Home
News

புது UPI ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. 2 பேங்க் அக்கவுண்ட்.. 1 மொபைல் நம்பர்.. உடனே இத பண்ணிடுங்க.. இல்லனா என்ன?

பேங்க் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், யுபிஐ ஆப்களை பயன்படுத்தி வரும் கஸ்டமர்களின் வயிற்றிலும் புளியை கரைக்கும்படி என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது புதிய விதிகளை கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் பேங்கில் கொடுத்த உங்களது மொபைல் நம்பர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த விதிகள் என்ன சொல்கிறது? என்ன மாறப்போகிறது?

இந்த விதிகளின் படி பேங்குகள் மற்றும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற பேமெண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மொபைல் எண் ரத்து பட்டியலை (Mobile Number Revocation List) இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்திடம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதை ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து வாராந்திர முறையில் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புது UPI ரூல்ஸ்! ஏப்.1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட்.. மொபைல் நம்பர்!

இதில் துண்டிக்கப்பட்ட அல்லது சமர்பிக்கப்பட்ட மொபைல் நம்பர்கள் நீக்கப்பட இருக்கின்றன. அதாவது, பேங்குடன் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் நம்பர்கள் நீக்கப்பட இருக்கின்றன. 2 பேங்க் அக்கவுண்ட்களில் 1 மொபைல் நம்பரை கொடுத்துவிட்டு அதில் ஒரு பேங்கில் மொபைல் நம்பரை தொடர்ந்து பயன்படுத்தாமல் இருக்கும் கஸ்டமர்களுக்கும் இது பொருந்தும்.

இதன் மூலம் பேங்க் அக்கவுண்ட் அல்லது யுபிஐ ஆப்கள் மூலம் பயன்பாட்டில் இல்லாத மொபைல் நம்பர்கள் மூலம் நடக்கும் சிக்கல்கள் தவிர்க்கப்பட இருக்கிறது. அதே நேரத்தில் பேங்குகள் மற்றும் பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் மூலம் பயன்பாட்டில் இல்லாத மற்றும் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட மொபைல் நம்பர்களை தொடர்ந்து சமர்பிக்க இருக்கின்றன.

இதனால், பேங்க் சேவைகள் மற்றும் யுபிஐ ஆப்களின் சேவைகளை புதுப்பிக்கப்பட்ட மொபைல் நம்பர்களில் இருந்து மட்டுமே பெறப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மொபைல் நம்பர்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. ஆகவே, பணப் பரிவர்த்தனைக்குக்கு பயன்படுத்தும் மொபைல் நம்பர்களில் கஸ்டமர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

உங்களது பேங்கில் இருந்து பயன்படுத்தாத மொபைல் நம்பரை புதுப்பிக்குமாறு உங்களுக்கு கோரிக்கைகள் வந்தால், அதை செய்து உடனே முடித்து விடுங்கள். இல்லையென்றால், மொபைல் நம்பர் பயன்பாட்டில் இல்லை என்று நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்களது கவனத்துக்கு அது கொண்டுவரப்படும் என்பதால் அப்போதே அதை செய்து முடித்துவிடுங்கள்.

இந்த மொபைல் நம்பர் நீக்கம் கொண்டுவரப்படுவதற்காக காரணம் என்னவென்றால், பயன்பாட்டில் இல்லாத மொபைல் நம்பர் மூலம் இணைக்கப்பட்ட பேங்குகள் மற்றும் யுபிஐ ஆப்களுக்கு பணம் அனுப்பப்படும்போது ஏற்படும் சிக்கலை இது தவிர்க்கிறது. அதே நேரத்தில் பேங்குகள் மற்றும் யுபிஐ ஆப்கள் மூலம் தொடர்ந்து மேப் செய்யப்பட்ட நம்பர்கள் மூலம் மட்டுமே இனி பரிவர்த்தனைகள் நடக்கும்.

ஆகவே, பரிவர்த்தனைகளை செய்யும்போது, சம்பந்தப்பட்ட நம்பர் பயன்பாட்டில் இல்லை என்பது உறுதி செய்யப்படும். இதன் மூலம் தேவையற்ற பரிவர்த்தனைகள் தவிர்க்கப்படும். இனிமேல் மொபைல் நம்பர் சீடிங் (Seeding) அல்லது போர்ட்டிங் (Porting) ஆகியவற்றில் கஸ்டமர்களுக்கு புது வழிகாட்டுதல்கள் வர இருப்பதை இந்த புதிய விதிகள் உறுதி செய்திருக்கின்றன.

இதேபோல இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தில் யுபிஐ டிரான்ஸ்பர் அவுட் விதிகளும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகள் மூலம் யுபிஐ வாலெட்டில் பேங்கில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட்ட தொகையை மீண்டும் அதே பேங்குக்கு மாற்றி கொள்ள முடியும். இதனால், தேவைப்படும்போது பணத்தை எளிதாக பேங்கில் சேமித்து கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New UPI Rules From April 1 2025 For Banks To Remove Mobile Numbers Disconnected or Surrendered
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X