Home
News

புது ரூல்ஸ்.. ஜூலை.15 அமல்.. இனிமே 500 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. UPI சார்ஜ்பேக் ரூல்ஸ்.. பணம் பெறுவதுக்கு அமல்!

யுபிஐ (UPI) என்று அழைக்கப்படும் யுனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) மூலம் பணம் அனுப்பும் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் யுபிஐ சார்ஜ்பேக் விதிகள் (UPI Chargeback Rules) அமலுக்கு வர இருக்கின்றன. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களுக்கு பொருந்தும், இந்த விதிகள் ஜூலை 15ஆம் தேதி முதல் அமல் செய்யப்படுகிறது. இந்த புதிய யுபிஐ சார்ஜ்பேக் விதிகளால் என்னென்ன மாறப்போகிறது? முழு விவரங்கள் இதோ.

யுபிஐ சார்ஜ்பேக் என்றவுடன் 500 ரூபாயோ, 1000 ரூபாயோ பணம் அனுப்பினால், கட்டணம் இருக்கும் என்று எண்ண வேண்டாம். இப்படி, 500 ரூபாயோ, 1000 ரூபாயோ, அவ்வளவு ஏன் நீங்கள் எவ்வளவு பணம் அனுப்பினாலும், அந்த பணம் உங்களது அக்கவுண்ட்டில் டெபிட் செய்யப்பட்டு, பெறுபவரின் அக்கவுண்ட்டில் கிரெடிட் செய்யப்படவில்லை என்றால், அப்போது இந்த விதிகள் அமலாக இருக்கிறது.

புது ரூல்ஸ்.. ஜூலை.15 அமல்.. இனிமே 500 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. வருது!

ஆகவே, உங்களது பணத்தை திரும்ப பெறுவதற்கே இந்த யுபிஐ சார்ஜ்பேக் விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. அதாவது, கூகுள் பே, போன்பே, பேடிஎம், அமேசான் பே, பீம் அல்லது எந்தொவொரு யுபிஐ ஆப்கள் மூலமும் நீங்கள் பணப்பரிவர்த்தனை செய்தாலும், அந்த பணம் அனுப்புநர் மற்றும் பெறுநர் பேங்குகளின் அடிப்படையிலேயே செய்து முடிக்கப்படுகிறது.

இந்த ஆப்கள் இடைத்தரகர் போலவே செயல்படுகின்றன. ஆகவே, இதன் மூலம் அனுப்பப்பட்ட பணம், சம்பந்தப்பட்ட நபருக்கு செல்லவில்லை என்றால், பேங்குக்கே அங்கு அதிக பொறுப்பு வருகிறது. இதனால், என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது அந்த பேங்குகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி இருக்கிறது.

அதாவது, யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்பப்பட்ட பிறகு அது பெறும் நபருக்கு சென்றுசேரவில்லை என்றாலோ, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பணம் டெபிட் செய்யப்பட்டாலோ அந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு சார்ஜ்பேக் கோரிக்கைகள் இருக்கின்றன. ஆனால், இதற்கு லிமிட் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு யுபிஐ ஐடி மூலம் 10 சார்ஜ்பேக் கோரிக்கைகள் கொடுக்கலாம்.

புது ரூல்ஸ்.. ஜூலை.15 அமல்.. இனிமே 500 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. வருது!

ஆனால், 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும். மேலும், அனுப்புநர் மற்றும் பெறுநர் சேர்ந்து 5 சார்ஜ்பேக் கோரிக்கைகள் வைக்க முடியும். இந்த குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கு மேல் கோரப்பட்டால், என்பிசிஐ அதை தவிர்த்துவிடும். இதனால், டெபிட் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு மேலும் கோரிக்கைகள் வைக்கவே இந்த புதிய சார்ஜ்பேக் விதிகள் வருகிறது.

இந்த லிமிட்டுக்கு மேல் கோரிக்கைகள் வரும்பட்சத்தில் ரெமிட்டிங் பேங்க் (Remitting Bank) அது உண்மையானது என்று கருதினால், அந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட பேங்க் அனுமதிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட லிமிட்டுக்கு மேலும் கோரிக்கை எழுப்பி பணத்தைத் திரும்ப பெற முடியும். ஆனால், இது ரெமிட்டிங் பேங்க்கின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும்.

இந்த கோரிக்கைகள் ரெமிட்டிங் பேங்க் ரைசிங் குட் ஃபெய்த் நெகடிவ் சார்ஜ்பேக் - ஆர்ஜிஎன்பி (Remitting Bank Raising Good Faith Negative Chargeback - RGNB) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய கோரிக்கை விதிகளே ஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. இதன் மூலம் உங்களிடம் இருந்து தவறாக டெபிட் செய்யப்பட்ட பணத்தை உடனடியாக பெற்று கொள்ளலாம்.

இந்த விதிகள் யுஆர்சிஎஸ் (URCS) என்று அழைக்கப்படும் யுபிஐ டிஸ்பூட் ரெசொலூஷன் சிஸ்டம் (UPI Dispute Resolution System) மட்டுமே பொருந்தும். ஆகவே, யுபிஐ ஆப்கள் இல்லாமல், மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும்போது, இந்த விதிகள் பொருந்தாது. ஆகவே, யுபிஐ ஆப்கள் மூலம் பணத்தை அனுப்பும்போது மட்டுமே இந்த விதிகள் உங்களுக்கு பொருந்துகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI Rules From July 15 2025 Remitting Bank Raising Good Faith Negative Chargeback in URCS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X