புது UPI ரூல்ஸ்.. ஆக.1 முதல் அமல்.. உங்க பேங்க் பேலன்ஸ்.. 1 நாளுக்கு லிமிட்.. பரிவர்த்தனையில் வருது மாற்றம்!
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புது யுபிஐ விதிகளை (New UPI Rules Form August 1) அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகள் மூலம் பேங்க் பேலன்ஸ், பரிவர்த்தனை ஸ்டேட்டஸ், ஆட்டோபே, மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் போன்றவற்றில் லிமிட் கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த புதிய யுபிஐ விதிகளால் என்னென்ன மாற இருக்கிறது? விவரங்கள் இதோ.
யுபிஐ பரிவர்த்தனைகள் பொட்டிக்கடைகள் முதல் சூப்பர் மார்கெட்டுகள் வரையில் வந்துவிட்டன. ஒரு செகண்ட்டுக்கு 7,000 பரிவர்த்தனைகள் நடப்பதாக என்பிசிஐ (NPCI) உறுதிப்படுத்துகிறது. ஆகவே, ஒரு நிமிடத்துக்கு அல்லது ஒரு மணி நேரத்துக்கு எத்தனை பரிவர்த்தனைகள் நடக்கும் என்பதை நினைத்து பாருங்கள். இதனாலேயே அதில் பல்வேறு விதிகள் அமலுக்கு வருகின்றன.

இப்போது, பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்களாக (Payment Service Providers) இருக்கும் யுபிஐ ஆப்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதில் பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்பு, பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு, மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் லிஸ்ட், ஆட்டோபே மேன்டேட் ஆகியவற்றில் லிமிட் இருக்கிறது.
இந்த லிமிட் மூலம் பணம் அனுப்புதலில் லிமிட் இருக்குமா என்றால், அதுதான் கிடையாது. பணத்தை அனுப்பிய பிறகோ அல்லது பெற்ற பிறகோ அந்த பரிவர்த்தனை தொடர்பான ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளவே லிமிட் வர இருக்கிறது. ஆகவே, இந்த குறிப்பிட்ட லிமிட்டுக்கு மேல் பேலன்ஸ் சரிபார்ப்பு போன்றவற்றை செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது.
பேலன்ஸ் சரிபார்ப்பு லிமிட் (Balance Enquiry Limit): கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பீம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் பேங்க் பேலன்ஸை சரிபார்க்க வேண்டுமானால், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு 24 மணி நேரத்துக்கு 50 முறை மட்டுமே பார்க்க முடியும். இது ஒவ்வொருக்கு ஆப்-க்கும் தனித்தனியே பொருந்தும். ஆகவே, கூகுள் பே மூலம் 50 முறை, போன்பே மூலம் 50 முறை என்று பார்க்கலாம்.
பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு லிமிட் (Transactions Status Check Limit): பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள்/பேங்குகள் மூலம் 2 மணி நேரத்துக்கு 3 முறை பரிவர்த்தனை ஸ்டேட்டஸை சரிபார்த்து கொள்ளலாம். இதை குறைந்தது 90 நொடிகள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். அதேபோல பரிவர்த்தனையை முடித்த பிறகு 45 முதல் 60 நொடிகள் வரையில் நேரம் கொடுத்து சரிபார்க்கலாம்.
லிஸ்ட் அக்கவுண்ட் லிமிட் (List Account Limit): உங்கள் மொபைல் எண்ணுடன் எந்தெந்த அக்கவுண்ட் புரொவைடர் இணைக்கப்பட்டுள்ளன என்பதை சரிபார்க்க ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் லிமிட் வர இருக்கிறது. ஆகவே, ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஆனால், ஒரு யுபிஐ ஆப் மூலமும் 25 முறை கிடைக்கும் என்பதால் பல்வேறு முறை சரிபார்த்து கொள்ளலாம்.
ஆட்டோபே மேன்டேட் லிமிட் (Autopay Mandate Limit): நெட்பிளிக்ஸ், எஐபி போன்வற்றில் மாதம் மாதம் ஆட்டோபே மூலம் பணம் செலுத்தும்போது, நன்-பீக் ஹவர்களில் (Non-peak Hours) மட்டுமே பேமெண்ட்டுக்கு அனுமதி கொடுக்கப்படும். ஆகவே, காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9.30 மணிக்குப் பிறகு பேமெண்ட் செய்து முடிக்கப்படும்.


Click it and Unblock the Notifications