புது UPI ரூல்ஸ்.. ஜூன்.16 முதல் அமல்.. இனிமே Google Pay, PhonePe-க்கு இதுதான் லிமிட்.. என்னென்ன மாறப் போகுது?
பேங்க் அக்கவுண்ட் மூலமாக கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) ஆப்களில் பேமெண்ட்களை செய்துவரும் கஸ்டமர்களுக்கு ஜூன் 16ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. என்பிசிஐ (NPCI) என்றழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது இந்த விதிகளை அமல்படுத்த இருக்கிறது. இனிமேல் பேமெண்ட்களை செய்யும்போது அதற்காக எடுத்து கொள்ளப்படும் நேர லிமிட்டில் மாற்றம் இருக்கப் போகிறது.
கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற யுபிஐ பேமெண்ட் ஆப்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளானது, கையில் காசு வைத்து செலவு செய்யும் பரிவர்த்தனைகளைவிட பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. பொட்டிக் கடைக்கு சென்றால்கூட கூகுள் பே இருக்கா? போன்பே இருக்கா? என்று கேட்கும்படி மாறிவிட்டது. இதனால், யுபிஐ ஆப்களில் பல்வேறு விதிகளும் அமலுக்கு வருகின்றன.

இதற்கு, ஒட்டுமொத்த யுபிஐ கஸ்டமர்களும் மாற வேண்டி இருக்கிறது. இந்த விதிகளை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் கொண்டுவருகிறது. இப்போது, யுபிஐ பரிவர்த்தனை ரெஸ்பான்ஸ் டைம் (UPI Transactions Response Time) லிமிட் விதிகளை அமல்படுத்த இருக்கிறது. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும்போது நேரடி மாற்றங்கள் இருக்கும்.
அதாவது, இது முந்தைய லிமிட்டைவிட பாதிக்கும் மேலாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, பேமெண்ட்கள் மேலும் வேகமாக செய்து முடிக்கப்பட இருக்கிறது. இதில் பணம் அனுப்பதல் (Debit) மற்றும் பெறுதல் (Credit) பரிவர்த்தனைகள் அடங்கும். அதேபோல பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் (Transaction Status), பரிவர்த்தனை ரிவர்ஸ்சல் (Transaction Reversal) மற்றும் முகவரி சரிபார்ப்பு (Validate Address) ஆகியவை அடங்கும்.
மேற்கண்ட சேவைகளை யுபிஐ கஸ்டமர்கள் பயன்படுத்தும்போது அதற்காக எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் மாற்றி இருக்கிறது. இதனால், ஏற்கனவே இருந்ததைவிட அதிவேகமாக பரிவர்த்தனைகள் செய்து முடிக்கப்படும். பணம் அனுப்புதல் மற்றும் பெறதலுக்கு முந்தைய ரெஸ்பான்ஸ் டைம் 30 நொடிகளாக இருந்தது.
இந்த நொடிகள் இப்போது 15 நொடிகளாக குறைப்பட்டுள்ளது. பணம் அனுப்பிய பிறகோ அல்லது பெற்ற பிறகோ அதை செக் செய்ய பயன்படுத்தும் பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் சேவைக்கான ரெஸ்பான்ஸ் டைம் 30 நொடிகளாக இருந்தது. இப்போது 10 நொடிகளாக அது குறைப்பட்டுள்ளது. பரிவர்த்தனை ரிவர்ஸ் செய்யப்படும்போது அதற்காக ரெஸ்பான்ஸ் டைம் 30 நொடிகளாக இருக்கிறது.
இதுவும் இப்போது 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பேமெண்ட் அனுப்பும்போது முகவரி சரிபார்ப்பு செய்ய எடுத்து கொள்ளப்படும் ரெஸ்பான்ஸ் டைம் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரெஸ்பான்ஸ் டைம் லிமிட் மாற்றங்கள் யுபிஐ ஆப்களுக்கு மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட பேங்குகளுக்கும் பொருந்தும்.
ஆகவே, பணத்தை அனுப்பும் பேங்க் (Remitter Bank), பணத்தை பெறும் பேங்க் (Beneficiary Bank) மற்றும் பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர் (Payment Service Provider) ஆப்கள் ஆகியவற்றுக்கு இந்த விதிகள் பொருந்துகிறது. இந்த ரெஸ்பான்ஸ் டைம் லிமிட்டின்படி வரும் ஜூன் 16ஆம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனைகளை நடக்க இருக்கின்றன. இதனால் கஸ்டமர்களுக்கு நேரம் மிஞ்சமாகும்.
மேலும், மே 1ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவர்த்தனை (ATM Transactions) கட்டண விதிகள் அமலுக்கு வந்தன. இந்த விதிகள் மூலம் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மேல் ஏடிஎம்களில் பணத்தை எடுத்தால், அதற்காக கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டி இருக்கிறது. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பேங்க் கஸ்டமர்கள் மாற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








