Home
News

UPI.. நவ.3 முதல் அமல்.. இனி பேங்க் பணம் அனுப்ப புது விதி.. Google Pay, PhonePe-க்கு வருது.. என்னென்ன மாறுது?

என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporate of India) ஆனது நவம்பர் 3ஆம் தேதி முதல் புதிய யுபிஐ விதிகளை (New UPI Rules) அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் இருந்து பரிவர்த்தனை செய்வதற்கு ஒரு நாளுக்கு 10 சைக்கிள் என்று நேரம் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின்படியே இனிமேல் பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.

பேங்க் பணத்தை யுபிஐ ஆப்கள் மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு ஒரு நாளுக்கு 10 செட்டில்மெண்ட் சைக்கிள்கள் (Settlement Cycles) இருக்கின்றன. இதில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (Authorised Transactions) மற்றும் டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகள் (Dispute Transactions) செய்யப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளானது, வழக்கமாக பணத்தை அனுப்புவது மற்றும் பெறுவதாகும்.

UPI.. நவ.3 முதல் அமல்.. இனி பேங்க் பணம் அனுப்ப புது விதி.. மாறுது?

டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகளானது, பணத்தை அனுப்பும்போது சிக்கல் ஏற்பட்டு ரிவர்ஸ் செய்யப்படுவது அல்லது ரீபண்ட் செய்யப்படுவது போன்றவற்றை செய்து முடிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த பரிவர்த்தனைகள் மட்டுமே யுபிஐ ஆப்களில் நடக்கின்றன. இந்த பரிவர்த்தனைகளை முடிக்கவே ஒரு நாளுக்கு 10 செண்டில்மெண்ட் சைக்கிள்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்த 10 செண்டில்மெண்ட் சைக்கிள்களிலும் ஒரே நேரத்தில் இரண்டு பரிவர்த்தனைகளுக்கும் அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால், நவம்பர் 3ஆம் தேதிக்கு பிறகு தனித்தனியாக பிரிக்கப்பட இருக்கிறது. அதாவது, அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 10 செட்டில்மெண்ட் சைக்கிள்கள் மற்றும் டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகளுக்கு 2 செட்டில்மெண்ட் சைக்கிள்கள் அமல் செய்யப்பட இருக்கிறது.

ஆகவே, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் பணத்தை அனுப்பும்போது, அதில் சிக்கல் ஏற்பட்டால், டெபிட் செய்யப்பட்ட பணம் மீண்டும் உங்களது அக்கவுண்ட்டுக்கு வருவதற்கான செட்டில்மெண்ட் சைக்கிளின் நேரம் மாற்றப்பட்டு இருக்கிறது. ஆகவே, மொத்தமாக 12 செட்டில்மெண்ட் சைக்கிள்கள் இருக்கின்றன. இதன் நேரத்தை இப்போது பார்க்கலாம்.

புதிய செட்டில்மெண்ட் சைக்கிள்கள் விதிகளின்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (10 சைக்கிள்கள்) செய்து முடிக்கப்படும். அதேபோல நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரையில் முதலாவது டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகள் மற்றும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையில் இரண்டாவது டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகள் செய்து முடிக்கப்படும்.

இதில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் 10 சைக்கிள்களாக இருந்தாலும் ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால், டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகள் இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கொடுக்கப்படும் 10 சைக்கிள்களுக்கும் நேரங்கள் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நேரங்கள் காலை 9 மணிக்கு தொடங்குகின்றன.

ஆகவே, முதலாவது சைக்கிள் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரையில் இருக்கிறது. 2ஆவது சைக்கிள் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரையில் இருக்கிறது. 3ஆவது சைக்கிள் அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரையில் இருக்கிறது. 4ஆவது சைக்கிள் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையில் இருக்கிறது. 5ஆவது சைக்கிள் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரையில் இருக்கிறது.

6ஆவது சைக்கிள் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் இருக்கிறது. 7ஆவது சைக்கிள் பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 வரையில் இருக்கிறது. 8ஆவது சைக்கிள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையில் இருக்கிறது. 9ஆவது சைக்கிள் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையில் இருக்கிறது. 10ஆவது சைக்கிள் இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI Rules From November 3 2025 UPI Settlement Cycles For Authorised Dispute Transactions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X