Home
News

புது UPI ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. இனி ரூ.10000-க்கு வந்தாச்சு.. ரூ.5000 இல்லங்க.. பணம் அனுப்புறதுல மாற்றம்!

ஜனவரி 1ஆம் தேதி வந்துட்டா போதும், பேங்குகளுக்கு நேரடியாக பரிவர்த்தனை மாற்றங்கள் வர போகின்றன. ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படுகிற ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) புது யுபிஐ விதிகள் (New UPI Rules) அமலுக்கு வர இருக்கிறது. இனிமேல் பரிவர்த்தனை செய்யும்போது, பழைய வரம்புகளை மறந்துவிடுங்கள். புதிய வரம்புகளின்படி பரிவர்த்தனைகளை செய்ய வேண்டி இருக்கும். இந்த யுபிஐ விதிகளால் என்னென்ன மாறி இருக்கிறது? ஒட்டுமொத்த யுபிஐ கஸ்டமர்களுக்கும் இது பொருந்துமா?

பொட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் பணம் கைமாற்றப்படுகின்றன. ஆகவே, தவிர்க்க முடியாததாக யுபிஐ பரிவர்த்தனைகள் மாறி வருவதால், அதில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மற்றும் என்பிசிஐ (NPCI) என்றழைக்கப்படுகிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆகியவை புது விதிகளை கொண்டுவருகின்றன.

புது UPI ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. ரூ.10000-க்கு வந்தாச்சு மாற்றம்!

இதை யுபிஐ கஸ்டமர்களும் சரி, பேங்க் நிறுவனங்களும் சரி, தவிர்க்க முடியாமல் பின்பற்ற வேண்டி இருக்கிறது. இப்போது, அமலுக்கு வர இருக்கும் யுபிஐ பரிவர்த்தனை விதிகளும் அப்படித்தான். யுபிஐ கஸ்டமர்கள் மற்றும் பேங்குகளுக்கு நேரடியாக அமலுக்கு வர இருக்கின்றன. இது கூகுள் பே, போன்பே போன்ற ஆப்களை வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் பொருந்தாது.

யுபிஐ 123பே (UPI 123PAY) கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த விதிகளால் கஸ்டமர்களுக்கு சிக்கல் ஏதும் கிடையாது. ஏற்கனவே, இருந்த பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், கூடுதல் தொகையை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. கீபோர்ட் போன் முதல் ஸ்மார்ட்போன் வரையில் பணம் அனுப்பி கொள்ளலாம்.

முன்னதாக, யுபிஐ 123பே பரிவர்த்தனை வரம்பு (UPI 123PAY Transaction Limit) ரூ.5000ஆக இருந்தது. இந்த வரம்பை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரூ.10000ஆக அதிகரித்தது. இந்த புது யுபிஐ பரிவர்த்தனை விதிகளின் (New UPI Transaction Rules) அடிப்படையில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் கஸ்டமர்கள் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இந்த வரம்பின்படியே பேங்குகள் சேவைகளை வழங்க வேண்டும்.

இதற்கான காலஅவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் கொடுக்கப்பட்டது. ஆகவே, பேங்குகள் காலஅவகாசத்துக்குள் புது விதிகளை அமல்படுத்த வேண்டும். ஆகவே, ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு இந்த புதிய வரம்பின்படி கஸ்டமர்கள் பணத்தை அனுப்பி கொள்ளலாம். இதுபோக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா யுபிஐ லைட் பரிவர்த்தனைகளின் வரம்பு அதிகரித்து இருந்தது.

அதாவது, யுபிஐ லைட் வாலெட் வரம்பு (UPI Lite Wallet Limit) ரூ.2000ஆக இருந்தது. இதை ரூ.5000ஆக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மாற்றியது. அதேபோல ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.500ஆக இருந்த வரம்பை ரூ.1000ஆக அதிகரித்தது. இந்த புதிய யுபிஐ லைட் பரிவர்த்தனை விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன. இப்போது. ஜனவரி 1ஆம் தேதி முதல் யுபிஐ 123பே விதிகள் வர இருக்கின்றன.

இந்த யுபிஐ 123பே சேவைகளுக்கு பரிவர்த்தை கட்டணங்களும் இல்லை, அதேபோல இன்டர்நெட் தேவையும் இல்லை. இருப்பினும், ஆதார் ஓடிபி மற்றும் யுபிஐ பின் நம்பர் மூலம் பாதுக்காப்பாக பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதி கொடுக்கிறது. ஐவிஆர் நம்பர், ஓஇஎம் பேமெண்ட், மிஸ்டு கால் பேமெண்ட், ஐவிஆர் நம்பர் போன்றவை மூலம் பரிவர்த்தகளை செய்யலாம்.

இதனாலேயே இன்டர்நெட் இல்லாத கஸ்டமர்களுக்கு இந்த யுபிஐ 123பே சேவை முக்கியாக இருக்கிறது. அதேபோல அவர காலங்களில் பணம் அனுப்புவதில் ஏற்படும் சிக்கல்களையும் இந்த யுபிஐ 123பே சேவை மூலம் தவிர்க்க முடியும். ஆகவே, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் புது வரம்பின்படி பரிவர்த்தனைகளை செய்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI Rules From January 1 2025 UPI 123Pay Transaction Limit Increase From Rs 5000 To Rs 10000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X