Google Pay, PhonePe இருக்கா? ஏப்ரல் 1-ம் தேதிக்குள் இந்த வேலையை முடிங்க.. இல்லனா சிக்கல் தான்?
இந்தியாவில் யுபிஐ (UPI) சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக சில நொடிகளில் இந்த யுபிஐ மூலம் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. எனவே தான் நாடு முழுவதும் பல கோடி மக்கள் யுபிஐ சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe), பேடிஎம் (paytm) போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் வருகின்றன. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
யுபிஐ செயலிகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் குறிப்பிட்ட காலத்திற்கு செயல்பாட்டில் இல்லையென்றால் அவை வங்கி கணக்கில் இருந்து அகற்கப்படும் என்று இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) தெரிவித்துள்ளது. அதாவது உங்களது வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும். பின்பு கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ மூலம் நீங்கள் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது இது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதால் NPCI இந்த முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக செயலற்ற மொபைல் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அவை யுபிஐ அமைப்புகளுக்குள் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகளையும் ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் வங்கி கணக்கில் செயலற்ற மொபைல் இணைக்கப்பட்டிருந்தால் அது நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சில நேரங்களில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பழைய மற்றும் நிறுத்தப்பட்ட மொபைல் எண்களை புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், அந்த எண் முன்பு ஒரு வங்கிக் கணக்கு அல்லது UPI கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் அதன் தகவல்கள் புதிய நபரைச் சென்றடைய வாய்ப்பு உள்ளது. இது மோசடிக்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: அதாவது நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைந்திருக்கிறதா என்பதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் யுபிஐ மூலம் பணம் அனுப்பினால் சரியாகச் சென்றடையும்.
மேலும் செயலற்ற மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால் அதுவே மிகப் பிரச்சனையை ஏற்படுத்தும். முன்பு கூறியதை போல பழைய மற்றும் நிறுத்தப்பட்ட மொபைல் எண்களை புதிய வாடிக்கையாளர்களுக்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் கொடுத்திருக்கலாம். அப்படி இருந்தால் உங்களுக்கும் பிரச்சனை, அவர்களுக்கும் பிரச்சனை. எனவே இதை எல்லாம் கருத்தில் கொண்டு தற்போது செயலில் உள்ள மொபைல் நம்பரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக உங்களது வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலில் இல்லை என்றாலோ அல்லது சிறிது காலமாக ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலோ அந்த நம்பர் உங்களுடைய பெயரில் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா அல்லது எந்த ஆபரேட்டரை பயன்படுத்தியிருக்கிறீர்களோ அவர்களுடைய கஸ்டமர் கேருக்கு தொடர்பு கொள்ளலாம் என்பதை கவனத்தில் கொள்க.
எனவே வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் எந்த ஒரு செயலற்ற எண்களும் வங்கிக் கணக்கில் இணைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்த நடவடிக்கை மோசடியை குறைக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் தற்போது பல இடங்களில் செயல்படாத வங்கி கணக்குகள், செயல்படாத மொபைல் எண்களை பயன்படுத்தி தான் மோசடி சம்பவங்கள் நடக்கிறது.
கூகுள், போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்கள், உங்களுடைய மொபைல் நம்பர் செயலில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் UPI பரிவர்த்தனைகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர்வதை உறுதி செய்யும்.


Click it and Unblock the Notifications








