Home
News

ஆகஸ்ட் 1 முதல்.. புதிய UPI ரூல்ஸ்.. நடைமுறைக்கு வருபவை என்னென்ன? இதோ முழு விவரம்..

ஆகஸ்ட் 1, 2025 முதல் கூகுள் பே (google pay), போன்பே (phonepe) பேடிஎம் என அனைத்து யுபிஐ (upi) பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த புதிய விதிகள் மூலம் பண பரிமாற்றங்களில் பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போது நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது தவிர்க்க முடியாது பயன்பாடாக வளர்ந்து விட்டது. மக்கள் தங்களது பாக்கெட்டில் இருந்து பணத்தைச் செலுத்துவதை விட ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்த விரும்புகிறார்கள். அதுவும் சிறிய கடைக்கு சென்று பொருள் வாங்கிய பின்பு பர்ஸ் எடுக்கும் காலம் மறைந்து கொண்டே வருகிறது.அண்ணா., Scan போர்ட் எங்கே இருக்கிறது என்ற கேள்வியானது கடை, ஹோட்டல்களில் பொதுவான வார்த்தையாக மாறிவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனையின் வளர்ச்சி என்பது அளப்பரியதாக இருக்கிறது.

ஆகஸ்ட் 1 முதல்.. புதிய UPI ரூல்ஸ்.. நடைமுறைக்கு வருபவை என்னென்ன?

இந்நிலையில் நாம் அதிகம் பயன்படுத்தும் யுபிஐ சேவைகளில் வரும் ஆகஸ்ட் மாதம் மிகப் பெரிய மாற்றங்கள் வர உள்ளன. அதுவும் வங்கி கணக்கு இருப்பு சரிபார்த்தல், பரிவர்த்தனை நிலையை (transaction status) உறுதி செய்தல், உங்கள் மொபைல் நம்பர் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளின் பட்டியல், ஆட்டோமேட்டிக் பணம் செலுத்தும் சேவை அனைத்திலும் புதிய விதிகள் வர உள்ளது.

ஒரு நாளில் 50 முறை மட்டுமே: வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகளில், ஒரே நாளில் 50 முறை மட்டுமே கணக்கு இருப்பு (Account Balance) பார்வையிட முடியும். அதாவது ஒவ்வொரு யுபிஐ செயலிகளிலும் 24 மணி நேரத்திற்கு உங்களுக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே பேங்க் பேலன்ஸ் பார்க்க அனுமதிக்கப்படும்.

அதாவது பல யுபிஐ செயலிகளில் தேவையற்ற முறையில் அடிக்கடி balance check request அனுப்புவதால், பின்னணி பரிமாற்ற முறையில் சுமை அதிகரிக்கிறது. இதனால் பண பரிமாற்றங்கள் தாமதமாகும். இதுதவிர சில நேரங்களில் system error-களும் வரும். எனவே இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க தான் இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்படுகிறது.

மொபைல் எண் + வங்கி கணக்கு: ஆகஸ் 1 2025 முதல் உங்களது மொபைல் எண் எந்த வங்கிக் கணக்குகளுடன்(linked accounts) இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும். அதாவது பல யுபிஐ செயலிகள் பின்னணி செயல்பாடுகளில் மீண்டும் மீண்டும் உங்கள் linked bank accounts-ஐ சரிபார்க்கும். இது சேவையை மெதுவாக்கும், backend-ல் அதிக சுமையை ஏற்படுத்தும். இதை தவிர்க்கும் வகையில், ஒரு நாளுக்கு 25 முறை என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை ஸ்டேட்டஸ்: சர்வீஸ் ப்ரோவைடர்கள் அல்லது வங்கிகள் மூலம் பரிவர்த்தனையின் நிலையைச் (Transaction Status) சரிபார்க்கும் எண்ணிக்கையை புதிய விதிகளின் படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இனி அதிகட்சம் 3 முறை மட்டுமே பரிவர்த்தனை நிலையைச் சரிபார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இதில் இரண்டு சரிபார்ப்பு முயற்சிகளுக்கிடையில் குறைந்தது 90 நொடிகள் இடைவெளி இருக்க வேண்டும்.

குறிப்பாக இது UPI சேவையகங்களில் அதிகளவு கோரிக்கைகள் வரும் பொழுது, சர்வர் திணறல் ஏற்படுவதைத் தடுக்கும். இதனால் transaction retry மற்றும் refund செயல்பாடுகள் சீராக நடைபெறும். பின்பு உங்கள் transaction வெற்றிகரமாக முடியும் என்று கூறப்படுகிறது.

Auto-Debit பணப்பரிவர்த்தனை: Auto-Debit என்பது உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானாக பணம் பிடிக்கப்படும் நடைமுறை ஆகும். அதாவது Netflix, Hotstar போன்ற ஓடிடி சந்தாக்கள், SIP முதலீடுகள், இஎம்ஐ, காப்பீடு கட்டணம் போன்றவை தானாக செலுத்தக் கூடிய கட்டணங்கள் ஆகும். வரும் ஆகஸ்ட் 1 முதல் இந்த ஆட்டோ டெபிட் முறையில் நேரம் மாற்றியமைக்கப்படும்

அதாவது காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் 5 மணி வரை, இரவு 9:30 மணிக்கு பிறகு ஆகிய நேரங்களில் மட்டுமே இனி பணம் பிடித்தம் செய்யப்படும்.எனவே இந்த நேரங்களுக்கு மட்டுமே ஆட்டோ டெபிட் பணம் செலுத்த முடியும் என்பதைக் கவனிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI rules from August 1: What will come into effect? Here are the full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X