமிட் உட்பட ஒரே நேரத்தில் UPI சேவையில் 4 புதிய மாற்றங்கள்!

யுபிஐ (UPI) சேவையில் ஒரே நேரத்தில் 4 முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் (இந்திய தேசிய கட்டணக் கழகம்) அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் அனைத்து வங்கிகள் மற்றும் பேமண்ட் ஆப்களிலும் நடைமுறைக்கு வரவுள்ளன.

எப்போது முதல் அமலுக்கு வரும்? யுபிஐ பயனர்களுக்கு சில கட்டுப்பாடுகளை முன்வைத்து, யுபிஐ சேவையை இன்னும் பாதுகாப்பாகவும், திறமையாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டு, என்பிசிஐ அறிவித்துள்ள இந்த 4 புதிய விதிகளும் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. என்னென்ன மாற்றங்கள்?

புது UPI ரூல்ஸ்.. இனிமே 50 முறை தான்.. எப்போது முதல் அமல்?

1. பேலன்ஸ் செக்ஸ் (Balance checks): ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், யுபிஐ பயனர்கள் ஒவ்வொரு யுபிஐ ஆப்பிலும் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே தங்கள் பேலன்ஸ்-ஐ சரிபார்க்க முடியும். ஒருவேளை அவர்கள் இரண்டு ஆப்களை பயன்படுத்தினால், ஒவ்வொன்றிலும் 50 முறை பேலன்ஸ் செக் செய்யலாம்.

2. பரிவர்த்தனை நிலைச் சரிபார்ப்புகள் (Transaction status checks): பொதுவாக பிஎஸ்பி-க்கள் (PSPs) என்று அழைக்கப்படும் பணம் செலுத்தும் சேவை வழங்குநர்கள் (Payment Service Providers) ஒரு பரிவர்த்தனை வெற்றிகரமாக நடந்ததா என்பதை சரிபார்க்க ஏபிஐ-களை (Application Programming Interfaces) அனுமதிக்கின்றன. ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வழிகாட்டுதல்களின் கீழ், ஒரு குறிப்பிட்ட கால தாமதத்திற்கு பிறகுதான் பிஎஸ்பி-க்கள் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்க வேண்டும்.

3. அக்கவுண்ட் லிஸ்ட் அக்சஸ் லிமிட் (Account list access limit): ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பயனர்கள் தங்கள் மொபைல் நம்பர் உடன் எந்த வங்கிக் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை ஒரு ஆப்பிற்கு ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். பயனர்கள் தங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த கோரிக்கை செயல்படும்.

4. வங்கிகளும் செயலிகளும் இணங்க வேண்டும்: கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பெ (PhonePe) மற்றும் பிற அனைத்து வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குநர்கள், ஏபிஐ ஆப்பை கண்காணிக்கும்படி என்பிசிஐ உத்தரவிட்டுள்ளது. மீறுபவர்கள் அபராதங்கள், பயன்பாட்டு கட்டுப்பாடுகள் அல்லது புதிய பயனர்களை உள்வாங்குவதற்கான தடையை எதிர்கொள்ள நேரிடும். அனைத்து பிஎஸ்பி-க்களும் ஆகஸ்ட் 31, 2025 க்குள் ஒரு சிஸ்டம் ஆடிட் ஒப்பந்தத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வரம்புகள் சிஸ்டம் ஸ்டெபிலிட்டி மற்றும் செக்யூரிட்டி-ஐ மேம்படுத்த உதவும் என்று என்பிசிஐ கூறுகிறது.

முன்னதாக, யுபிஐ (UPI) சேவை வழியாக பணம் அனுப்பும் செயல்முறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் என்பிஐசி அறிவித்து இருந்தது. இந்த புதிய விதி - 2025 ஜூன் மாத இறுதிக்குள், இன்னும் சரியாக வேண்டும் என்றால் ஜூன் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்படி திட்டமிடப்பட்டு உள்ளது. இது பியர் டு பியர் (Peer to Peer - P2P) மற்றும் பியர் டு பியர் மெர்ச்சன்ட் (Peer to Peer Merchant - P2PM) பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டிற்குமே பொருந்தும்.

என்பிசிஐ-யின் புதிய வழிகாட்டுதலின் கீழ், அனைத்து யுபிஐ ஆப்களும் பணப்பரிவர்த்தனைக்கு முந்தைய விவரங்கள் குறித்த பக்கத்தில் (Pre-transaction details page) பணத்தை பெறுபவரின் பெயர் மட்டுமே தோன்றுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த பெயர் நேரடியாக நம்பகமான மூலத்திலிருந்து வர வேண்டும்; அதாவது வேலிடிட்டி செய்யபட்ட விலாசத்தை கொண்டுள்ள பேங்க் அக்கவுண்ட் பெயராக இருக்க வேண்டும்

இப்படி சரிபார்க்கப்பட்டு பெயர் தவிர்த்து க்யூஆர் குறியீடுகளில் இருந்து பெறப்பட்ட பெயர்கள் அல்லது பணம் செலுத்துபவர் உருவாக்கிய பெயர்கள் போன்ற வேறு எந்த பெயர்களையும் யுபிஐ ஆப்கள் காட்டக்கூடாது. இது தவறான நபர்களுக்கு பாதை அனுப்பும் குழப்பத்தை தவிர்க்கும் என்று என்பிசிஐ நம்புகிறது.

இதனுடன், ஆப்பிற்க்குள் பணம் அனுப்பும் நபரின் பெயரை மாற்ற பயனர்களை அனுமதிக்கும் எந்தவொரு விருப்பத்தையும் யுபிஐ ஆப்கள் முடக்க வேண்டும் என்றும் என்கிற புதிய விதியையும் என்பிஐ கொண்டுவரவுள்ளது. இன்னும் எளிமையாக கூற வேண்டும் என்றால் , உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேமிக்கப்பட்ட பெயரை நம்புவதற்கு பதிலாக, பெறுநரின் உண்மையான பெயரை அவர்களின் வங்கி பதிவுகளில் தோன்றுவது போல் நீங்கள் காண்பீர்கள்.

பணத்தை அனுப்பும் முன், உறுதிப்படுத்தல் பட்டனை அழுத்துவதற்கு முன், பணம் சரியான நபருக்கு செல்கிறதா என்பதை நீங்கள் சரிபார்க்க முடியும் என்பதை இந்த புதிய மாற்றம் உறுதி செய்கிறது. பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பற்றிய துல்லியமான தகவல்களை யுபிஐ பயனர்களுக்கு வழங்குவதே, இந்த புதிய மாற்றத்தின் முதன்மையான குறிக்கோளாக இருக்கும், மேலும் அவர்களின் நிதிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும், சாத்தியமான குழப்பங்களை நீக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI Rules From NPCI 4 Changes Including 50 Times Balance Check Per Day Effect From August 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X