புது ரூல்ஸ்.. ஆக.31 முதல் அமல்.. இனிமே 1,000 ரூபாயோ.. 5,000 ரூபாயோ.. வந்தது UPI-க்கு மாற்றம்.. என்ன மாறுது?
பேங்க் அக்கவுண்ட் மூலம் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), பீம் (BHIM) போன்றவற்றில் பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதியில் இருந்து புதிய விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய விதிகளால் என்னென்ன மாறப்போகிறது, முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்களில் (Pre-Sanctioned Credit Lines) இனிமேல் பரிவர்த்தனை எப்படி இருக்கும், பேங்குகள் இதை பின்பற்ற வேண்டுமா, உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த விதிகளை என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது அமலுக்கு கொண்டுவந்துள்ளது. இதன் விதிகள் மூலம் முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்களின் பரிவர்த்தனைகளை இனிமேல் யுபிஐ ஆப்கள் மூலமும் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

இதில் பி2பி பர்சன்-டூ-பர்சன் (P2P - Person-to-Person) பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல், பி2பிஎம் பர்சன்-டூ-ஸ்மால்-மெர்ச்சன்ட் (P2PM - Person-to-Small Merchant) பரிவர்த்தனைகளும் கொடுக்கப்படுகிறது. அதேபோல ஏடிஎம் மூலமும் பணம் எடுக்க முடியும். இந்த மூன்று யுபிஐ பரிவர்த்தனைகள் கிடைத்தாலே போதும், ஒட்டுமொத்த யுபிஐ பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.
அதாவது, வழக்கமாக பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை யுபிஐ ஆப்கள் மூலம் பயன்படுத்தும்போது, கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிவிட்டு, ஸ்கேன் & பே (Scan & Pay) செய்வோம். அதேபோல உங்களது மற்றொரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு செல்ஃப்-டிரான்ஸ்பர் (Self-transfer) செய்வோம். யுபிஐ ஐடிக்கு பணத்தை அனுப்புவோம்.
மேலும், யுபிஐ ஐடி இல்லாமல் பணத்தை அனுப்ப உங்களது கூகுள் பே, போன் பே அல்லது பேடிஎம் போன்ற ஏதாவது ஒரு ஆப் மூலம் பேங்க் அக்கவுண்ட் (Bank Account) நம்பர் மற்றும் ஐஎப்எஸ்சி (IFSC) கோட் ஆகியவற்றை கொடுத்து பணத்தை பரிமாற்றம் செய்வோம். இந்த ஒட்டுமொத்த யுபிஐ பரிவர்த்தனைகளையும் இனிமேல் கிரெடிட் லைன்களில் செய்யலாம்.

இந்த புதிய விதிகள் மூன்றாம் தர ஆப் புரொவைடர்களான (Third Party App Providers) யுபிஐ ஆப்களுக்கு மட்டுமல்லாமல், முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்களின் சேவையை கொடுக்கும் பேங்குகளும் (Banks) அமலாகி இருக்கின்றன. இதுபோக பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்களுக்கும் (Payment service Providers) இந்த விதிகள் அமல் செய்யப்பட்டுள்ளன.
ஆகவே, எந்தவொரு சிக்கலும் இல்லாமல், முன்-அனுமதிக்கப்பட்ட கிரெடிட் லைன்களை பெறும் கஸ்டமர்கள் அவர்களது பரிவர்த்தனைகளை கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் புதிய மாற்றத்தை கொண்டுவருகிறது.
அதாவது, ஆதார் கார்டு வாங்கிய பிறகு அதில் 10 வருடங்களுக்கும் மேல் எந்த அப்டேட்டையும் செய்யாமல் இருக்கும் நபர்களுக்கு இந்த மாற்றம் வர இருக்கிறது. இவர்கள் அடையாளச் சான்று (Identity Proof) மற்றும் முகவரி சான்று (Address Proof) ஆகியவற்றை ஆதார் போர்ட்டலில் அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு செப்டம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது.
அதற்கு பிறகு ரூ.50 கட்டணத்துடன் அப்டேட் செய்ய வேண்டி இருக்கும். ஆதார் அப்டேட் என்றாவுடன் பெயர் மாற்றம், மொபைல் நம்பர் மாற்றம் என்று நினைக்க வேண்டும். உங்களது அடையாளச் சான்றுகள் மற்றும் முகவரி சான்றுகள் ஆகியவற்றை அப்லோட் செய்தால் போதுமானது. பாஸ்போர்ட், பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு போன்றவற்றை அப்லோட் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








