Home
News

புது UPI ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. ரூ.100 இல்ல.. ரூ.500 இல்ல.. பேங்குக்கு பணம் அனுப்ப இதுதான்.. என்ன மாறுது?

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) கொண்டு வந்துள்ள இந்த விதிகளில் பேங்குக்கு பணம் அனுப்பவதில் நேரடியாக மாற்றங்கள் வரப் போகிறது. இந்த விதிகளால் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? முழு விவரங்கள் இதோ.

யுபிஐ ஆப்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. பேங்க் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் தொகைகள் யுபிஐ ஆப்கள் மூலமே பெரும்பாலும் நடப்பதால், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதில் பல்வேறு விதிகளை கொண்டுவருகிறது. இப்போது, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் யுபிஐ டிரான்ஸ்பர் அவுட் விதிகளை (UPI Transfer Out Rules) அமலுக்கு கொண்டுவர இருக்கிறது.

புது UPI ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. ரூ.100 இல்ல.. ரூ.500 இல்ல.. என்ன?

இந்த விதிகள் யுபிஐ லைட் வாலெட்களை (UPI Lite Wallets) பயன்படுத்தும் பேங்க் கஸ்டமர்களுக்கு அமலாக இருக்கிறது. அதாவது, யுபிஐ லைட் வாலெட்டுக்கு பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து குறிப்பிட்ட தொகையை மாற்றி கொள்ளலாம். இந்த தொகையை வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், அதில் வாலெட்டில் இருக்கும் தொகையை திரும்பப் பெற முடியாது.

அதாவது, உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து அதற்கு பணத்தை மாற்றலாம், ஆனால், அதே பணத்தை அதில் இருந்து உங்களது பேங்க் அக்கவுண்ட்டுக்கு திரும்பப் பெற முடியாது. ஆகவே, அதை செலவு செய்ய வேண்டும். இல்லையென்றால், அப்படியே வைத்திருக்க வேண்டும். இதுவே இப்போதைய நடைமுறையில் இருக்கிறது. ஆனால், ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு அப்படியே மாற இருக்கிறது.

ஏனென்றால், யுபிஐ லைட் வாலெட்களில் இருக்கும் பணத்தை மீண்டும் பேங்க் அக்கவுண்ட்டுக்கு மாற்றும்படியான டிரான்ஸ்பர் அவுட் சேவையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வழங்க இருக்கிறது. ஆகவே, யுபிஐ லைட் வாலெட்டில் 100 ரூபாயோ 500 ரூபாயோ எவ்வளவு பணம் இருக்கிறதோ அதை மீண்டும் உங்களது பேங்க் அக்கவுண்ட்டுக்கு மாற்றி கொள்ளலாம்.

இந்த சேவையை வழங்குவதற்கு பேங்குகள் மற்றும் யுபிஐ லைட் வாலெட் சேவையை வழங்கும் கூகுள் பே, போன் பே, பேடிஎம், பீம் போன்ற ஆப்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, அடுத்த மாதம் முதல் இந்த டிரான்ஸ்பர் அவுட் விதிகள் அமலுக்கு வந்துவிடும்.

யுபிஐ லைட் வாலெட்டில் இருந்து அனுப்பப்படும் தொகையானது நேரடியாக உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து செல்லாது. வாலெட்டில் இருந்து மட்டுமே செல்லும். ஆகவே, தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பும்போது, இது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இதில் பரிமாற்றம் செய்யப்படும் தொகைக்கு வரம்புகள் இருக்கிறது.

அதாவது, உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து அதிகபட்சம் ரூ.5,000 பணத்தை யுபிஐ லைட் வாலெட்டுக்கு அனுப்பி கொள்ளலாம். இதில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.500 அனுப்பி கொள்ளலாம். இந்த வரம்பு முன்னதாக குறைவாக இருந்தது. யுபிஐ கஸ்டமர்கள் இதை அதிகமாக பயன்படுத்துவதால், வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதிலேயே இப்போது புதிய விதிகள் வருகின்றன.

ஆகவே, யுபிஐ லைட் வாலெட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் பேலன்ஸ் தொகையை மீண்டும் உங்களது பேங்க் அக்கவுண்ட்டுக்கு மாற்றி கொள்ள முடியும். ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு எவ்வளவு தொகையை வாலெட்டில் இருந்து பேங்க் அக்கவுண்ட்டுக்கு மாற்ற முடியும் என்ற விவரங்கள் தெரிய வரும். இந்த புதிய விதிகள் யுபிஐ கஸ்டமர்களிடையே வரவேற்பை பெறுவது உறுதியாகும்.

Best Mobiles in India

English summary
New UPI Rules From April 1 2025 For UPI Lite Users Withdraw Balance From Wallets To Bank Accounts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X