Home
News

புது UPI ரூல்ஸ்..மார்ச் 1 முதல் அமல்.. இனி நீங்களே நினைச்சாலும் பணத்தை எடுக்க முடியாது.. பிளாக் ஆகிடும்!

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India - IRDAI) ஆனது யுபிஐ (UPI) வழியிலான ஆயுள் மற்றும் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைக்ளுக்கான தொகையை தடுப்பதற்கான (Blocking Amount) ஒரு முறை ஆணைக்கு (One-time mandate) அனுமதி அளித்துள்ளது.

இந்த புதிய வசதியானது பிஐஎம்ஏ - ஏஎஸ்பிஏ (BIMA - ASBA) அதாவது தடுக்கப்பட்ட தொகையால் ஆதரிக்கப்படும் விண்ணப்பங்கள் (Applications supported by blocked amount) என்று அறியப்படுகிறது. இதன்கீழ் காப்பீட்டு பாலிசி வழங்கப்பட்ட பின்னரே, வருங்கால பாலிசிதாரரிடமிருந்து காப்பீட்டாளருக்கு பணப் பரிமாற்றம் நடைபெறும்.

புது UPI ரூல்ஸ்..மார்ச் 1 முதல் அமல்!

இந்த புதிய வசதி மூலம் பயனர்களால், தங்கள் வங்கிக் கணக்குகளில் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு நிதியை பிளாக் செய்து வைக்க முடியும். இப்படி செய்வதன் மூலம் தேவையான நேரங்களில் தேவையான நிதி கிடைப்பது உறுதி செய்யப்படும். காப்பீட்டாளர் முன்மொழிவை ஏற்க முடிவு செய்த பின்னரே காப்பீட்டு பிரீமியத்திற்கான தொகை டெபிட் செய்யப்படும். காப்பீட்டாளர் முன்மொழிவை ஏற்கவில்லை என்றால், குறிப்பிட்ட தொகையானது அன்பிளாக் செய்யப்பட்டு, ரிலீஸ் செய்யப்படும்.

இதுகுறித்து இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, இந்த புதிய உத்தரவு ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களின் நலன்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் பிஐஎம்ஏ-ஏஎஸ்பிஏ வசதிகளை தங்கள் வருங்கால மற்றும் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 1, 2025 அன்று அல்லது அதற்கு முன் வழங்க வேண்டும்!

இதேபோல யுபிஐ தொடர்பாக சமீபத்தில் அமலுக்கு வந்த முக்கிய மாற்றத்தை பொறுத்தவரை, கூகுள் பே ஆப் ஆனது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியிலான பில் பேமெண்ட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. அதாவது இரண்டு நபர்களுக்கு இடையேயான யுபிஐ வழியிலான பணபரிவர்த்தனை அல்லது ஒரு கடைக்காரருக்கு நீங்கள் செய்யும் வழக்கமான யுபிஐ பேமெண்ட்கள் ஆனது தொடர்ந்து இலவசமாக இருக்கும்.

ஆனால் கூகுள் பே ஆப் வழியாக டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பில் பேமெண்ட்களை செய்தால் - கட்டணம் வசூலிக்கப்படும். கூகுள் பே அறிவித்துள்ள இந்த புதிய மாற்றங்களின்படி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பில் பேமெண்ட்களுக்கு, அதன் இறுதி தொகையில் இருந்து 1% முதல் 5% வரை கட்டணம் வசூலிக்கப்படும். உதாணரணத்திற்கு உங்களுடைய மின் கட்டணம் ரூ.1,000 ஆக இருந்தால், அதில் 1 சதவீதம் (அதாவது ரூ.10) கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும் புதிய சிம் கார்டு வாங்குவது தொடர்வதாக, ஒரே நேரத்தில் 3 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இனிமேல் அனைத்து புதிய சிம் கார்டுகளுக்கும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமக்கப்பட்டு உள்ளது முன்னதாக வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட் போன்ற அரசாங்க அடையாள அட்டையின் கீழ் புதிய சிம் கார்டை வாங்க முடிந்தது.

ஆனால் இப்போது ​​ஒவ்வொரு புதிய சிம் கார்டு இணைப்புக்கும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு தேவைப்படுகிறது. புதிய சிம் கார்டுகளை விற்பனை செய்யும் டெலிகாம் ரீடெயில் விற்பனையாளர்கள் இந்த செயல்முறையை முடிக்காமல் சிம் கார்டுகளை விற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதோடு சேர்த்து, ஒவ்வொரு நபருக்கும் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் இந்த சிஸ்டம் ட்ராக் செய்ய உள்ளது மற்றும் வெவ்வேறு பெயர்களில் உள்ள மல்டிபிள் கனெக்ஷன்களும் சரிபார்க்கப்பட உள்ளது.

கடைசியாக "தேவைப்படும் பட்சத்தில்" புதிய சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படத்தை 10 வெவ்வேறு கோணங்களில் எடுத்து வழங்க வேண்டும். இப்படியாக புதிய சிம் கார்டு வாங்குவது தொடர்வதாக, ஒரே நேரத்தில் 3 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் போலியான விவரங்களின் கீழ் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New UPI Rules From IRDAI Now Users Can Block Funds in Bank Account Pay Premium Effect From March 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X