புது UPI ரூல்ஸ்.. பிப்.1 முதல் அமல்.. இனிமே Google Pay, PhonePe பணம் அனுப்ப இதுதான் வேணும்.. இல்லைனா போகாது!
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக யுபிஐ (UPI) மூலம் பணம் அனுப்பும் கஸ்டமர்களுக்கு என்பிசிஐ (NPCI) என்றழைக்கப்படுகிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) புது விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த தேதியில் இருந்து உங்களது யுபிஐ பரிவர்த்தனை ஐடியில் (UPI ID Transactions) இது இருந்தால், பணம் அனுப்ப முடியாது.
இதனால், பணம் போகாதா என்று யாரும் பதற்றம் அடைய வேண்டாம். உங்களது யுபிஐ பரிவர்த்தனை ஐடிக்கள் பெரும்பாலும் நீங்கள் பரிவர்த்தனை செய்யும் ஆப்களிலேயே உருவாக்கப்படுகின்றன. இதனால், உங்களது பரிவர்த்தனைக்கு எந்தவித சிக்கலும் இருக்காது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் இந்த விதிகளை கொண்டு வந்துள்ளது.

ஆகவே, ஒட்டுமொத்த யுபிஐ ஆப்கள் மற்றும் கஸ்டமர்களுக்கு இந்த விதிகள் பொருந்தும். யுபிஐ ஆப் மூலம் பணம் அனுப்புவதற்கு முக்கியமானதாக மொபைல் நம்பர் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை ஐடிக்கள் இருக்கின்றன. மொபைல் நம்பரை கொடுத்தால், யுபிஐ ஐடி தோன்றும், அதன் மூலம் பணம் அனுப்புதல் மற்றும் பெறுதலை செய்து கொள்ள முடிகிறது.
இந்த யுபிஐ ஐடிக்கள் பெரும்பாலும் அந்தந்த ஆப்கள் அல்லது பேங்குகள் மூலம் ஜெனரேட் செய்யப்படுகின்றன. ஆனால், அதை மாற்றி கொள்ள யுபிஐ கஸ்டமர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. இருப்பினும், கஸ்டமர்கள் அதில் மாற்றம் செய்யாமல் ஜெனரேட் செய்யப்பட்ட அதே யுபிஐ ஐடிக்கள் மூலமே பணத்தை அனுப்புதல் மற்றும் பெறுதலை செய்து வந்திருப்பார்கள்.
இவர்களுக்கே இப்போது புதிய விதிகள் வந்திருக்கிறது. இவர்கள் தங்களது யுபிஐ ஐடிக்களை மாற்ற வேண்டுமா என்று செய்திகள் வருகின்றன. ஆனால், அதுதான். இல்லை. பலர் அதில் குழப்பம் அடைகின்றனர். அதாவது, யுபிஐ ஐடி வேறு யுபிஐ பரிவர்த்தனை ஐடி வேறு. இதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், யுபிஐ பரிவர்த்தனை ஐடி ஜெனரேட் செய்யப்படும்போது, அதில் சிறப்பு எழுத்துக்கள் (Special Characters) இடம்பெற்றிருந்தால், அந்த பரிவர்த்தனைகள் நிகாரிக்கப்பட இருக்கிறது. இதனால், உங்களால் பணத்தை அனுப்ப முடியாமலும் பெற முடியாமலும் போகலாம்.
ஆகவே, எண்ணெழுத்து (Alphanumeric) என்று சொல்லப்படும் எழுத்துகள் மற்றும் நம்பர்கள் மட்டுமே அடங்கிய யுபிஐ பரிவர்த்தனை ஐடிக்கள் மூலம் மட்டுமே இனிமேல் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இதையே இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் இந்த விதிகளில் விளக்கி இருக்கிறது. ஆனால், யுபிஐ ஐடிக்களை போலவே பரிவர்த்தனை ஐடிக்களையும் ஆப் நிறுவனங்களே ஜெனரேட் செய்கின்றன. இதில் பெரும்பாலும் நம்பர்களில் மட்டுமே இடம்பெறுக்கின்றன. ஆகவே, இதனால் கஸ்டமர்கள் பணம் அனுப்பவதில் எந்த சிக்கலும் இருக்காது.
இதை யுபிஐ ஆப் நிறுவனங்கள் பார்த்து கொள்ளும். ஆகவே, வழக்கம்போல கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற எந்தவொரு யுபிஐ ஆப்கள் மூலம் பணத்தை அனுப்பி கொள்ளலாம். இதில் பெரும்பாலும் சிறப்பு எழுத்துக்கள் இடம்பெறாது. ஒருவேளை உங்களது பரிவர்த்தனை நிகாரிக்கப்பட்டால், உங்களது யுபிஐ பரிவர்த்தனை ஐடிக்களில் 26 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 0 முதல் 9 வரையிலான எண்கள் மட்டுமே இருக்கிறதா என்பதை பார்த்து கொள்ளுங்கள்.
இதை தவிர வேறு எந்த சிறப்பு எழுத்துக்கள் இருந்தாலும், அந்த பரிவர்த்தனை செய்ய முடியாது. புது யுபிஐ பரிவர்த்தனை செய்துகொள்ளுங்கள். அதில் வழக்கம்போல அனுப்பிக் கொள்ள முடியும். இந்த யுபிஐ பரிவர்த்தனை ஐடிக்களை கஸ்டமர்கள் மாற்ற முடியாது. ஆனால், யுபிஐ ஐடிக்களை மாற்றி கொள்ளலாம். இதை இப்போது மாற்ற வேண்டியது கிடையாது. இருப்பினும், யுபிஐ ஐடிக்களிலும் எதிர்காலத்தில் சிறப்பு எழுத்துகளுக்கு ஏதாவது மாற்றம் வரலாம். ஆகவே, இதை மாற்றுவது எப்படி என்று தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
யுபிஐ ஐடிக்களை மாற்றுவது எப்படி? கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற அனைத்து யுபிஐ ஆப்களிலும் ஒரே மாதிரியாகவே யுபிஐ ஐடிக்களை மாற்றி கொள்ளலாம். ஆகவே, கூகுள் பே ஆப் மூலம் எப்படி மாற்றுவது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். முதலில் கூகுள் பே ஆப்-ஐ ஓப்பன் செய்து வலது புறத்தின் மேலே இருக்கும் பேங்க் அக்கவுண்ட் டேப்பை கிளிக் செய்யுங்கள்.
இதில் எந்த பேங்குடன் உங்களது யுபிஐ ஐடிக்கள் இருக்கிறது என்பது காண்பிக்கப்படும். அதில் நீங்கள் மாற்ற விரும்பும் பேங்கின் யுபிஐ ஐடியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். பிறகு மேனேஜ் யுபிஐ ஐடிகள் (Manage UPI IDs) டேப் தோன்றும். இதை கிளிக் செய்தால், ஒவ்வொரு பேங்குடனும் 3 யுபிஐ ஐடிக்கள் ஜெனரேட் செய்யப்பட்டு இருக்கும். இதில்தான் நீங்கள் பரிவர்த்தனை செய்திருபீர்கள்.
இதில் ஏதாவது சிறப்பு எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தால், அதை டெலிட் செய்துவிடுங்கள். அப்போதுதான் புதிய யுபிஐ ஐடியை ஆட் செய்யும்படியான ஆப்ஷன் தோன்றும். அதில் நீங்கள் எழுத்துகள் மற்றும் எண்கள் மட்டுமே அடங்கிய யுபிஐ ஐடிக்களை உருவாக்கி கொள்ளுங்கள். அதன்பிறகு உடனேயே பணத்தை அனுப்பி கொள்ளலாம். ஏனென்றால், மொபைல் நம்பர் ஒன்றுதானே.


Click it and Unblock the Notifications








