புது UPI ரூல்ஸ்.. மார்ச்.1 முதல் அமல்.. உங்க பேங்க் பணம் பிடிப்பு.. ஆனா, 14 நாட்கள்.. போன பணம் திரும்ப வரும்!
யுபிஐ ஆப்கள் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்துவரும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய யுபிஐ விதிகள் (New UPI Rules) அமலுக்கு வருகின்றன. இந்த விதிகள் மூலம் உங்களது பேக் பணத்தை 14 நாட்களுக்கு பிளாக் செய்து வைக்க முடியும். இந்த விதிகளால் யுபிஐ கஸ்டமர்கள் சிரமப்பட வேண்டியது கிடையாது. அவர்களே யுபிஐ ஒரு முறை ஆணை (UPI One Time Mandate) மூலம் அனுமதி கொடுக்கலாம். இந்த விதிகளால் என்ன மாறப்போகிறது?
ஐஆர்டிஏஐ (IRDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India) ஆனது இந்த விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் யுபிஐ கஸ்டமர்களின் அனுமதியுடன் அவர்களது பணத்தை 14 நாட்களுக்கு பிளாக் செய்து வைக்க அதிகாரம் கொடுக்கிறது. இது பொதுவான தொகை கிடையாது.

லைப் இன்சூரன்ஸ் (Life Insurance) மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் (Health Insurance) பாலிசிகளுக்கு கட்டப்படும் தொகையை மட்டுமே பிளாக் செய்ய அனுமதி வழங்குகிறது. அதாவது, யுபிஐ மூலம் உங்களது இன்சூரன்ஸ் பாலிக்கான தொகையை முன்கூட்டியே பிளாக் செய்து வைத்து கொள்ளலாம். இந்த தொகை உங்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் நிறுவனங்களுக்காக நிறுத்தி வைக்கப்படும்.
இந்த பணத்தை நீங்கள் பயன்படுத்தவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ முடியாது. உங்களது இன்சூரன்ஸ் பாலிசியை அந்த நிறுவனங்கள் ஏற்றுக் கொண்ட பிறகே உங்களது பணம் அவர்களது அக்கவுண்ட்டுக்கு வரவு வைக்கப்படும். அதுவரையில் பிளாக் மட்டுமே செய்யப்பட்டு இருக்கும். இதனால், இன்சூரன்ஸ் பாலிசி தொகையை தவறாமல் செலுத்த முடியும். பணத் தட்டுப்பாடும் குறைக்கப்படும்.
இந்த பிளாக் செய்யப்பட்ட தொகைக்கு 14 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதாவது, பிளாக் செய்யப்பட்ட தொகைக்கான இன்சூரன்ஸ் பாலிசியை 14 நாட்களுக்குள் அந்தந்த நிறுவனங்கள் ஏற்று கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்த தொகை அன்பிளாக் செய்யப்பட்டுவிடும். அதாவது, மீண்டும் உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்பட்டுவிடும்.
இப்படி பிளாக் செய்யப்படும் தொகைக்கும், அன்பிளாக் செய்யப்படும் தொகைக்கும் எந்தவித கட்டணங்களும் வசூலிக்கப்பட கூடாது. யுபிஐ கஸ்டமர்களின் பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட பேங்குகளுடன் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த பிளாக் செய்யப்பட்ட தொகையைவிட இன்சூரன்ஸ் பிரீமியம் கூடுதல் விலையில் இருந்தால், அந்த கூடுதல் தொகையை பெறுவதற்கு கஸ்டமர்களின் அனுமதியை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முன்கூட்டியே பெற வேண்டும். இதை 14 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிக்க வேண்டும். இப்படி கூடுதல் தொகையை பெறுவதற்கு ஒரு முறை மட்டுமே அனுமதி கொடுக்கப்படும்.
இந்த இசூரன்ஸ் பாலிசி தொகை பிளாக் சேவையானது பிஐஎம்ஏ - ஏஎஸ்பிஏ (BIMA - ASBA) மூலம் வழங்கப்படுகிறது. ஆகவே, இதில் பயன்படுத்தப்படும் தொகையை கையாள்வதற்கு என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) வரம்பும் விதிக்க இருக்கிறது. இந்த விதிகளே மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
சொல்லப்போனால், இந்த விதிகள் மூலம் லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டி முடிக்கப்படும். யுபிஐ கஸ்டமர்கள் முன்கூட்டியே பாலிசி விவரங்களை தெரிந்துகொண்ட பிறகே தொகையை பிளாக் செய்வதால், இதற்காகவே தொகையை ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இது பரிவர்த்தனைகளை மேலும் சுலபமாக்கும்.


Click it and Unblock the Notifications








